Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
69 குழந்தைகளை பெற்றெடுத்த நம்ப முடியாத சாதனை படைத்த ரஷ்ய பெண்... இவர் எத்தனை வருடம் கர்ப்பமா இருந்திருப்பார்?
ஒரு குழந்தையை கருத்தரித்து பெற்றெடுத்து வளர்ப்பது என்பது சாதாரண செயலல்ல, அதற்கு நிறைய அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புத் தேவை. உடல்ரீதியான மாற்றங்கள் முதல் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் வரை, கர்ப்பத்திற்கு உடல்ரீதியாக அதிக அர்ப்பணிப்பு தேவைப்படலாம். ஒரு குழந்தையை ஒன்பது மாதங்கள் சுமப்பது என்பது ஒரு பெண்ணின் உடலில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்குகிறது.
பெற்றோராக மாறும்போது நீங்கள் பல்வேறு உணர்வுகளுக்கு ஆளாகலாம் மற்றும் குழந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வது நிதிரீதியான சவால்களை ஏற்படுத்தலாம். அதனால்தான் பல பெண்கள் தற்போது ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்ள விரும்புகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் ஒரு பெண் 69 குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ரஷ்யாவில் வசித்த வாலண்டினா வாசிலியேவ் என்ற பெண் 1725 மற்றும் 1765 க்கு இடையில் 69 குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது.
மாஸ்கோவில் உள்ள அரசாங்கத்திற்கு ஒரு உள்ளூர் தேவாலய அறிக்கையின்படி, ரஷ்ய விவசாயி ஃபியோடர் வாசிலியேவின் மனைவி திருமதி. வாசிலியேவ், 16 ஜோடி இரட்டைக் குழந்தைகளையும், ஏழு மூன்று குழந்தைகளையும், நான்கு நான்கு குழந்தைகளையும் பெற்றெடுத்தார். இவை அனைத்தும் 27 தனித்தனி பிரசவங்கள் மூலம் 1725 மற்றும் 1765. அதாவது மொத்தம் 69 குழந்தைகள் பிறந்ததாக பிபிசி தெரிவித்துள்ளது.
திருமதி. வாசிலியேவ் தனது பெயரை கின்னஸ் புத்தகத்தில் 'மிகவும் ஆரோக்கியமான தாய்' என்று பதிவு செய்துள்ளார். அதோடு, ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவெனில், ஃபியோடர் வாசிலியேவ் பின்னர் மற்றொரு பெண்ணை மணந்தார், அவர் எட்டு முறை கர்ப்பமாகி 18 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். வாசிலியேவின் இரண்டு மனைவிகளுக்குப் பிறந்த 87 குழந்தைகளில் 84 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்; மீதமுள்ள 3 குழந்தைகளும் பிறந்த சில நாட்களில் இறந்தனர்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்க அறிவியல் மற்றும் மகளிர் சுகாதார ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குநர் ஜேம்ஸ் சேகர்ஸ் இது குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். ஒருவர் 60 குழந்தைகள் பெற்றுக்கொள்வது சாத்தியமா? இது கேட்பதற்கே மிகவும் அதிசயமாக இருக்கிறது. இனப்பெருக்க நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பதன் மூலம் இந்த நம்ப முடியாத மற்றும் சந்தேகத்திற்குரிய கூற்றை சற்று ஆழமாக ஆராய முடிவு செய்தேன். ஒரு பெண் இயற்கையாக எத்தனை குழந்தைகளைப் பெற முடியும் என்பதற்கான அடிப்படை வரம்புகளைக் கண்டுபிடிப்பதே எனது நம்பிக்கை. ஆனால், நவீன அறிவியலின் கோட்பாட்டின் படி, ஒரு பெண், நாம் நினைத்ததை விட அதிகமான குழந்தைகளுக்கு தாயாக முடியும் என்பதையும் நான் கண்டுபிடித்தேன், "என்று அவர் கூறினார்.
பெண்களின் கருவுறுதல் பற்றி ஜேம்ஸ் கூறுகையில், பெண்கள் பொதுவாக 15 வயதிற்குள் மாதவிடாய்க்கு ஆளாகிறார்கள், அவர்களின் கருப்பைகள் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் ஒரு முட்டையை வெளியிடத் தொடங்குகின்றன. மாதவிடாய் நிறுத்தத்தில் முட்டை சப்ளை தீர்ந்து விடும் வரை இந்த அண்டவிடுப்பு தொடர்கிறது, இதன் வழக்கமான தொடக்கம் 51 வயதாகும்.
மாதவிடாய் நிறுத்தப்படுவதற்கு முன்பு, பெண்களின் கருவுறுதல் குறையும், ஒரு பெண்ணுக்கு 45 வயதாக இருக்கும் போது, ஒரு சுழற்சியில் குழந்தை பெறும் வாய்ப்பு மாதத்திற்கு 1 சதவிகிதம் மட்டுமே இருக்கும் என்று கூறியுள்ளார்.
வாஸ்லியேவ் வழக்கைப் பொறுத்தவரை, 40 வருட கால இடைவெளியில் 27 கர்ப்பங்கள் இருந்திருக்கலாம். அதிலும் இரட்டைக் குழந்தைகள், மூன்று அல்லது நான்கு குழந்தைகள் வழக்கமான கர்ப்பத்தை விட விரைவில் பிறக்க வாய்ப்புள்ளதால், அவர் 40 வருடத்தில் தோராயமாக 18 ஆண்டுகள் கர்ப்பத்தில் கழித்திருக்கலாம்.



Click it and Unblock the Notifications
