Latest Updates
-
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 5 ராசிக்காரங்க எத தொட்டாலும் வெளங்காதுன்னு எப்பவும் அவநம்பிக்கையாவே இருப்பங்களாம்...பாவம் இவங்க!
இன்பம், துன்பம் இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை. இந்த வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக மட்டுமே யாராலும் இருக்க முடியாது. அதேபோல, எப்பவும் கவலைப்பட்டுக் கொண்டேவும் இருக்க முடியாது. இரண்டும் மாறிமாறிதான் வரும். இதனால், சிலர் வாழ்க்கை மீது அவநம்பிக்கையை கொண்டிருக்கலாம்.
எல்லாவற்றையும் சமமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் ஒவ்வொருவரும் வளர்ந்துகொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கை பயணத்தில் அவ்வவ்போது சில ஸ்பீட் பிரேக்கர்களும் தடைகளும் வரலாம். அவற்றை மட்டுமே கவனித்துக் கொண்டு, பூச்செடிகளையும் நல்ல வானிலையையும் பார்க்காமல் ரசிக்காமல் பலர் புறக்கணித்துவிடுகிறார்கள்.

அத்தகைய நபர்கள் வாழ்க்கை மீது அவநம்பிக்கையை கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நேர்மறையின் முக்கிய ஊக்கம் தேவைப்படுகிறது. இந்த நபர்களை ஜோதிடத்தின் அடிப்படையில் நீங்கள் அடையாளம் காணலாம். இராசி அறிகுறிகளின் அடிப்படையில் பார்த்தால், மிகவும் அவநம்பிக்கையானதாகக் கருதப்படும் ராசிக்காரர்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தங்கள் நடைமுறை மற்றும் வலுவான பொறுப்பு உணர்வுகளுக்காக அறியப்படுகிறார்கள். அவர்கள் இலக்கு சார்ந்தவர்களாகவும் அதிக லட்சியம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், இது சில சமயங்களில் அவநம்பிக்கையான கண்ணோட்டத்திற்கு வழிவகுக்கும்.
இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் தோல்வியைப் பற்றி கவலைப்படுகிறார்கள். அதனால், மிகவும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க முயற்சி செய்கிறார்கள். இருப்பினும், எப்போதும் மோசமான சூழ்நிலையை அவர்கள் மனம் எதிர்பார்க்கிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமான மற்றும் உணர்ச்சிவசப்படக்கூடிய நபர்கள். ஆனால், ஆழ்ந்த உணர்ச்சிகளை ஆராய்ந்து மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணரும் அவர்களின் போக்கு அவர்களை அவநம்பிக்கையான நிலைக்கு இட்டுச் செல்லும்.
இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் நோக்கங்களை சந்தேகிக்கக்கூடும். மேலும் கடந்தகால காயங்களை விட்டுவிடுவது அவர்களுக்கு கடினமாக இருக்கலாம். இது அவர்களின் அவநம்பிக்கையான தன்மைக்கு பங்களிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்களின் நுணுக்கமான விவரங்களுக்கு கவனம் செலுத்துவதற்காக் அறியப்படுகிறார்கள். இது சில சமயங்களில் தவறுகள் மற்றும் குறைபாடுகளில் கவனம் செலுத்த வழிவகுக்கும். அவர்கள் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் உயர் தரங்களைக் கொண்டுள்ளனர்.
மேலும் இந்த எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், அது அவர்களின் அவநம்பிக்கையான மனநிலையை வளர்க்கும். இதனால், அவர்கள் அதிகமாகச் சிந்திக்கவும் கவலைப்படவும் வாய்ப்புள்ளது. இது அவர்களின் எதிர்மறையான கண்ணோட்டத்தை மேலும் தூண்டுகிறது.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்கள் பொதுவாக அடிப்படையில் நம்பகமானவர்கள். ஆனால் அவர்களின் பிடிவாத குணம் சில நேரங்களில் அவநம்பிக்கைக்கு வழிவகுக்கும். அவர்கள் மாற்றத்தை எதிர்த்து, நிலையான ஆறுதலை பெற முயற்சி செய்யலாம்.
எனவே நிச்சயமற்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது, அவர்கள் அவநம்பிக்கையான அணுகுமுறையை வெளிப்படுத்தலாம். கூடுதலாக, இந்த நபர்கள் உடைமை மற்றும் பொருள்சார்ந்தவர்களாக இருக்கலாம். இது எதிர்மறையான சிந்தனைக்கு பங்களிக்கும்.
கடகம்
கடக ராசி நேயர்கள் தங்கள் உணர்திறன் மற்றும் உணர்ச்சி ஆழத்திற்காக அறியப்படுகிறார்கள். அவர்களின் இரக்க குணம் ஒரு நேர்மறையான பண்பாக இருந்தாலும், அது அவர்களை மேலும் அவநம்பிக்கையான நபராக மாற்றலாம்.
இந்த ராசிக்காரர்கள் கடந்த கால காயங்களை நினைத்துக்கொண்டே வாழ்வதினால், மீண்டும் நிராகரிக்கப்படுவோமா என்ற பயம் அவர்களுக்குள் ஏற்படுகிறது. இது வாழ்க்கை மற்றும் உறவுகளின் மீது எதிர்மறையான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதற்கு வழிவகுக்கும்.
இதர ராசிக்காரர்கள்
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் ஒப்பீட்டளவில் நேர்மறையான நபர்களாக இருப்பார்கள். வாழ்க்கை அவர்களுக்கு கசப்பான அனுபவத்தை கொடுத்தாலும், அவற்றை மறந்து அல்லது திருத்திக்கொண்டு மகிழ்ச்சியாகவும் நேர்மறையான சிந்தனை கொண்டும் வாழ முயற்சி செய்வார்கள்.



Click it and Unblock the Notifications












