Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...! -
தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல்வாதிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் தெரியுமா? -
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏன் இளநீர் அரசியல் தலைவர்களின் விருப்பமான பானமாக உள்ளது தெரியுமா?
ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை!! சவரனுக்கு ரூ.1600 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி!!
சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் தடாலடியாக உயர்ந்திருப்பது சாமானிய மக்களுக்கு கண்ணீரை வரவழைத்து இருக்கிறது. சென்னையில் கடந்த இரண்டு வாரமாகவே தங்கத்தின் விலை இரண்டு நாட்கள் ஏறுவது ஒருநாள் குறைவது என ஏற்ற இறக்கத்துடன் தான் இருந்து வருகிறது.
வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் குறைந்தது. எனவே இந்த வாரம் முழுவதுமே இதே நிலைதான் நீடிக்கும் தொடர்ந்து தங்கம் விலை குறையும் என மக்கள் எண்ணி இருந்தனர். இந்த சூழலில் தான் இன்றைய தினம் தங்கத்தின் விலை திடீரென உயர்ந்து அதிர்ச்சியை தந்திருக்கிறது .

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. நேற்று சென்னை ஒரு கிராம் தங்கம் 11,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்று கிராமுக்கு 200 ரூபாய் விலை உயர்ந்து 11,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் 1200 ரூபாய் விலை உயர்வு கண்டுள்ளது.
சென்னை நேற்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 92,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்று 1200 ரூபாய் விலை உயர்ந்து 93,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 880 ரூபாய் குறைந்த தங்கம் இன்று அதனை விட இரண்டு மடங்காக விலை உயர்ந்திருப்பது சாமானிய மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உங்க ஊரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை என்ன?
24 கேரட் தங்கம் ஒரு கிராம் நேற்று 12,567 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 219 ரூபாய் விலை உயர்ந்து 12,786 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனை பொறுத்தவரை நேற்று 1,00,536 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 24 கேரட் தங்கம் இன்று ஒரே நாளில் 1,752 ரூபாய் விலை உயர்ந்து 1,02,288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .
18 கேரட் தங்கமும் தடாலடியாக உயர்ந்திருக்கிறது .நேற்று 9610 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம் இன்று 170 ரூபாய் விலை உயர்ந்து 9,780 ரூபாய்க்கும் . ஒரு சவரன் தங்கம் 1360 ரூபாய் விலை உயர்ந்த 78 ,740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிரிப்டோ சந்தை வீழ்ச்சி எதிரொலி: மீண்டும் உயர போகிறதா தங்கம் விலை?
தங்கத்தை அடுத்து வெள்ளியின் விலையும் இன்று தாறுமாறாக அதிகரித்திருக்கிறது. நேற்றை விட வெள்ளியின் விலை கிராமுக்கு மூன்று ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. நேற்று 171 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று மூன்று ரூபாய் விலை உயர்ந்து 174 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 3 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்து 1,74,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை திடீரென ஒரே நாளில் இப்படி உயர்ந்திருப்பது மீண்டும் தங்கம் ஏறு முகத்தை நோக்கி செல்கிறதா என்று அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது .இந்த மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு 200 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது .இதற்கு முன்னதாக நவம்பர் 19ஆம் தேதி இதேபோல ஒரே நாளில் 200 ரூபாய் விலை உயர்ந்தது அதற்கு அடுத்ததாக இன்றைய தினம் ஒரே நாளில் கிராமுக்கு 200 ரூபாய் விலை அதிகரித்து இருக்கிறது. தங்கத்தின் விலை நவம்பர் 13ஆம் தேதி அன்று ஒரு கிராம் 11,900 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது தற்போது மீண்டும் அதை நோக்கி தங்கம் விலை என்பது பயணம் செய்கிறது.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications











