மகேந்திரன் படங்களை விமர்சித்து சிக்கிய தேவயானி கணவர்.. இதெல்லாம் தேவையா?.. மொரட்டு அடி விழுது

By Karunanithi Vikraman

சென்னை: இயக்குநர் ராஜகுமாரன் கடந்த 2001ஆம் ஆண்டு நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதற்கு பிறகு பெரிதாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த அவர் ஒன்றிரண்டு படங்களில் நடிக்க மட்டுமே செய்தார். சூழல் இப்படி இருக்க சமீபகாலமாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதை அதிகரித்திருக்கும் அவர்; சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் பேசிய விஷயத்தால் கடுமையான ட்ரோலை சந்தித்துவருகிறார்.

விக்ரமனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் ராஜகுமாரன். அவரது ஆஸ்தான சீடர்களில் ஒருவராக விளங்கிய அவர் சூர்யவம்சம் படத்தில் ஒரு சீனில் தலைகாட்டி அப்போது ஃபேமஸ் ஆனார். தொடர்ந்து விக்ரமனிடம் வேலைகளை கற்றுக்கொண்டு நீ வருவாய் என படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அதில் அஜித், தேவயானி, பார்த்திபன் உள்ளிட்டோர் நடிக்க; சொல்லிக்கொள்ளும்படியான வரவேற்பை பெற்றது.

சில படங்கள்தான்: முதல் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து விக்ரம், சரத்குமார், தேவயானி, குஷ்பூ உள்ளிட்டோரை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதுமட்டுமின்றி அப்படத்தின் ஷூட்டிங்போது ஏகப்பட்ட சிக்கல்களையும் சந்தித்தார். இதனை அவரே ஒரு சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


தேவயானியுடன் திருமணம்: இதற்கிடையே முதல் படத்தில் பணியாற்றியபோதே நடிகை தேவயானியை காதலித்தார் ராஜகுமாரன். இரண்டு பேரின் காதலுக்கும் முதலில் வீட்டில் சம்மதம் கிடைக்க தாமதம் ஆனது. ஒருவழியாக இருவரும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு பெரிதாக படங்கள் எதுவும் இயக்கவில்லை. அதேசமயம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், கடுகு உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்தார் ராஜகுமாரன்.

ராஜகுமாரனின் பேட்டி: இந்நிலையில் சமீப காலமாக தனியார் யூடியூப் சேனல்களுக்கு பேட்டிகள் கொடுப்பதை அதிகரித்திருக்கிறார் அவர். அந்தவகையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியின்போது இயக்குநர் மகேந்திரனின் படங்கள் பற்றி பேசிய அவர், "ராம நாராயணன் 100 படங்களுக்கு மேல் செய்திருக்கிறார். ஆனால் ஒன்று இரண்டு படங்கள் இயக்கிய மகேந்திரனை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். ஆனால் நான் மகேந்திரனின் ஒரு படத்தைக்கூட பார்த்ததில்லை. அவர் படங்களை பார்ப்பதற்கு எனக்கு விருப்பமுமில்லை.

பர்ஸ்ட் ஃபோனை மாற்றினார்.. கடைசியில் காதலியை மாற்றினார்.. பிரதீப் ரங்கநாதனின் சீக்ரெட் ஆஃப் சக்சஸ் இதுவா?

பெரிதாக ஒன்றும் இல்லை: சமீபத்தில்தான் உதிரிப்பூக்கள் படம் பார்த்தேன். அதில் ஒன்றும் பெரிதாக இல்லை. ஒரு சாதாரண படம் அவ்வளவுதான். கிழக்கே போகும் ரயில் படத்தில் ஒரு பிட்டு கதைதான் அந்த ஒட்டுமொத்த படமும். மனைவியின் தங்கையை தன் மனைவியாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் முழு பட கதையே. இது ஒரு பெரிய விஷயமா?.. அதற்காகவா இரண்டரை மணி நேரம்?" என்றார். அவரது இந்தப் பேட்டி ரசிகர்களிடையே பெரிய ட்ரோலை சந்தித்திருக்கிறது.

இப்படித்தான் சொன்னார்: மகேந்திரன் எவ்வளவு பெரிய இயக்குநர். அவரது திரை மொழியே கோலிவுட்டுக்கு புதுமையை கொடுத்தது. அப்படிப்பட்ட இயக்குநரை இப்படி பேசும் ராஜகுமாரன்; என்ன சாதித்துவிட்டார். தேவயானியை திருமணம் செய்யவில்லை என்றால் இவரே வெளியில் தெரிந்திருக்கமாட்டார் என்று விளாசிவருகிறார்கள். முன்னதாக, இதேபோல் வெற்றிமாறன், பா.இரஞ்சித் உள்ளிட்டோரின் படங்களையும் தேவயானியின் கணவர் இதே மாதிரி சொல்லியிருந்தது நினைவுகூரத்தக்கது.

Credit: Filmibeat

Story first published: Wednesday, November 26, 2025, 8:16 [IST]
Desktop Bottom Promotion