Latest Updates
-
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா? -
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க.. -
தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதிகளின் ராசிகள் என்ன?ராசிப்படி அவர்கள் எப்படிப்பட்ட தலைவராக இருப்பார்கள் தெரியுமா -
Nombu Kanji Benefits: நோன்பு கஞ்சி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
குரு சுக்கிர சேர்க்கையால் உருவாகும் திருஷ்டி யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
இந்த 4 ராசி பெண்கள் தங்கத்துக்காக உயிரையும் கொடுப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ராகி இட்லியும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
தங்கம் ரூ.3500, வெள்ளி ரூ.12000.. ராக்கெட் வேகத்தில் உயர்வு.. அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்!
2025ஆம் ஆண்டில் தங்கம் மீதான முதலீடுகள் எப்படி அதிகப்படியான லாபத்தை கொடுத்ததோ அதேபோல் 2026லும் கொடுக்கும் அளவுக்கு அடுத்தடுத்து சர்வதேச சந்தையில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஒருப்பக்கம் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை, மறுபுறம் சர்வதேச அரசியல் பதற்றம். இதற்கு மத்தியில் முதலீட்டு சந்தையும், முதலீட்டாளர்களும் மாட்டிக்கொண்டு உள்ளனர்.
தங்கத்தின் விலை திங்கட்கிழமை வர்த்தகத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஐரோப்பிய வர்த்தகத்திலும், அமெரிக்க சந்தை வர்த்தகத்திலும் கூடுதலாக உயரவும் வாய்ப்புள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,600 அளவில் நெருங்கியது.

இன்று சென்னை ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 2200 ரூபாய் உயர்ந்து 1,31,200 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 3480 ரூபாய் உயர்ந்து 1,43,130 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 2784 ரூபாய் உயர்ந்து 1,14,504 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு 12000 ரூபாய் உயர்ந்து 2,87,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 2510 ரூபாய் உயர்ந்து 68,090 ரூபாயாக உள்ளது.
இந்த உயர்வுக்கு இரண்டு மூன்று காரணங்கள் உள்ளன: அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தலைவருக்கு எதிரான குற்றவியல் விசாரணை அச்சுறுத்தல், அமெரிக்கா கிரீன்லாந்து நாட்டை கைப்பற்றும் முயற்சியில் ஐரோப்பிய நாடுகள் காட்டும் கடுமையான எதிர்ப்பு மற்றும் ஈரானில் தீவிரமடைந்து வரும் போராட்டங்கள்.
ஃபெடரல் ரிசர்வ்
அமெரிக்க மத்திய வங்கியாக இருக்கும் ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் மற்றும் அமைப்புக்கு எதிராக கிரிமினல் விசாரணை நடத்துவதாக அச்சுறுத்தியுள்ளது. ஜூன் மாதத்தில் நாடாளுமன்றத்தில் பெடரல் ரிசர்வ் தலைமை அலுவலக புதுப்பிப்பு குறித்து அளித்த வாக்குமூலம் தொடர்பாக கிராண்ட் ஜூரி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜெரோம் பவல் இடையேயான மோதலை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே டிரம்ப் ஜெரோம் பவல்-ஐ பணியில் இருந்து நீக்க வேண்டும் என பல முறை பேசியிருக்கும் வேளையில், தற்போது சம்மன் அனுப்பியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. மேலும் ஜெரோம் பவல், டிரம்ப்-ன் நடவடிக்கை சுதந்திரத்துக்கு ஆபத்து என்ற விமர்சனம் செய்துள்ளார். இதன் மூலம் முதலீட்டாளர்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.
ஈரானில் தீவிரமடையும் போராட்டங்கள்
ஈரானில் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது மூலம் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது, இதன் மூலம் வளைகுடா சந்தையில் அரசியல் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று அறிவித்துள்ளதால் கூடுதல் பதற்றம் அதிகரித்துள்ளது.
வெனிசுலாவை தொடர்ந்து ஈரானிலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி ஆட்சியை மாற்றம் அல்லது ஆட்சி கைப்பற்றினால் எண்ணெய் சந்தை மற்றும் உலக பொருளாதாரத்தில் பெரிய தாக்கம் ஏற்படும். இந்த நிலையற்ற தன்மை தான் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
கிரீன்லாந்து
இதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்து நாட்டை வாங்க அல்லது கைப்பற்ற விரும்புவதாகவும் அறிவித்து. இந்த ஒரு அறிவிப்பு ஒட்டுமொத்த NATO கூட்டணியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆர்டிக் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் தங்கள் ராணுவ இருப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.
இத்தகைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான சொத்தாக பார்கின்றனர். இதனால் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் கச்சா எண்ணெய், அரிய உலோகத்தை அமெரிக்கா மெல்ல மெல்ல கைப்பற்றி வரும் காரணத்தால் உலகளவில் பொருளாதார தாக்கம் ஏற்படும். எனவே தங்கம் விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications











