Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
World English Language Day 2025: தமிழ் மொழியில் இருந்து வந்த சில ஆங்கில வார்த்தைகள் பற்றி தெரியுமா?
World English Language Day 2025: உலகில் எத்தனையோ மொழிகள் உள்ளன. அதில் ஆங்கில மொழி சுமார் 840 மில்லியன் மக்களால் முதல் அல்லது இரண்டாவது மொழியாக பேசப்பட்டு வருகிறது மற்றும் சுமார் 50-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழி என்பது தெரியுமா?
இப்படிப்பட்ட ஆங்கில மொழியை கொண்டாடும் வகையிலும், ஆங்கில நாடக ஆசிரியரும், கவிஞருமான வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறப்பு மற்றும் இறப்பை நினைவுக்கூறும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலக ஆங்கில மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

பன்மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்காகவும், உலகில் ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தைக் கொண்டாடுவதற்காகவும் இந்த தினம் முதன்முதலில் 2010 இல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (யுனெஸ்கோ) நிறுவப்பட்டது.
உலகம் முழுவதும் பேசப்படும் பிரபலமான மொழிகளில் ஒன்றான ஆங்கில மொழியில் பயன்படுத்தப்படும் சில வார்த்தைகள் தமிழ் மொழியில் இருந்து வந்தது என்பது தெரியுமா? இப்போது தென்னிந்தியா, இலங்கை மற்றும் சிங்கப்பூரில் சுமார் 67.5 மில்லியன் மக்களால் பேசப்படும் திராவிட மொழியான தமிழிலிருந்து வந்த சில ஆங்கில சொற்களைக் காண்போம்.
1. கட்டமரன் (Catamaran)
தென்கிழக்கு இந்தியாவிற்கு வருகை தந்த 17 ஆம் நூற்றாண்டின் ஆங்கிய சாகசக்காரரான வில்லியம் டாம்பியர் என்ற புத்தகத்தில் கிராமத்தில் பயன்படுத்திய பழமையான படகு பற்றி குறிப்பிட்டுள்ளார். தமிழில் இந்த படகை கட்டுமரம் என்று அழைப்பர். இந்த கட்டுமரமானது ஒன்றாக கட்டப்பட்ட மரக்கட்டைகளைக் குறிக்கிறது. இப்படி தான் தமிழில் உள்ள 'கட்டுமரம்' என்ற சொல், ஆங்கிலத்தில் 'கட்டமரன்' என்று உருவானது.
2. செரூட் (Cheroot)
தமிழகத்தில் சுருட்டு என்ற புகையிலை சுருளை புகைக்கும் பழக்கம் உள்ளது. இந்த சுருட்டு என்ற சொல் புகையிலையை சுருட்டி குடித்து வந்ததன் மூலம் தமிழில் வந்தது. இந்த சொல் தான் அப்படியே ஆங்கிலத்தில் செரூட் என்று உச்சரிக்கப்பட்டது.
3. வெட்டிவர் (Vetiver)
பண்டைய தென்னிந்தியாவில் தண்ணீரை சுத்திகரிக்கவும், குளிர்விக்கவும் மண்பானைகளில் வெட்டிவேர் சேர்க்கப்பட்டது. நல்ல மணம் கொண்ட இந்த வேர், ஆங்கிலத்திலும் அதே பெயரில் 'வெட்டிவர்' என்று அழைக்கப்படுகிறது. இந்த வெட்டிவேர் அழகு துறைகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான முக்கிய பொருளாகும். இது அதன் குணப்படுத்தும் பண்புகளால் சோம்பு முதல் லோஷன் வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
4. காயிர் (Coir)
தமிழர்கள் ஒரு பொருளை இழுக்க, தூக்க மற்றும் கட்டுவதற்கு தென்னை நாரில் இருந்து தயாரிக்கப்பட்ட கயிற்றை பயன்படுத்தினர். இந்த கயிறு என்ற சொல் ஆங்கிலத்தில் காயிர் என்று அழைக்கப்படுகிறது. காயிர் என்றால் தேங்காயின் வெளிப்புற உமியிலிருந்து எடுக்கப்படும் நார் ஆகும்.
5. பகோடா (Pagoda)
பழங்காலத்தில் தமிழர்கள் பக்காவடை என்ற ஒரு சிற்றுண்டியை எண்ணெயில் பொரித்து உட்கொண்டு வந்தனர். தற்போது இந்த பக்காவடையின் ஆங்கில உறவினர் தான் பகோடா. இந்த பகோடா வியட்நாம், சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், இங்கிலாந்து மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் பெரும்பாலான மக்களின் விருப்பமான உணவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
என்ன நண்பர்களே! ஆங்கில மொழியில் தமிழ் மொழியின் செல்வாக்கு பற்றி அறிந்து கொண்டீர்களா? உங்கள் மொழியிலிருந்து ஆங்கில மொழி கடன் வாங்கியதாக உங்களுக்குத் தெரிந்த ஏதாவது சொல் இருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
