தொடர்ந்து உயரும் தங்கம் விலை!! மாத்தி யோசிக்கும் மக்கள்!! நகை கடைகள் வெளியிடும் ஷாக் ரிப்போர்ட்!!

By Devika Manivannan

2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரையிலான இந்த 11 மாத காலங்களில் தங்கத்தின் விலை 60 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருக்கிறது. தங்கத்தின் இந்த விலை உயர்வு தங்க நகைகளின் விலையையும் கணிசமான அளவு உயர்த்தி இருக்கிறது. தற்போதைக்கு 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் கூட தங்கத்தின் விலை, செய்கூலி சேதாரம், ஜிஎஸ்டி சேர்த்து 1,15,000 ரூபாய் வரை தேவைப்படும்.

தங்கத்தின் இந்த விலை உயர்வால் தங்க நகைக்கான டிமாண்ட் குறைந்துவிடும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் நிலவரம் வேறாக இருக்கிறது. தற்போது இந்தியாவில் திருமண சீசன் தொடங்கிவிட்டது. 40 லட்சத்திற்கும் அதிகமான திருமணங்கள் நடக்கலாம் என சொல்லப்படுகிறது. எனவே தங்க நகைகள் அதிகம் விற்பனையாகும் காலம் இது. தங்கத்தின் விலை உயர்ந்த இருக்கக்கூடிய இந்த சூழலில் தங்க நகை விற்பனை எப்படி இருக்குமோ என நகை கடை நிறுவனங்கள் அச்சத்துடன் இருந்த நிலையில் தான் மக்கள் மாற்று யோசிக்க தொடங்கியுள்ளனர்.


Gold Wedding jewellers

தங்கத்தின் விலை உயர்ந்தாலும், அதிகமான மக்கள் நகை கடைக்கு வருகை தருகிறார்கள் என நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் முன்பை போல 22 கேரட் தங்கத்தை வாங்காமல் 18, 14 கேரட் தங்க நகைகளை வாங்க முன் வருவதாக தெரிவிக்கின்றனர். தற்போது 18 மற்றும் 14 கேரட் தங்கத்திற்காக டிமாண்ட் அதிகரித்து இருப்பதாகவும் நகைக்கடை நிறுவனங்கள் கூறுகின்றன.

டிட்வா புயலை விட வேகம் காட்டும் தங்கம் ,வெள்ளி விலை!! கிராம் ரூ.13,000ஐ கடந்ததால் மக்கள் அதிர்ச்சி!!

22 கேரட் தங்கத்திலேயே லைட்வெயிட் நகைகளுக்கு டிமாண்ட் இருக்கிறதாம். அதே வேளையில் வைர நகைகளை வாங்கும் போக்கும் குறைந்திருப்பதாக நகைக்கடை நிறுவனங்கள் கூறுகின்றன . தற்போது 22 கேரட்டுக்கு மாற்றாக 18 மற்றும் 14 கேரட் நகைகளை வாங்கினாலும் தங்கத்தின் விலை அதிகமாக இருப்பதால் நாம் வாங்கக்கூடிய விலைக்கான ரீசேல் வேல்யூ அதற்கு இருக்கிறது என இந்திய தங்க நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் சுரேந்திரா தெரிவிக்கிறார் .


இந்தியாவில் 18 கேரட் தங்கம் 10 கிராமின் மதிப்பு 94,000 ரூபாய்க்கு விற்பனை விற்பனை செய்யப்படுகிறது , 14 கேரட் தங்கம் 73 ,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . மூன்று சதவீத ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேதாரம் ஆகியவற்றை கழித்தாலும் கூட தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் இவற்றின் ரீசேல் வேல்யூவும் அதிகமாக தான் இருக்கிறது என்பதே மக்கள் இவற்றை நோக்கி வருவதற்கு காரணம் எனகிறார்.

சென்கோ கோல்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குனர், மக்களிடம் தங்கத்திற்கான டிமாண்ட் குறையவே இல்லை என்கிறார், இந்த திருமண சீசனில் வைர நகைகளை விட தங்க நகைகள் அதிகம் விற்பனை செய்வதை பார்க்க முடிகிறது என கூறுகிறார் . உலகளவில் பல மாதங்களாக வைரம் விலை மாறாமல் தேங்கிவிட்டது. எனவே தான் யாரும் அதனை வாங்க முன் வருவதில்லை என்கிறார்.

சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடக்க போகும் தங்கம்!! 2026இல் பெரிய ஆட்டம் காத்திருக்கு!!

இந்தியாவில் ஒரு கேரட் வைரத்தின் விலை 1.75 லட்சத்திலிருந்து 2.25 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் திருமண சீசனில் வைர நகைகளுக்கான தேவை என்பதுய குறைந்துவிட்டது , தங்கத்தின் விலை உயர்வதால் மக்கள் அதிகம் தங்கத்தை தான் வாங்குவதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனர் , குறிப்பாக 18 கேரட் தங்க நகைகள் விற்பனை அமோகமாக இருக்கிறது என்கிறார் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ரமேஷ் கல்யாணராமன் .

நவராத்திரி முதல் தீபாவளி வரையிலான பண்டிகை காலத்தில் வைர நகைகளுக்கு நல்ல டிமாண்ட் இருந்தது ஆனால் இந்த திருமண சீசனில் தங்க நகைகளுக்கு தான் டிமாண்ட் இருக்கிறது என ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பேபி ஜார்ஜ் கூறுகிறார். எது எப்படி இருந்தாலும் இந்தியர்களுக்கும் தங்கத்துக்குமான பிணைப்பு ஒரு போதும் நீங்காது, எவ்வளவு தான் விலை உயர்ந்தாலும் மக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்த மாட்டார்கள் நம் கலாச்சாரமும் அதற்கு இடம் கொடுக்காது என்பதையே இது காட்டுகிறது.

Credit: Goodreturns

Story first published: Saturday, November 29, 2025, 11:42 [IST]
Desktop Bottom Promotion