Latest Updates
-
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
ஜாய் கிரிஸில்டாவுக்கு பெருகும் ஆதரவு.. மாதம்பட்டி ரங்கராஜை விளாசும் நடிகை.. இந்த வாங்கு வாங்குறாங்களே
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் அனைத்தையும் ஒத்துக்கொண்டதாக நேற்று முன்தினம் ஜாய் கிரிஸில்டாவும், மகளிர் ஆணையமும் தெரிவித்த சூழலில் அதனை முற்றிலுமாக மறுத்திருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். அதனையடுத்து கடுமையாக அவரை விமர்சனம் செய்து ஜாய் கிரிஸில்டா வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் நடிகையும், எழுத்தாளருமான கொற்றவை காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.
ஜாய் கிரிஸில்டா அளித்த புகாரின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜிடம் விசாரணை முடிந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அதனையடுத்து இரண்டாவது திருமணம் செய்ததையும், பிறந்த ஆண் குழந்தை தன்னுடையதுதான் என்பதையும் ரங்கராஜ் ஒத்துக்கொண்டார் என்று மகளிர் ஆணையம் தெரிவித்தது. ஜாய் கிரிஸில்டாவும் அதனை உறுதிப்படுத்தியிருந்தார். இதனால் இப்பிரச்னைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வரும் என்று கருதப்பட்டது.
ரங்கராஜ் அடித்த ட்விஸ்ட்: ஆனால் மாதம்பட்டி ரங்கராஜோ நேற்று வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில், " அனைவருக்கும் வணக்கம். மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் ஜாய்யை தன்னிச்சையாக (under free will) திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது.

பணம் பறிப்பதற்காக செய்யப்பட்டது: செப்டம்பர் 2025 இல், ஆயிரம் விளக்குகள், மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலங்களை நான் ஏற்கனவே அளித்துள்ளேன், இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.
டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு மறுக்கவில்லை: கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ.1,50,000 பராமரிப்புத் தொகையாகவும், தனது BMW காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர EMI-யையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார், நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன். நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை, மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால்(DNA Test), அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன். இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அஜித்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்.. உறுதி செய்த பிரபலம்.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
மேல்முறையீடு செய்வேன்: மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன், மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும்" என்று ட்விஸ்ட் அடித்திருந்தார்.
ஜாய் கிரிஸில்டா கடுப்பு: அவரது இந்த அறிக்கைக்கு ஜாய் கிரிஸில்டா கடும் எதிர்வினை ஆற்றியிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், "என்னிடம் இருக்கும் புகைப்படங்களை நான் வெளியிட்டால் அவர் என்னுடன் விருப்பப்பட்டு வாழ்ந்தாரா இல்லை மிரட்டப்பட்டு வாழ்ந்தாரா என்பது தெரியும். எல்லாம் மிரட்டல் என்றால் என்னுடன் உடலுறவு வைத்துக்கொண்டதும் மிரட்டலால்தான்?" என சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தார்.
நடிகையின் ஆதரவு: இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆதரவாக நடிகையும், எழுத்தாளருமான கொற்றவை பதிவிட்டிருக்கிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "மிரட்டினால் காவல் துறையிடம் செல்லாமல் திருமணம் செய்துகொள்வீர்களா? மிரட்டும் அளவுக்கு அப்படி என்ன தனிப்பட்ட படங்களோ செயலோ இருந்தது. மகளிர் ஆணையத்தின் அறிவிப்பை மறுக்கும் அளவுக்கு செல்வாக்கு வியப்பாக இருக்கிறது" என குறிப்பிட்டிருக்கிறார்.
Credit: Filmibeat



Click it and Unblock the Notifications