Latest Updates
-
பீட்ரூட் தோசையும், புதினா சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 01 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நீண்டநாள் ஆசை நிறைவேறப்போகுதாம் -
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
தேவயானியின் கணவர் அரைவேக்காடு.. போன ஜென்மத்தில் செய்த பாவம்.. பிரபலம் பேட்டி
சென்னை: தேவயானியின் கணவரும், இயக்குநரும், நடிகருமான ராஜகுமாரன் கடந்த சில நாட்களாக அளித்து வரும் பேட்டியில் இயக்குநர் மகேந்திரனின் படத்தை நான் பார்த்ததே இல்லை, கமல் பல படங்களில் நடித்து இருந்தாலும், ஒரு சில படம் தான் நல்ல படம் என்றும், ரஜினி, கமல், விக்ரம் என அனைவர் பற்றியும் மோசமாக பேசி உள்ளார். இது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கும் நிலையில் பலரும் ராஜகுமாரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, சினிமா மூத்த பத்திரிக்கையாளர் வெங்கடேஷ் Public Wing யூடியூப் சேனலுக்கு அளித்து இருக்கும் பேட்டியில், தமிழ் சினிமாவின் லெஜன்ட் என்று அனைவரும் கொண்டாட கூடிய ஒரு இயக்குனர் மகேந்திரன் அவரைப் பற்றி தேவையில்லாமல் பல விஷயங்களை பேசி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் 40 வருடமாக, மகேந்திரன் படத்தை நான் பார்த்ததே இல்லை என சொல்கிறார். ஒரு படத்தை பார்க்காமல் இவர் எப்படி அந்த படத்தை பற்றி விமர்சனம் செய்ய முடியும். அதுவும், அனைவரும் கொண்டாட கூடிய இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் உருவான உதிரி பூக்கள் திரைப்படத்தை எப்படி விமர்சனம் செய்யலாம். அவரை மட்டுமில்ல, வெற்றிமாறன், பாலா எல்லாம் இயக்குனர்களா என கேட்டு இருக்கிறார். இவர்கள் இயக்குனர் இல்லை என்றால், வேறு யார் தான் இயக்குனர்கள்.

ராஜகுமாரன் அரைவேக்காடு: ஒரு அரைவேக்காடு என்ன பேசுமோ அதை தான் ராஜகுமாரன் பேசி வருகிறார். இயக்குனர் சங்கம் ராஜகுமாரனை அழைத்து, பல இயக்குனர்களை பற்றி தேவையில்லாமல் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள், இதெல்லாம் சரி இல்லை என எச்சரிக்கை வேண்டும். அதுவும் தமிழ் சினிமாவின் லெஜன்ட் என்று அனைவரும் கொண்டாட கூடிய மகேந்திரனை பற்றி பேசுவதற்கு ராஜகுமாரனுக்கு என்ன தகுதி இருக்கிறது.
இவர் இயக்குநரா?: ராஜகுமாரன் விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்த திரைப்படத்தில் விக்ரம், சரத்குமார் இருவரையும் மிகவும் கேவலப்படுத்தி இருப்பார். சரத்குமார், விக்ரம் என இரண்டு மிகப்பெரிய நடிகர்கள் இருந்த போதும் தேவயானியை மட்டுமே 'போக்கஸ்' செய்து படத்தை எடுத்து இருந்தார். அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தது. தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி அந்த படத்தின் மூலம் 5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி இருந்தார். அப்படிப்பட்ட ஒரு மோசமான படத்தை எடுத்தவர் தான் ராஜகுமாரன் அவர் மற்ற இயக்குனர்களை பற்றி பேசலாமா?
பாவம் தேவயானி: தேவயானி ரொம்ப பாவம் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். ராஜகுமாரன், ஏதோ இயற்கை முறையில் விவசாயம் செய்கிறேன் என சோப்பு, ஷாம்புகளை விற்று வருகிறார். அதை நல்லபடியாக விற்பனை செய்து தேவயானிக்கு ஏதாவது பண உதவி செய்யலாம். அதை விட்டுவிட்டு தேவை இல்லாததை பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். தேவயானி போல ஒரு நடிகையை பார்க்க முடியாது, மிகவும் தன்மையான நடிகை, எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ தெரியவில்லை ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டு கஷ்டப்பட்டு கொண்டு வருகிறார்.
ராஜகுமாரன் ஒரு அரைவேக்காடு அவரை தூக்கித் தான் எரிய வேண்டும் என பத்திரிக்கையாளர் வெங்கடேஷ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
Credit: Filmibeat



Click it and Unblock the Notifications