Latest Updates
-
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.! -
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
1500 ஆண்டுகளாகியும் கண்டுபிடிக்க முடியாத பிம்பிசாரரின் ரகசிய புதையல்..ஏன் இன்னும் எடுக்க முடியவில்லை தெரியுமா?
இந்தியா புதையல்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்திய வரலாற்றில் பல சக்திவாய்ந்த மற்றும் செல்வந்தரான பேரரசர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் பல பேரரசர்கள் தங்கள் செல்வத்தை தங்களின் எதிர்கால சந்ததியினருக்காக புதையல்களாக மறைத்து வைத்துவிட்டு சென்றனர். ஆனால் பெரும்பாலான மன்னர்களின் வாரிசுகள் அந்த புதையல்களை கண்டுபிடிக்கவில்லை.
பல நூற்றாண்டுகளுக்கு பிறகு இப்படி கண்டறியப்பட்டு புதையல்களைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம், ஆனால் ஆயிரக்கணக்கான பேர் முயற்சித்தும் இன்னும் கண்டுபிடிக்க முடியாத புதையல்கள் இன்னும் இந்தியாவில் நிறைய உள்ளன. அப்படி பலரும் முயற்சித்து நெருங்க முடியாத ஒரு மாபெரும் புதையல்தான் பிம்பிசாரர் புதையல். இந்த பிரம்மாண்ட புதையலைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பிம்பிசாரர் புதையல்
உள்ளூர் புராணங்களின்படி, நாளந்தாவில் உள்ள பண்டைய நகரமான ராஜ்கீரில் உள்ள ஒரு மர்மமான குகையில் ஒரு புதையல் மறைக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்தக் குகை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மூடப்பட்டிருப்பதால், அந்த புதையலை அணுகுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இந்த புதையல் கிமு 540 இல் மகதப் பேரரசின் செல்வந்த மன்னரான பிம்பிசாரருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது, அவர் கிமு 544 முதல் கிமு 413 வரை பண்டைய இந்திய அரசை ஆண்ட ஹரியங்கா வம்சத்தை நிறுவினார்.
வரலாற்று குறிப்புகளின் படி மன்னர் பிம்பிசாரர் புத்த மதத்திற்கு மாறிய பின்னர், தனது செல்வத்தின் பெரும்பகுதியை ஏழைகளுக்குக் கொடுத்தார், இது அவரது மகன் அஜாதசத்ருவை கோபப்படுத்தியது, அவர் தனது பரம்பரை செல்வத்தை இழப்பதாக நினைத்ததால், இறுதியில் தனது தந்தையைக் கொன்று தனது செல்வத்தை உரிமை கோரினார்.
இருப்பினும், அஜாதசத்ரு தங்கத்தை அபகரிப்பதற்கு முன்பு, பிம்பிசாரரின் மனைவி அதை ரகசியமாக வைர தேவன் என்ற சமண துறவியிடம் கொடுத்து, புதையலை குகைகளில் மறைத்து, ஒரு 'மந்திர பூட்டால்' மூடிவிட்டார் என்று கூறப்படுகிறது. பிம்பிசாரர் புதையல், ராஜ்கீரில் உள்ள வைபர் மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள பீகாரில் உள்ள சோன் பந்தர் குகைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
தனது கணவர் சேகரித்த தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருட்களைத் தவிர, ராணி தனது நகைகளையும் துறவிக்குக் கொடுத்தார், இது மறைக்கப்பட்ட பிம்பிசார புதையலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிம்பிசாரர் புதையலைக் கண்டுபிடிக்க நடத்தப்பட்ட முயற்சிகள்
பல நூற்றாண்டுகளாக, புதையல் வேட்டைக்காரர்கள் மறைக்கப்பட்ட பிம்பிசார புதையலைக் கண்டுபிடிக்க நூற்றுக்கணக்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர், இதில் பல் பிரிட்டிஷ்காரர்களும் அடங்குவர், அவர்கள் குகையின் சுவர்களை வெடிபொருட்களால் வெடிக்கச் செய்து உள்ளே நுழைய முயன்றனர். ஆனால் யாராலும் அந்த குகைக்குள் உள்ளே செல்ல முடியவில்லை.
குகையின் நுழைவாயில் ஒரு 'மந்திரப் பூட்டால்' மூடப்பட்டிருப்பதாகவும், குகைகளில் உள்ள ஒரு கல்வெட்டில் புதையலை எடுப்பதற்குத் தேவையான 'Password' இருப்பதாகவும் புராணக்கதை கூறுகிறது. ஆனால் யாராலும் இதுவரை யாராலும் கல்வெட்டைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மன்னர் பிம்பிசாரர் மட்டுமே குகைகளை திறக்கும் வழியைத் அறிந்திருந்தார் என்றும், அவர் அந்த ரகசியத்தை தனது கல்லறையோடு சேர்ந்து மறைந்து போகும்படி செய்ததாகவும் கூறப்படுகிறது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சோன் பந்தர் குகைகள், மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், இந்தியாவில் எஞ்சியிருக்கும் கடைசி பாறையில் வெட்டப்பட்ட குகை இதுவென்றும் நம்பப்படுகிறது. இப்போது இல்லாவிட்டாலும் இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்தாவது இந்த குகைகள் திறக்கப்படலாம். அப்படி அப்போது திறக்கிறவர்களுக்கு இது மிகப்பெரிய ஜாக்பாட்டாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
