புது ரூல்ஸ்.. ஏப்.1 முதல் அமல்.. ரூ.50,000 லிமிட் முடிந்தது.. பேங்க் அக்கவுண்ட் இருப்பவர்களுக்கு புது லிமிட்!

By Harihara Sudhan

பேங்க் அக்கவுண்ட் வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமல் செய்யப்பட உள்ளன. புதிய லிமிட் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பரிவர்த்தனைகளை செய்ய வேண்டி இருக்கும். பான் கார்டு வைத்து பரிவர்த்தனை செய்யும்போதும் புதிய லிமிட் அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய விதிகளால் பேங்க் கஸ்டமர்களுக்கு என்னென்ன மாற இருக்கிறது?

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் எஸ்பிஐ பேங்க் கஸ்டமர்கள் மற்றும் ரூ.50,000 மேல் பரிவர்த்தனைகளை செய்ய பான் கார்டு பயன்படுத்தி வரும் ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கும் இந்த புதிய விதிகள் பொருந்தும். முதலில் எஸ்பிஐ பேங்க் கஸ்டமர்களுக்கு ரிவார்ட் பாயிண்ட்ஸ் ரிடெம்ப்ஷன் (Reward Points Redemption) விதிகளில் மாற்றங்கள் வர இருக்கின்றன. மாதாந்திர லிமிட் கொண்டு வரப்பட உள்ளது.


New PAN Rules From April 1 2026

எஸ்பிஐ கார்டு வைத்து இருப்பவர்கள் மாதத்துக்கு அதிகபட்சம் 60,000 ரிவார்ட் பாயிண்ட்களை மட்டுமே ரீடெம்ஷன் செய்ய முடியும். 80,000 ரிவார்ட் பாயிண்ட்கள் இருந்தாலும் 60,000 ரிவார்ட் பாயிண்ட்களுக்கு மட்டுமே ரிடெம்ப்ஷன் அனுமதி கிடைக்கும். ஆகவே, மீதமுள்ள பாயிண்ட்களை ரிடெம்ப்ஷன் செய்ய அடுத்த மாதம் வரையில் காத்திருக்க வேண்டும். இது சில கார்டுகளுக்கு மட்டும் பொருந்தாது.

ஏர் இந்தியா எஸ்பிஐ சிக்னேச்சர் கார்டு (Air India SBI Signature Card), போன்பே எஸ்பிஐ கார்டு பர்பிள் (PhonePe SBI Card PURPLE) மற்றும் போன்பே எஸ்பிஐ கார்டு செலக்ட் பிளாக் (PhonePe SBI Card SELECT BLACK) ஆகிய கார்டுகளுக்கு பொருந்தாது. மேலும், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கான ஸ்டேட்மென்ட் கிரெடிட் ரிடெம்ப்ஷனை 4,000 ரிவார்டு பாயிண்ட்களில் மட்டுமே செய்ய முடியும்.

அதாவது, ஸ்டேட்மென்ட் கிரெடிட் ரிடெம்ப்ஷனை செய்ய 4,000 பாயின்ட்களின் மடங்குகளை எடுத்து கொள்ள வேண்டும். ஆகவே, 4,000 அல்லது 8,000 அல்லது 16,000 போன்ற 4,000 பாயின்ட்களின் மடங்குகளில் ரிடெம்ப்ஷன் செய்து கொள்ளலாம். இந்த 4,000 மடங்குகள் விதிகளும் ஏர் இந்தியா எஸ்பிஐ சிக்னேச்சர் கார்டு உள்ளிட்ட மூன்று கார்டுகளுக்கு பொருந்தது.

பேங்க் பரிவர்த்தனை செய்யும்போது பான் கார்டு பயன்படுத்துவதிலும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. பேங்குகள், கோஆப்ரேடிவ் பேங்குகள் மற்றும் தபால் நிலையங்களில் பணத்தை டெபாசிட் செய்யும்போது ரூ.50,000 மேல் சென்றால் பான் கார்டு விவரங்கள் கேட்கப்படுகிறது. இந்த ரூ.50,000 லிமிட் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரூ.10 லட்சமாக அதிகரிக்கபடும்.

அசையா சொத்து வாங்குதல் மற்றும் விற்றல் ஆகியவற்றின்போதும் ரூ.10 லட்சம் லிமிட்டுக்கு பான் கார்டு விவரங்களை கொடுக்க வேண்டும். இந்த லிமிட் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிப்படும். ஒரு நிதிாண்டில் ரூ.10 லட்சம் பணத்தை ரொக்கமாக எடுத்தால் பான் கார்டு விவரங்களை கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. ரூ.10 லட்சத்துக்கு மேல் பணத்தை எடுத்தால் பான் விவரங்களை கொடுக்க வேண்டும்.

ஆகவே, ரூ.50,000 லிமிட் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் முடிய இருக்கிறது. ஆர்பிஐ என்று அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா இந்த பான் கார்டு விதிகளை அமலுக்கு கொண்டு வருகிறது. ரிவார்ட் பாயிண்ட்ஸ் ரிடெம்ப்ஷன் விதிகளை எஸ்பிஐ என்று அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அமலுக்கு கொண்டு வருகிறது. முன்னதாக எஸ்பிஐ பேங்க் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்தியது.

ரூ.25,000 மேல் ரூ.1,00,000 வரை ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை செய்யும்போது ரூ.2 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணத்தை விதித்தது. கிளை சேனல் வழியாக இந்த பரிவர்த்தனைகளை செய்தாலும் ரூ.4 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணத்தை விதித்தது. ஆகவே, ரூ.25,000 தொகைக்கு உள்ளாக எந்த கட்டணமும் இல்லை. ஆனால், அதற்கு மேல் உள்ளது. இந்த விதிகள் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டன.

Credit: Gizbot

Story first published: Sunday, March 1, 2026, 22:18 [IST]
Desktop Bottom Promotion