Latest Updates
-
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன?
எதற்கெடுத்தாலும் ரூ.500 நோட்டை நீட்டும் மக்கள்!! இந்தியாவில் அதிகரிக்கும் புதிய சிக்கல்!!
இந்தியாவில் முன்பை விட மிக அதிகமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. யுபிஐ செயலி வாயிலாக ஒரு மொபைல் நம்பர் அல்லது கியூ ஆர் கோடு குறியீடு இருந்தாலே போதும் யாருக்கு வேண்டுமானாலும் நாம் பணம் அனுப்பிக் கொள்ள முடிகிறது. ஒரு சிறிய பூக்கடையில் தொடங்கி ஒரு பெரிய கடையில் சென்று நகை வாங்குவது வரை என அனைத்து இடங்களிலும் யுபிஐ மூலம் பணம் செலுத்துவது என்பது எளிமையானதாக மாறிவிட்டது.
டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும் சூழலில் இது மற்றொரு புதிய சிக்கலையும் எழுப்பி இருக்கிறது. பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறிய நிலையில் இன்னமும் பணமாக பயன்படுத்தும் இடங்களில் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏடிஎம்மில் நாம் பணம் எடுத்தால் கூட பெரும்பாலும் நமக்கு 500 ரூபாய் நோட்டுகள் தான் வருகின்றன. அரிதாக 100 ரூபாய் நோட்டுகள் கிடைக்கின்றன.

இந்தியாவில் தற்போது 500 ரூபாய் நோட்டுகள் முப்பது லட்சம் கோடிக்கு மேல் புழக்கத்தில் உள்ளன. 200 ரூபாய் நோட்டுகள் 5 லட்சம் கோடிக்கு கீழ் தான் புழக்கத்தில் உள்ளன. 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளும் 5 லட்சம் கோடி என்ற எண்ணிக்கையில் தான் புழக்கத்தில் உள்ளன.
இதன் காரணமாக மக்கள் கைகளில் 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகமாகி இருக்கிறது. இந்த அதிக மதிப்பு கொண்ட நோட்டுகள் புழக்கம் அதிகமாகி இருப்பது சிறு தொழில் செய்பவர்கள் மற்றும் வணிகர்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது மக்கள் கடைக்கு வந்து ஒரு சிறிய பொருளை வாங்கினால் கூட 500 ரூபாயை நோட்டை தான் நீட்டுகிறார்கள், அவர்களுக்கு திரும்ப வழங்க 50, 20, 10 ரூபாய் நோட்டுகள் இருப்பதில்லை என புலம்புகின்றனர் வணிகர்கள்.
அதாவது சில்லறை பணம் கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர். 10, 20, 50 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் குறைந்து இருப்பது சிக்கலை தந்திருக்கிறது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது. அதாவது குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை அதிகரிக்க ஒரு திட்டத்தை தீட்டியுள்ளது.
வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்!! பட்ஜெட் முடிந்த உடன் RBI வெளியிட இருக்கும் குட் நியூஸ்
இதன் ஒரு பகுதியாக வழக்கமாக 100 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்யும் ஏடிஎம்களுக்கு பதிலாக 10, 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்யக்கூடிய ஹைபிரிட் ஏடிஎம்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. அதே வேளையில் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை குறைந்த மதிப்பு கொண்டு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளும் வகையில் ஹைபிரிட் ஏடிஎம்களை அமைக்கவும் ஆலோசனை நடத்தி வருகிறதாம்.
தங்கம், வெள்ளி விலை: சாமானியர்களுக்கு விழுந்த பேரிடி!! நாளைக்கு பெரிய சூறாவளியே காத்திருக்கு!!
அதாவது உங்கள் கையில் 500 ரூபாய் இருக்கிறது என்றால் இந்த ஹைபிரிட் ஏடிஎம்-இல் செலுத்தி விட்டால் 500 ரூபாய்க்கு மாற்றாக 10,20, 50 ரூபாய் நோட்டுகளாக உங்களுக்கு திரும்ப கிடைக்கும். குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கும் முன்மாதிரி ஏடிஎம் தற்போது மும்பையில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய போக்குவரத்து மையங்கள், சந்தைகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் அமைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கு ஏற்ற வகையில் குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் அச்சிடும்படி ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றன.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications
