Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
142 லட்சம் கோடி சொத்து வைத்துள்ள இதுதான் உலகின் பணக்கார நகரமாம்... இந்த நகரத்தோட மூலதனம் என்ன தெரியுமா?
குளோபல் SWF இன் சமீபத்திய அறிக்கை,உலகின் பணக்கார நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. தரவுகள் மற்றும் ஆய்வுகளின் படி, அபுதாபி உலகின் பணக்கார நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2024 நிலவரப்படி, UAE எமிரேட் 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 142 லட்சம் கோடி) மதிப்புடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இந்த மிகப்பெரிய மூலதனமும், செல்வமும் அபுதாபியை மற்ற பணக்கார நகரங்களான ஓஸ்லோ, பெய்ஜிங், சிங்கப்பூர், ரியாத் மற்றும் ஹாங்காங் போன்றவற்றை முந்துவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த ஆறு நகரங்களில் உள்ள Sovereign செல்வத்தின் மொத்த மதிப்பு சுமார் 12.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 1,000 லட்சம் கோடிக்கு மேல்).

It is a representation image only
அபுதாபியின் ராயல் பிரைவேட் அலுவலகங்கள் நிர்வகிக்கும் 344 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 28 லட்சம் கோடி) இந்த1.7 டிரில்லியன் அமெரிக்க டாலருடன் கணக்கிடப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அலுவலகம் அரசக் குடும்பத்தின் தனியார் முதலீடுகளைக் கையாளுகிறது. இந்த தனியார் சொத்துக்கள் அபுதாபியின் ஒட்டுமொத்த செல்வத்தை மேலும் அதிகரிக்கும்.
SWF என்றால் என்ன?
Sovereign Wealth Fund (SWF) என்பது அரசாங்கத்தால் நடத்தப்படும் முதலீட்டு நிதி நிறுவனமாகும், இது ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கிறது, இதன் லாபம் நாட்டின் பொருளாதாரத்தை ஆதரிக்க அல்லது எதிர்கால செலவினங்களுக்கு நிதியளிக்க பயன்படுத்தப்படுகிறது.
Sovereign Wealth Fund (SWF) அப்பால், மத்திய வங்கிகள் (CBக்கள்), பொது ஓய்வூதிய நிதிகள் (PPFகள்) மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புடைய குடும்ப அலுவலகங்கள் உட்பட பல்வேறு சொத்து உரிமையாளர்களை எமிரேட் கொண்டுள்ளது. அரச குடும்பத்தினரின் சொத்துக்களை நிர்வகிக்கும் அலுவலகங்கள் ராயல் பிரைவேட் அலுவலகங்கள் (RPO) என்று அழைக்கப்படுகிறது. தற்போது, அபுதாபியின் பொது மூலதனம் 2.3 டிரில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, 2030 ஆம் ஆண்டளவில் இது 3.4 டிரில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்கலாம் என்று கணிப்புகள் கூறுகின்றன.

It is a representation image only
அபுதாபியின் செல்வத்தை நிர்வகிப்பது யார்?
அபுதாபியின் SWF நிதிகள் பல முக்கிய முதலீட்டு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. அபுதாபி முதலீட்டு ஆணையம் (ADIA), முபதாலா, அபுதாபி முதலீட்டு கவுன்சில் (ADIC), அபுதாபி டெவலப்மென்டல் ஹோல்டிங் கம்பெனி (ADQ), Lunate, அபுதாபி ஃபண்ட் ஃபார் டெவலப்மெண்ட் (ADFD), Tawazun மற்றும் எமிரேட்ஸ் முதலீட்டு ஆணையம்(EIA) போன்றவை இதில் அடங்கும்.
2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும், அபுதாபியின் ADIA, Mubadala மற்றும் ADQ போன்ற நிறுவனங்கள் உலகளாவிய திட்டங்கள் மற்றும் வணிகங்களில் குறிப்பிடத்தக்க வகையில் 36 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளன. மேலும், அபுதாபி 3,107 பணியாளர்களுடன், முதலீட்டு நிதிப் பணியாளர்களின் அடிப்படையில் உலகில் முன்னணியில் உள்ளது. அதேசமயம் சிங்கப்பூர், ரியாத், கோலாலம்பூர் மற்றும் துபாய் போன்ற பிற நிதி மையங்கள் நிதி மேலாண்மைத் துறைகளில் சுமார் 1,000 பேரைப் பயன்படுத்துகின்றன.
அபுதாபியின் முதன்மை வருமான ஆதாரம் எது?
இந்த நகரத்தின் அபரிமிதமான செல்வத்திற்கான பயணம் 1958 இல் எண்ணெய் கண்டுபிடிக்கப் பட்டதிலிருந்து தொடங்கியது, இது அபுதாபியை ஒரு பெரிய எண்ணெய் உற்பத்தியாளராகவும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் முதலிடத்திற்கும் கொண்டு வந்தது. இன்று, அபுதாபி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எண்ணெய் இருப்புகளில் 95% மற்றும் அதன் எரிவாயு இருப்புகளில் 92% ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.
அபுதாபியின் முதன்மையான வருமான ஆதாரம் அதன் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில் ஆகும், எமிரேட்ஸ் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்புகளில் ஒன்றாகும். இந்தத் துறையானது பல தசாப்தங்களாக அபுதாபியின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கிறது, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியின் வருவாய் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிக்கிறது. இந்த வருவாய் அத்தியாவசிய உள்கட்டமைப்பு திட்டங்கள், பொது சேவைகள் மற்றும் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு நிதியளிக்கிறது.



Click it and Unblock the Notifications











