Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
செல்வ வளம் பெருக வியாழக்கிழமை குபேர பூஜை செய்யுங்கள்..!
செல்வச் செழிப்புக்கு அதிபதியானவர் குபேரர். மிகப் பெரிய சிவ பக்தரான இவர், தன்னுடைய அளவில்லாத சிவ பக்தியால் வடதிசைக்கு அதிபதியாக இருக்கும் வரத்தை பெற்றார். சிவ பெருமானின் வடிவமான சொர்ண பைரவர், குபேரனுக்கு செல்வத்தை பாதுகாக்கும் பொறுப்பை கொடுத்தார். மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெற்ற இவர், செல்வத்தை பெருக செய்யக் கூடியவர்.
குபேரரின் அருள் இருந்தால் நம்முடைய வீட்டிலும் செல்வம் செழிக்கும். குபேரனின் அருளை பெறுவதற்கு வீட்டிலேயே சில எளிய வழிபாடுகளை செய்யலாம். குபேரருக்குரிய வியாழக்கிழமையில் இந்த வழிபாட்டினை செய்வது மிகவும் சிறப்பானது.

குடும்பத்தில் இருக்கும் பொருளாதார ரீதியான பிரச்சனைகள், பணத் தடைகள் நீங்கி செல்வ செழிப்பு உயர மகாலட்சுமி வழிபாடு செய்வதுபோல செல்வ கடவுளாக இருக்கும் குபேரனையும் வழிபடுவது வீட்டில் செல்வ செழிப்பை அதிகரிக்க செய்யும் ஒரு முக்கிய வழிபாடு ஆகும். குடும்பத்தில் இருக்கும் வறுமை நீங்க, பொருளாதார ரீதியான பிரச்சனைகளுக்கு மற்றும் வீட்டில் தன, தானியத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்க வியாழனில் குபேர வழிபாடு செய்வது மிகவும் சிறந்த பலனைக் கொடுக்கும்.
வழிபடும் முறை
குபேர விளக்கிற்கும், அதை வைக்கும் தட்டிற்கும் ஒற்றைப்படையில் மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும். பிறகு தட்டில் சிறிதளவு பச்சரியை பரப்பி அதில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து கொள்ளுங்கள். பின்னர் வீட்டில் எப்போதும் விளக்கேற்றும் பூஜை அறையில் குபேரன் படத்தை வைத்து தாமரை மலர், சங்கு ஆகியவற்றை இருபுறமும் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். குபேருக்கு மிகவும் விருப்பமான உணவு அவல் என்பதால் அவலுடன் சிறிதளவு பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். இப்படி செய்வதால் நமக்கு குபேரரின் அருள் கிடைத்து குடும்பத்தில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
குபேர விளக்கு
குபேர விளக்கு செல்வத்தின் அதிபதியாக குபேரர் விளங்குகிறார். அவரை நாம் வணங்கி வர அவரின் அருள் கிடைத்து வாழ்வில் வளம் பெறலாம். அவரின் அருள் பெற குபேரர் விளக்கில் தீபம் ஏற்றி வழிபடலாம். குபேர விளக்கை ஏற்ற சரியான தினமாக வியாழக்கிழமை பார்க்கப்படுகின்றது. அன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணிக்குள் இந்த குபேர விளக்கை ஏற்றி பூஜை செய்வது உகந்தது.
குபேர விளக்கு ஏற்றும் முறை
விளக்கு ஏற்றும் போது வீட்டினுள், வாசலின் முன் நின்றபடி, நமது இடது புறத்தில், ஒரு மரப்பலகை அல்லது தட்டி நன்றாக சுத்தம் செய்த குபேர விளக்கை வைக்கவும். அதற்கு மஞ்சள் குங்குமம் வைக்கவும். அதில் நல்லெண்ணெய் ஊற்றி, இரண்டு திரிகளை எடுத்து, ஒன்றாக சேர்த்து ஒரு திரியாக்கி குபேர விளக்கில் போடவும். பின்னர் வீட்டில் எப்போதும் வீட்டில் விளக்கேற்றும் பூஜை அறையில் விளக்கேற்றிய உடன், குபேர விளக்கிலும் தீபத்தை ஏற்ற வேண்டும்.
அப்படி இந்த விளக்கை ஏற்றும்போது 'ஸ்ரீமகாலட்சுமி குபேராய நமஹ' என்ற மந்திரத்தை மனதில் உச்சரித்த படியே விளக்கை ஏற்ற வேண்டும். இதேபோல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 5 மணியிலிருந்து 8 மணிக்குள் இந்த பூஜையை செய்வது சிறப்பை தரும்.
இந்த விளக்கு வழிபாட்டினை தொடர்ந்து செய்து வந்தால் செல்வம் பெருகும், கடன் தீரும், வீட்டில் மகிழ்ச்சி நிலவும், எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். வீட்டில் செல்வ செழிப்பு பெருகிக் கொண்டே செல்லும். குபேர விளக்கு கிடைக்கவில்லை என்றால், அகல் விளக்கிலும் விளக்கை ஏற்றலாம்.



Click it and Unblock the Notifications