Latest Updates
-
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
செப்டம்பர் 14, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க நிறைய சோதனைகளை சந்திக்கப் போறாங்களாம் -
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
15000 கோடி மதிப்புள்ள முகேஷ் அம்பானி வீட்டை விட இந்த வீட்டின் மதிப்பு அதிகமாம்... இதன் ஓனர் யார் தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானியும், நீதா அம்பானியும் உலகின் மிகவும் விலையுயர்ந்த வீடுகளில் வசிப்பதை நாம் அறிவோம். அவர்களின் மும்பை இல்லமான ஆண்டிலியா, அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ளது, இது 15000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கண்ணாடி மாளிகை ஆகும். ஆனால், 1700-க்கும் மேற்பட்ட அறைகள் மற்றும் 257 குளியலறைகள் கொண்ட உலகின் மிகப்பெரிய வீடு என்று கூறப்படும் மற்றொரு மாளிகை உள்ளது உங்களுக்குத் தெரியுமா?

அதுதான் ஹசனல் போல்கியாவின் ராயல் பேலஸ், அவர் 1967 முதல் புருனேயின் சுல்தானாகவும் மற்றும் 1984 இல் இங்கிலாந்திலிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து புருனேயின் பிரதமராகவும் பதவி வகிக்கிறார். உலகில் உள்ள வெகுசில முழுமையான மன்னர்களில் ஒருவரான ஹசனல் போல்கியா 1967 இல் இந்த முஸ்லீம் தேசத்தின் அரியணையை ஏற்றார், மேலும் அவரது நிகர மதிப்பு $30 பில்லியன் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஹசனல் போல்கியா ஆடம்பரமான இல்லமான இஸ்தானா நூருல் இமான் அரண்மனையில் வசிக்கிறார், இது உலகின் மிகப்பெரிய வீடாகும். இது புருனேயின் தலைநகரான பந்தர் செரி பெகவான் அருகே அமைந்துள்ளது. இந்த அரண்மனை மிகவும் பெரியது, இந்த அரண்மனை மட்டுமே பார்ப்பதற்கு ஒரு நகரம் போல் காட்சியளிக்கிறது, அதனால்தான் இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
சுல்தான் ஹசனல் போல்கியா 2 மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு அரண்மனையில் வசிக்கிறார். 40 ஆண்டுகளுக்கு முன்னரே சுமார் 12000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த வீடு புருனேயில் அமைந்துள்ளது. இது இஸ்தானா நூருல் ஐமான் என்று அழைக்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸை சேர்ந்த கட்டிடக் கலைஞர் லியாண்ட்ரோ வி லோக்சின் என்பவரால் இந்த அரண்மனை வடிவமைக்கப்பட்டது, இதன் உள்கட்டமைப்புகளை குவான் செவ் என்ற லண்டன் நிறுவனம் செய்தது, மேலும் அயாலா கார்ப்பரேஷனால் கட்டப்பட்டது.
2 மில்லியன் சதுர அடி பரப்பளவில் இந்த அரண்மனை 1,788 அறைகள், 257 குளியலறைகள் மற்றும் 5,000 விருந்தினர்களுக்கான விருந்து மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சுல்தானின் 7,000 கார்களுக்கு ஏர் கண்டிஷனிங் கொண்ட 110 கேரேஜ்கள் உள்ளன, மேலும் 200 குதிரைக் கொட்டகைகளம் உள்ளன. அவற்றின் மதிப்பு மட்டுமே சுமார் $5 பில்லியன் ஆகும். இஸ்தானா நூருல் இமானில் 564 சாண்டிலியர்ஸ், 51,000 மின் விளக்குகள், 44 படிக்கட்டுகள் மற்றும் 18 லிஃப்ட்கள் உள்ளன.
உலகின் மிகப்பெரிய அரண்மனை என்ற கின்னஸ் உலக சாதனையிலும் இஸ்தானா நூருல் இமான் அரண்மனை இடம் பெற்றுள்ளது. இந்த அற்புதமான அரண்மனையின் குவிமாடம் 22 காரட் தங்கத்தால் பூசப்பட்டுள்ளது. இது பிரதம மந்திரி அலுவலகத்தையும் கொண்டுள்ளது மற்றும் புருனே அரசாங்கத்தின் தலைமையிடமாகவும் செயல்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் இஸ்லாமியர்களின் ஈத்-உல்-பித்ர் கொண்டாட்டத்தைத் தவிர, வேறெந்த நிகழ்வுகளுக்கும் இந்த அரண்மனை பொதுமக்களுக்காக திறக்கப்படுவதில்லை. இஸ்தானா நூருல் இமான் உலகின் மிகப்பெரிய அரண்மனை மற்றும் இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய ஒற்றை குடும்ப குடியிருப்பு ஆகும். கின்னஸ் உலக சாதனைகள் தற்போது இஸ்தானா நூருல் இமானை "உலகின் மிகப்பெரிய குடியிருப்பு அரண்மனை" என்று கருதுகிறது. அரண்மனையின் தற்போதைய மதிப்பிடப்பட்ட மதிப்பு 2,550 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.



Click it and Unblock the Notifications

