Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
மகாத்மா காந்தி 5 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டும் ஏன் அவருக்கு நோபல் பரிசு கிடைக்கவேயில்லை தெரியுமா?
2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நோபல் பரிசுகளை சுற்றி எப்போதும் சர்ச்சைகளுக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. ஏனெனில் மெனாச்செம் பெகின், ஷிமோன் பெரெஸ், அன்வர் சதாத் மற்றும் யிட்சாக் ராபின் போன்ற போர் வெறியர்களும், பயங்கரவாதி என்று கூறப்படும் யாசர் அராபத் கூட அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றனர், ஆனால் நமது தேசத்தந்தையான மகாத்மா காந்தி 5 முறை நாமினேட் செய்யப்பட்டும் அவருக்கு ஒருமுறை கூட நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
மகாத்மா காந்தியின் கொள்கைகளை பின்பற்றிய தலாய் லாமா, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் நெல்சன் மண்டேலா போன்ற அவரது சீடர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது, ஆனால் அவர் புறக்கணிக்கப்பட்டார். ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்ட போதிலும் காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு ஏன் வழங்கப்படவில்லை?

மகாத்மா காந்தியும், நோபல் பரிசும்
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவை மீட்க அகிம்சை வழியில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஐந்து முறை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்த பரிந்துரைகள் 1937, 1938, 1939 மற்றும் 1947 ஆம் ஆண்டிலும், அவர் படுகொலை செய்யப்படுவதற்கு சில மாதங்கள் முன்பு 1948 இல் கூட பரிந்துரை செய்யப்பட்டது.
ஊடக அறிக்கைகளின்படி, அமைதி மற்றும் அகிம்சையை ஊக்குவிப்பதில் காந்தி மிகப்பெரிய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவர் ஒருபோதும் அமைதிக்கான நோபல் பரிசைப் பெறவில்லை, இது காலப்போக்கில் மிகப்பெரிய விவாதத்தையும், சந்தேகங்களையும் உருவாக்கிய ஒரு விஷயமாக மாறியது.
மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு வழங்கப்படாத காரணங்கள்
மகாத்மா காந்தி நோபல் பரிசு பெறுவதில் இருந்து விலக்கப்பட்டதற்கு சிக்கலான மற்றும் பல்வேறு விஷயங்கள் காரணமாக இருந்தது. அதில் முக்கிய சவால்களில் ஒன்று, நோபல் பரிசை வழங்கும் குழுவால் விருது பெறக்கூடியவர்களுக்கான வழக்கமான அளவுகோல்களை காந்தி பூர்த்தி செய்யவில்லை என்பதுதான்.
அவர் ஒரு அரசியல்வாதி அல்லது சர்வதேச சட்டத்தை ஆதரிப்பவர் என்ற வரையறைக்குள் வரவில்லை என்பதும், மனிதாபிமான நிவாரண முயற்சிகள் அல்லது சர்வதேச அமைதி கூட்டங்களை ஒழுங்கமைப்பதில் அவர் முதன்மையாக ஈடுபடவில்லை என்பதும் நோபல் கமிட்டி கூறிய காரணமாக இருந்தது.
மகாத்மா காந்தி அமைதி மற்றும் அகிம்சையை நோக்கி எடுத்த அணுகுமுறை தனித்துவமானது மற்றும் புதுமையானதாக இருந்தது. நோபல் குழுவின் நிறுவப்பட்ட கட்டமைப்பிற்குள் அவரது பங்களிப்புகளை மதிப்பிடும்போது மகாத்மா காந்தி பின்பற்றிய அகிம்சையின் தனித்துவம் அவர்களின் வரையறைகளை பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தியா-பாகிஸ்தான் மோதல்
மகாத்மா காந்தியின் அமைதி குறித்த நிலைப்பாடு மற்றும் 1947 இந்தியா-பாகிஸ்தான் மோதலில் அவரது பங்கு குறித்து நோபல் குழு சந்தேகங்களை எழுப்பியது. மகாத்மா காந்தி போரில் ஈடுபட்ட ஒரு தரப்பினருக்கு வெளிப்படையான விசுவாசத்தைக் காட்டினார் என்றும், போரை அவர் உறுதியாக புறக்கணிப்பது குறித்து நிச்சயமற்ற தன்மைகள் இருந்தன என்றும் சில குழு உறுப்பினர்கள் கருதினர். இந்த கருத்துக்கள் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்காததற்கு முக்கியக் காரணமாக கருதப்பட்டது.
மகாத்மா காந்தியின் படுகொலையும் முக்கிய காரணம்
தற்கால அணுகுமுறைக்கு மாறாக, நோபல் பரிசு வழங்கும் குழு அந்த நேரத்தில் பிராந்திய மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளை ஊக்குவிப்பதற்கான ஒரு வழிமுறையாக அமைதிக்கான நோபல் பரிசைப் பயன்படுத்தவில்லை. மேலும் இறந்தவர்களுக்கு நோபல் பரிசுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் இல்லாததால் மகாத்மா காந்தி இறந்த பிறகும் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. 1948 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரைகளுக்கான காலக்கெடுவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மகாத்மா காந்தியின் படுகொலை நிகழ்ந்தது துரதிர்ஷ்டவசமானது.
அந்த காலகட்டத்தில் நோபல் அறக்கட்டளையின் விதிமுறைகள் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மரணத்திற்குப் பிந்தைய விருதுகளை அனுமதித்திருந்தாலும், மகாத்மா காந்தியின் வழக்கு ஒரு தனித்துவமான சவாலைக் கொண்டு வந்தது. அவர் எந்த அமைப்புடனும் தொடர்புடையவர் அல்ல, மேலும் அவர் தனது விருப்பப்படி பரிசுத் தொகையைப் பெறுவதற்கு யாரையும் நிர்ணயிக்கவில்லை.
நோபல் பரிசு கமிட்டியின் வருத்தம்
மகாத்மா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்காத முடிவை, நோபல் குழுவின் உறுப்பினர்கள் பகிரங்கமாக வருத்தத்துடன் ஒப்புக்கொண்டனர். 1989 ஆம் ஆண்டில், தலாய் லாமா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றபோது, குழுவின் தலைவர், இந்த விருது, ஒரு வகையில், மகாத்மா காந்தியின் நினைவைப் போற்றும் ஒரு வழியாகும் என்று குறிப்பிட்டார்.



Click it and Unblock the Notifications
