Latest Updates
-
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்! -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம் - எப்படி செய்யணும் தெரியுமா? -
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க..
ரேஷன் கார்டு புது ரூல்ஸ்.. டிச.31 தேதிக்குள் விரல் ரேகை பதிவு முடிக்கனுமா? இந்திய அரசின் முக்கிய மாற்றங்கள்!
வருகிற 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி பிறகு, ரேஷன் கார்டு (Ration Card) வைத்திருப்போர்களுக்கு புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன. ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்யாதவர்களுக்கு இந்த விதிகள் மாற்றத்தை கொண்டுவர இருக்கின்றன.
இந்திய அரசாங்கமானது பொது விநியோக திட்டத்தின் கீழ் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் (PHH) மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டுகள் (AAY) ஆகியவற்றுக்கு அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுகிறது. இந்த கார்டுகளில் 36 லட்சம் உறுப்பினர்களின் ஆதார் அடிப்படையிலான விரல் ரேகை பதிவை (Fingerprints Register) செய்யவில்லை.

1. தமிழ்நாட்டில் 98.45 லட்சம் முன்னுரிமை கார்டுகள் உள்ளன. 3.01 கோடி உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
2. தமிழ்நாட்டில் 18.64 லட்சம் அந்தியோதயா கார்டுகள் உள்ளன. 62.88 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இந்த கார்டுகளில் இருக்கும் உறுப்பினர்கள் ஆதார் அடிப்படையிலான விரல் ரேகை பதிவை செய்யாமல் இருப்பதால், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அந்த பதிவை செய்து முடிக்க இந்திய அரசு அவகாசம் கொடுத்துள்ளது. இதை ரேஷன் கடைகளில் இருக்கும் பாயிண்ட் ஆஃப் சேல் (PoS) மெஷின் வழியாகவே ரேஷன் கார்டு உறுப்பினர்கள் செய்து கொள்ளலாம்.
இதில் 36 லட்சம் உறுப்பினர்களின் விரல் ரேகையும் ஆதார் கார்டில் இருக்கும் விரல் ரேகையின் அடிப்படையில் பதிவு செய்யப்படும். ஆகவே, முன்னுரிமை கார்டுகள் மற்றும் அந்தியோதயா கார்டுகளில் இருக்கும் உறுப்பினர்களின் உண்மைத் தன்மையை இது உறுதி செய்கிறது. இதற்காக கால அவகாசம் டிசம்பர் 31 ஆம் தேதியாக இருந்தாலும், மீண்டும் நீட்டிக்கப்படும்.
ஏனென்றால், இந்திய அரசு ஜனவரிக்கு முன்னதாக விரல் ரேகை பதிவை முடிக்க தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவை வழங்கி இருக்கிறது. ஆகவே, இதை ரேஷன் கார்டு உறுப்பினர்களுக்கு சொல்லவில்லை. இதனால், காலக்கெடு நிர்ணயம் கிடையாது. இருப்பினும், விரல் ரேகை பதிவை அந்தந்த ரேஷன் கடைகளில் முடித்துவிட்டால் போதுமானதாகும்.
மேலும், டிசம்பர் 31 ஆம் தேதியானது பான் (PAN) என்று சுருக்கமாக அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) வைத்திருக்கும் அட்டைதாரர்களுக்கும் கடைசி நாளாக இருக்கிறது. இந்த தேதிக்குள் பான் கார்டு எண்ணை ஆதார் எண்ணுடன் (Aadhaar Number) இணைக்க வேண்டும். இப்படி இணைக்காத கார்டுகள் செயலிழப்பு செய்யப்பட இருக்கின்றன.
பான் ஆதார் இணைப்பு எப்படி?
1. வருமான வரித்துறையின் மின்-தாக்கல் போர்ட்டலுக்கு (Income Tax Department e-Filing Portal) செல்ல வேண்டும். ஹோம் பேஜ்ஜில் குவிக் லிங்க்ஸ் (Quick Links) பக்கத்தில் இருக்கும் லிங்க் ஆதார் (Link Aadhaar) விருப்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். உங்கள் 10 இலக்க பான் கார்டு எண் மற்றும் 12 இலக்க ஆதார் கார்டு எண் ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.
2. இந்த விவரங்களை கொடுத்த பிறகு சமர்பிப்பு (Submit) விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, ஆதார் கார்டு வழியாக வெரிபிகேஷன் செய்யப்படும். அதாவது, ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி (OTP) அனுப்பி வைக்கப்பட்டும். இந்த ஓடிபி நம்பரை கேட்கும் இடத்தில் சரியாக கொடுத்துவிட வேண்டும்.
3. இதை கொடுத்தால், வெரிபிகேஷன் முடிந்தது. ஆகவே, பான் கார்டு தாரர்களுக்கு உறுதிப்படுத்தல் மெசேஜ் அனுப்பி வைக்கப்படும். அடுத்து 3 முதல் 5 வேலை நாட்களுக்குள் பான் கார்டு எண்ணுடன் ஆதார் கார்டு எண் இணைக்கப்பட்டுவிடும். பெயர் மற்றும் பிறந்த தேதி போன்றவற்றில் பிழைகள் இருந்தால், இணைப்பு செய்யப்படாது.
Credit: Gizbot



Click it and Unblock the Notifications