Latest Updates
-
பீட்ரூட் தோசையும், புதினா சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 01 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நீண்டநாள் ஆசை நிறைவேறப்போகுதாம் -
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
புட்வா புயல்.. எத்தனை கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது? எப்போதும் தமிழக கடல் பகுதியை நெருங்கும்?
சென்னை: சென்னையில் இருந்து சுமார் 400 கிமீ தொலையில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மணிக்கு 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் டிட்வா புயல், தமிழ்நாடு - புதுச்சேரி - ஆந்திரா கடல் பகுதியை நாளை அதிகாலை நெருங்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவிய டிட்வா புயல், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், சென்னையிலிருந்து தெற்கே 400 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து 300 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகா்ந்து, இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலைக் கடந்து, நாளை அதிகாலை, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் , வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும்.
சாதாரணமாக காற்றின் வேகம் 63 கிமீ முதல் 83 கிமீ வரை இருந்தால், அது புயலாக கருதப்படும். தற்போது வரை டிட்யா புயல் காற்றின் வேகம் 65 கிமீ-ஆக இருக்கிறது. இந்த புயல் இலங்கை பரப்பில் இருந்து விலகி, டெல்டாவை அடையும் போது காற்றின் வேகம் 70 முதல் 80 கிமீ வரை இருக்கலாம் என்று கணக்கிப்பட்டுள்ளது. அதேபோல் டெல்டா கரையை கடக்குக் போது மெதுவாகவோ அல்லது நிற்கவோ வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சில மணி நேரங்கள் டெல்டா நிலப்பரப்பில் இருக்கும் புயல், பின்னர் வலுவான நிலையில் தொடர்ந்து வடக்கு திசையை நோக்கி நகர உள்ளது. அதன்பின் சென்னை கடலோர பகுதிகளுக்கு அருகில் நிற்கவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த புஅல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று பிற்பகல் ம்தல் நாளை மறுநாள் வரையிலும் கனமழை தொடரும்.
ஓரிரு மாவட்டங்களில் அதி கனமழை கூட பெய்யக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக டெல்டா மற்றும் அதனையொட்டிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று 70 முதல் 90 கிமீ வரையிலும், நாளை தென் கடலீர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் 55 கிமீ முதல் 75 கிமீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications