Latest Updates
-
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
இந்த 4 ராசிக்காரங்க மட்டும் உங்களுக்கு கணவனா வந்தா? உங்க வாழ்க்கையில் எப்பவும் வெற்றிதானாம்!
இன்று வரை பாப்புலராக பேசப்படும் 'சூரிய வம்சம்' திரைப்படத்தில் தேவயானியின் கலெக்டெர் கனவை சரத்குமார் கஷ்டப்பட்டு நிறைவேற்றுவார். அதேபோல, சரத்குமாரின் வளர்ச்சிக்கும் தேவயானி முக்கிய பங்கு வகிப்பார். இது உறவில் தம்பதிகள் ஒருவருக்கொருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது.
திருமண வாழ்க்கை என்பது மகிழ்ச்சியானதாகவும், அன்பானதாகவும் இருக்க வேண்டும் என்றுதான் நாம் அனைவரும் விரும்புவோம். அதோடு, ஒருவருக்கொருவர் ஆதரவை வழங்க வேண்டும். ஆதாவது, ஒவ்வொரு தம்பதிகளும், தங்கள் துணையின் உணர்வுகளை மதித்து, அவர்களின் ஆசை மற்றும் கனவுகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

தங்கள் துணையின் கனவுகளை அவர்களின் லட்சியங்களை நனவாக்க துடிக்கும் நபர்கள் இருக்கிறார்கள். அந்த நபர்களை ஜோதிடத்தின் மூலம் நீங்கள் அடையாளம் காணலாம். தங்கள் திருமண பந்தத்தை வலுப்படுத்தவும் வாழ்க்கைத் துணையின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கவும் உதவும் ராசிக்காரர்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுறுசுறுப்பாக கேட்கும் திறன் கொண்டவர்கள் மற்றும் இரக்க குணம் அவர்களின் திருமணத்திற்குள் ஒரு ஆதரவான சூழலை வளர்ப்பதற்கு முக்கியமாகும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் மனைவியுடன் திறந்த மற்றும் நேர்மையான தொடர்புகளை ஊக்குவிக்கிறார்கள். தங்கள் மனைவியின் தேவையை அறிந்து அவர்கள் செயல்படுகிறார்கள். இது அவர்களின் துணையின் இலக்குகளை அடையவும், சாதிக்கவும் பெரிதும் உதவுகிறது.
தனுசு ராசிக்காரர்கள் தங்கள் துணையின் மீது உண்மையான அன்பை கொண்டுள்ளனர். தங்கள் துணையின் கவனவுகளையும் ஆசைகளையும் நிறைவேற்ற இந்த ராசிக்காரர்கள் கடினமாக முயற்சி செய்கிறார்கள். அவர்கள் தங்கள் மனைவியின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுகிறார்கள். இது அவர்களின் உறவை வலுப்படுத்தவும் உதவுகிறது.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் உறவில் மிகவும் நம்பிக்கையான நபராக இருப்பார்கள். அவர்கள் தங்கள் லட்சியங்களை அடைய போராடுவது மட்டுமல்லாமல், தங்கள் துணையின் லட்சியங்களுக்கும் நிலையான ஆதரவை வழங்குகிறார்கள். இவர்கள் தங்கள் துணையின் முன்னேற்றத்திற்கு மிகவும் பக்க பலமாக இருப்பார்கள். குடும்பம் மற்றும் அவர்களின் வேலை தொடர்பான பணிகளுக்கு உதவுவது போன்ற நடைமுறை ஆதரவை தங்கள் துணைக்கு வழங்குகிறார்கள்.
இந்த ராசிக்காரர்கள் தங்கள் மனைவி எடுக்கும் முடிவுக்கு மதிப்பளிக்கிறார்கள், அதை பின்பற்ற முயற்சி செய்வார்கள். மேலும், இவர்கள் தங்கள் சொந்த கருத்துக்களை தங்கள் துணையின் மீது திணிக்க மாட்டார்கள். தங்கள் வாழ்க்கைத் துணையின் விருப்பங்களுக்கு மதிப்பளிக்கும் கும்ப ராசிக்காரர்கள், எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
சிம்மம்
ராசி சக்கரத்தில் உள்ள சில நட்சத்திர அறிகுறிகள் சிம்ம ராசியைப் போல் இயக்கப்படுகின்றன. சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் இலக்குகளை அடைய எடுக்கும் முயற்சியை, தங்கள் துணையின் இலக்குகளை அடையவும் முயற்சி எடுப்பார்கள். தங்கள் துணைக்கு எப்போதும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்குவதற்கான சரியான மனநிலையை இவர்கள் கொண்டுள்ளனர்.
சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் துணையின் பலம் அல்லது திறன்களை அவர்களுக்கு நினைவூட்டுகிறார்கள். மேலும், இந்த ராசிக்காரர்களின் துணை எவ்வளவு குறைவாக சாதித்து இருந்தாலும், அவர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதன் மூலம் இன்னும் உயர்ந்த இலக்குகளைத் தொடர அவர்களை ஊக்குவிக்கிறார்கள்.
கன்னி
கணவன் அல்லது மனைவியாக, இந்த பூமியின் அடையாளமாக இருக்கும் கன்னி ராசிக்காரர்கள் தங்கள் துணையை ஆதரிக்கும் சூழலை எப்போதும் வளர்ப்பார்கள். தங்கள் துணை வேலை செய்வதற்கான இடத்தையும் நேரத்தையும் உருவாக்குதல், கவனச்சிதறல்களைக் குறைத்தல் அல்லது தினசரி நடைமுறைகள் அல்லது குழந்தைப் பராமரிப்புப் பொறுப்புகளில் இந்த ராசிக்கார்கள் சரியாக நடந்துகொள்வார்கள்.
தொழில் வாழ்க்கையில், கன்னி ராசிக்காரர்கள் ஒரு திட்டமிடுபவராக சிறந்து விளங்குகிறார். மேலும் அவர்களின் திறன்கள் அவர்களின் வாழ்க்கைத் துணையுடன் ஒத்துழைக்கவும் அவர்களை ஊக்கப்படுத்தவும் செய்ய உதவும். அவர்கள் தங்கள் மனைவியின் இலக்குகளை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிந்து, யோசனைகளை வழங்குவார்கள்.



Click it and Unblock the Notifications
