Latest Updates
-
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ பெரியசாமி மகள் இந்திரா வீட்டில் ரெய்டு.. கோவையில் இருந்து வந்த டீம்
திண்டுக்கல்: தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி மகள் இந்திரா வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை இன்று பிற்பகல் திடீரென வந்து சோதனை நடத்தினார்கள். கோவையில் இருந்து ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஐந்து பேர் கொண்ட குழுவினர் வந்து சோதனை நடத்தினார்கள். தகவல் அறிந்து இந்திராவின் வீட்டின் முன்பு திமுக கட்சித் தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், தி.மு.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா துவாரக நாதன். இவரது கணவர் பெயர் துவாரக நாதன். இவர்கள் குடும்பத்துடன் திண்டுக்கல் ஆர் எம் காலணி அருகே உள்ள செவாலியர் சிவாஜி நகரில் வசித்து வருகின்றனர். இந்திராவின் சகோதரர் தான் ஐ.பி. செந்தில்குமார். இவர் பழனி சட்ட மன்ற உறுப்பினர் ஆவார்.

இன்று பிற்பகல் சோதனை
இந்நிலையயின் இந்திராவின் வீட்டில் இன்று 21.11.25 மதியம் 1:30மணி அளவில் கோவையில் இருந்து ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஐந்து பேர் கொண்ட குழு இரண்டு இனோவா கார்களில் இந்திராவின் வீட்டிற்கு வருகை தந்தனர். பின்னர் வீட்டுக்குள் சென்று சோதனை மேற்கொண்டனர், இந்த சோதனை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்தது. தகவல் அறிந்து இந்திராவின் வீட்டின் முன்பு திமுக கட்சித் தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
ஆகஸ்ட் மாதம் நடந்த சோதனை
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சர் ஐ பெரியசாமி இல்லம், அமைச்சர் மகனும் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஐபி செந்தில்குமார் வீடு மற்றும் இந்திரா வீடு, மற்றும் 3 வர்த்தக நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தது. தற்போது ஜிஎஸ்டி அதிகாரிகள் வந்து சோதனை நடத்தியுள்ளனர்.
திண்டுக்கல்லில் ஒரே நாளில் ஐந்து லட்சத்தை இழந்த லாவண்யா.. எந்த குழந்தைகளும் பார்க்கக்கூடாத கோலம்
இந்திரா யார்
அமைச்சர் ஐ பெரியசாமியின் மகள் இந்திரா துவாரக நாதன் திண்டுக்கல் நகரில் தொழில் அதிபராக இருக்கிறார். இவர் ஒரு டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் தனது தயாரிப்புகளை, குறிப்பாக ஆயத்த ஆடைகளை மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இதுவரை புதிய ரேஷன் கார்டு வாங்காதவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வாங்கினால் நிச்சயம் இரண்டு நன்மை
சோதனை ஏன்
எதற்காக சோதனை... சோதனையின் முடிவில் என்ன நடந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அதிகாரிகள் அறிவித்தால் மட்டுமே முழு விவரம் தெரியவரும். ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு என்பது வரி ஏய்ப்பு, வரி விலக்கு மோசடி போன்றவற்றை விசாரிக்கும் ஒரு துறையாகும். இந்த துறை தான் இன்று சோதனை நடத்தியுள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 15ம்தேதி நடந்த அமலாக்கத்துறை சோதனையின் போது, இந்திரா துவாரக நாதனின் வீட்டில் மட்டும் சுமார் 15 மணி நேரம் சோதனை நடந்தது.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications
