Latest Updates
-
பீட்ரூட் தோசையும், புதினா சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 01 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நீண்டநாள் ஆசை நிறைவேறப்போகுதாம் -
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
முதலிரவில் நடந்த பயங்கரம்.. விடிய விடிய கதறி அழுத நடிகை.. கரிஷ்மா கபூரின் கண்ணீர் கதை
சென்னை: 1990 களின் முன்னணி நடிகை மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான இருந்தவர் தான் நடிகை கரிஷ்மா கபூர், தேசிய விருது மற்றும் நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்று இருக்கிறார். பெரிய பாரம்பரிய கபூர் குடும்பத்தில் பிறந்த இவர் வாழ்க்கையில் படாத கஷ்டங்களை பட்டு, வாழ்க்கையே வெறுத்து தற்போது தனது இரண்டு குழந்தைகளுக்காகவே வாழ்ந்து வருகிறார். அவரின் கண்ணீர் கதையை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த ரந்தீர் கபூர், நடிகை பபிதாவுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்தனர். அந்த காதல் கைகூட வேண்டும் என்றால், சினிமாவை விட்டு விலக வேண்டும் என ரந்தீர் கபூரின் குடும்பம் முட்டுக்கட்டை போட்டதால், பபிதா காதலுக்காக சினிமாவை விட்டு விலகி ரந்தீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சாட்சியாக கரிஷ்மா கபூர், கரீனா கபூர் என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. இந்த நேரத்தில் தான் ரந்தீர் கபூருக்கு படங்கள் கைகொடுக்காமல் போக அவர் மதுவிற்கு அடிமையாகி தொடர்ந்து குடித்துக்கொண்டே இருந்ததால், பபிதா தனது இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு கணவரை விட்டு பிரிந்து,படாதபாடுபட்டு கரிஷ்மா கபூர், கரீனா கபூர் பேரையும் வளர்ந்து ஆளாக்குகிறார்.

நடிகை கரிஷ்மா கபூர்: இதையடுத்து கரிஷ்மா கபூர் குடும்பத்தின் வறுமை காரணமாக தனது 15 வது வயதில் இந்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இவர் நடித்த 'பிரேம் கைதி' படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜிகர், அனாரி, ராஜா பாபு, அந்தாஸ் அப்னா அப்னா, கூலி நம்பர் 1, சாஜன் சலே சசுரல், ஜீத், ராஜா இந்துஸ்தானி ஆகிய திரைப்படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். 1996ம் ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் 10 திரைப்படம் வெளியாகும் அளவிற்கு பீக்கில் இருந்தார்.
கோவிந்தாவுடன் காதல்: நடிகர் கோவிந்தா உடன் பல திரைப்படங்களில் கரிஷ்மா கபூர் இணைந்து நடிக்க இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், கோவிந்தாவிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்ததால், கரிஷ்மாவின் தாய் பாபிதா, முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வந்தால், கரிஷ்மாவை திருமணம் செய்து வைக்கிறேன் என ஒரே வார்த்தை சொல்லிவிட்டார். ஆனால், கோவிந்தா முதல் மனைவியை விவாகரத்து செய்ய மாட்டேன் என பிடிவாதமாக சொல்லி விட்டதால், கரிஷ்மாவும் கோவிந்தாவும் பிரிந்தனர்.

அபிஷேக் பச்சனுடன் காதல்: காதல் தோல்விகள் துவண்டு போயிருந்த கரிஷ்மா, அதில் இருந்து மீண்டு, பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். அந்த நேரத்தை தான் அமிதாபச்சனின் மகளின் திருமண வரவேற்பு மும்பையில் மிகவும் கோலாகலமாக நடந்தது ஒரு வாரம் நடந்த அந்த திருமண விழாவில் கரிஷ்மா கலந்து கொண்டார். அப்போது தான் அபிஷேக் பச்சனுக்கும் கரிஷ்மாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. அந்த காதல் விஷயம் அபிதாப் பச்சனுக்கு தெரியவர, அவரும் மகனின் காதலுக்கு பச்சை கொடி கட்டிவிட்டார். இதையடுத்து, அபிஷேக் பச்சன், கரிஷ்மா கபூருக்கும் தடபுடலாக நிச்சயதார்த்தம் நடக்கிறது.
திருமணம் நின்றது: இந்த நேரத்தில் அபிதாப் பச்சன், ABCL என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார். அந்த நிறுவனம் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு, அமிதாப் பச்சன் கடனாளியாகிறார். பெரிய கடன் சுமையில் அமிதாப் இருப்பதால், இந்தக் கடன் அவரின் மகன் அபிஷேக் தலையில் தான் விழும் என பயந்து போன கரிஷ்மாவின் தாய் பபிதா, அபிஷேக் மீது சொத்தை எழுதி வைத்தால் கரிஷ்மாவை திருமணம் செய்து கொடுப்பதாக நிபந்தனை விதித்து இதுக்கிறாள். இதனால், கடுப்பான அமிதாப் பச்சன் திருமணத்தை நிறுத்திவிட்டார். கரிஷ்மா தாயிடம் கெஞ்சி கேட்டும், அவர் திருமணத்திற்கு சம்மதிக்காததால் இவர்களின் திருமணம் நிச்சயத்தோடு முடிந்து விட்டது.

முதலிரவு அறையில்: இதையடுத்துத்தான், பெரிய தொழிலதிபர் சஞ்சய் கபூருக்கு இரண்டாவது மனைவியானார். ஆசைபட்ட வாழ்க்கை கிடைக்கவில்லை என்றாலும், தனது குடும்பத்திற்கான அவரை மணந்தார். ஆசை ஆசையாக திருமண வாழ்க்கையை தொடங்கிய கரிஷ்மா கபூரின் கனவு முதல் இரவு அன்றே முடிந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். முதலிரவு அறைக்கு கரிஷ்மா சென்றபோது, சஞ்சய் கபூர் தனது நண்பர்கள் 10பேருடன் அமர்ந்து கொண்டு, நான் சினிமா நடிகையை திருமணம் செய்து இருக்கிறேன். இவள் நன்றாக டான்ஸ் ஆடுவாள் என சொல்லி, அனைவரும் முன்பும் ஆட சொல்லியிருக்கிறாள். அதோடு மட்டுமில்லாமல், பல தகாத வார்த்தையை சொல்லி இருக்கிறார். இதனால் மனம் உடைந்து போன கரிஷ்மா அன்று இரவு முழுக்க கழிவறையில் கதறி கதறி அழுததாக பேட்டியில் ஒன்றில் கூறியுள்ளார்.
கணவரை பிரிந்தார்: இந்த வாழ்க்கையே வேண்டாம் இதிலிருந்து விடுபட்டு விடலாம் என பல முயற்சிகளையும் செய்தும், கணவரின் பண பலத்தால் அது முடியாமல் போனது. வாழ்க்கையில் தன்னை ஏமாற்றியவர்கள் முன் நான் கண்ணீரோடு நிற்க விரும்பவில்லை. இதனால், கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்தினேன். ஒரு கட்டத்திற்கு மேல், கணவரின் கொடுமை தாங்கமுடியாததால், இரண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி 2016 ஆம் ஆண்டு அவரை விட்டு பிரிந்து விவாகரத்து பெற்றார். அண்மையில் சஞ்சய் கபூர் இறந்த பின்பு தான் இந்த விஷயத்தை பொதுவெளியில் மீடியாவில் கரிஷ்மா கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.
Credit: Filmibeat



Click it and Unblock the Notifications