Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
உலகம் முழுக்க ஏன் ATM PIN நம்பர் 4 இலக்கத்திலேயே உள்ளது தெரியுமா? அதற்கு பின்னால் உள்ள சுவாரஸ்யமான வரலாறு!
நமது பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணத்தை எடுப்பதில் இருந்து உங்கள் கிரெடிட் கார்டு பில்களை செலுத்துவது மற்றும் பணத்தை டெபாசிட் செய்வது வரை அனைத்திற்கும் நமக்கு உதவுவது ATM தான். ஒவ்வொரு வங்கிக்கும் பல ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன, இந்தியாவில் சராசரியாக, நகர்ப்புறங்களில் ஒரு கிலோமீட்டருக்கு குறைந்தபட்சம் 5 ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் கிராமங்களில் ஒரு வங்கிக்கு குறைந்தபட்சம் ஒரு ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளது. வெளியூர்களுக்கு நாம் தைரியமாக பயணம் செய்வது ATM-கள் இருக்கும் நம்பிக்கையில்தான்.

நம் வாழ்க்கையை எளிதாக்கும், இந்த இயந்திரங்கள் உண்மையில் எவ்வாறு தயாரிக்கப்பட்டன என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? இந்த இயந்திரங்கள் எப்படி வேலை செய்கிறது, அதன் PIN நம்பர் ஏன் 4 இலக்கத்தில் மட்டும் இருக்கிறது? ஏடிஎம் இயந்திரம் நாம் கொடுக்கும் பணத்தின் மதிப்பை எப்படி கணக்கிடுகிறது என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா? இந்த பதிவில் ATM இயந்திரங்கள் பற்றிய பல உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.
ஏடிஎம் PIN ஏன் 4 இலக்கங்களில் உள்ளது?
இந்த கேள்விக்கான பதில் உண்மையில் வேடிக்கையானதாக இருக்கும். ஏடிஎம் இயந்திரங்களை முதன் முதலில் உருவாக்கிய ஜான் ஷெப்பர்ட்-பரோன், முதல் இயந்திரத்தை வடிவமைத்தபோது, அவர் PIN நம்பரை ஆறு இலக்கங்களாகத்தான் வைத்திருந்தார், அதனால் எண்களின் காம்பினேஷன்கள் பெரியதாகவும் சிக்கலானதாகவும் இருக்கும்.
அவரது மனைவி கரோலின் முர்ரே, 6 இலக்கங்கள் மிகவும் அதிகம் என்றும், மக்கள் தங்கள் PIN நம்பரை மறந்து விடுவார்கள் என்றும் கருத்து தெரிவித்தார். ஏனெனில் அவருக்கே PIN நம்பரை நினைவில் வைத்துக் கொள்வது கடினமாக இருந்தது, எனவே, அவர் PIN நம்பரை 4 இலக்கமாகக் குறைத்துக்கொண்டார், அது நினைவில் கொள்ள எளிதாக இருந்தது.
பணத்திற்கு பதில் தங்கம் கொடுக்கும் ATM
உண்மையான தங்கக் கட்டிகள், நாணயங்கள் மற்றும் நகைகளை வழங்கும் ஏடிஎம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த ஏடிஎம், தங்கம் அல்லது அதற்கு பதிலாக தங்க முலாம் பூசப்பட்ட உலோகத்தால் செய்யப்பட்டிருக்கும் மற்றும் நீங்கள் உள்ளிடும் தொகை மற்றும் அன்றைய தங்கத்தின் விலைக்கு ஏற்ப தங்கத்தை வழங்கும். அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் பேலஸ் ஹோட்டலில் இந்த ATM உள்ளது மற்றும் 320 தங்க பொருட்களை தேர்வு செய்ய ஆப்ஷனை வழங்குகிறது.
ஏடிஎம் இயந்திரம் திருடப்பட்டால் என்ன செய்வது?
ரயில் பாலங்கள், பஸ் ஸ்டாண்ட் போன்றவற்றையே திருடும் திருடர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்களுக்கு பணம் நிறைந்த ATM இயந்திரம் ஒரு பொருட்டே இல்லை. ஒரு திருடன் முழு இயந்திரத்தையும் அகற்ற முடிவு செய்தால், அவர்களால் நீண்ட தூரம் செல்ல முடியாது. ஒவ்வொரு ஏடிஎம் இயந்திரமும் ஜிபிஎஸ் சிஸ்டம் மற்றும் சிப் லொக்கேட்டருடன் முன்பே நிறுவப்பட்டிருப்பதால், ஏடிஎம் திருடப்பட்டவுடன், அது இருக்கும் இடத்தை வங்கியால் எளிதாகக் கண்காணிக்க முடியும்.
எந்த நாளில் ATM அதிகம் பயன்படுத்தப்படுகிறது?
வங்கிகள் மூடப்பட்டிருப்பதால், வார இறுதியில் ஏடிஎம்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்று நீங்கள் நினைத்தாலும், நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறாகும். உண்மையில் வெள்ளியன்று அதிகப் பணம் எடுப்பதால் ATMகள் அந்த நாளில்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
பயோமெட்ரிக் ATM PIN
பிரேசிலில், மக்கள் பணத்தைப் பாதுகாக்க ஏடிஎம் PIN நம்பரை நம்புவதில்லை. அவர்களின் ஏடிஎம் கார்டுகளைப் பாதுகாப்பதற்கும் பணத்தைப் பாதுகாப்பதற்கும் கைரேகைகள் மற்றும் மணிக்கட்டு நரம்பு பயோமெட்ரிக்ஸ் போன்றவற்றை பயன்படுத்தும் ATM கள் உள்ளன.
இந்தியாவில் முதல் ஏடிஎம் எப்போது வந்தது?
1939 ஆம் ஆண்டிலேயே ஏடிஎம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அது 1986 ஆம் ஆண்டுதான் இந்தியாவிற்கு வந்தது. நாட்டிலேயே முதன்முறையாக HSBC நிறுவனத்தால் மும்பையில் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டது, அப்போது இது சாமானியர்களுக்கானதாக இல்லை, பணக்காரர்களுக்கு மட்டுமே இந்த சேவை கிடைத்தது. மேலும், இந்திய வங்கிகள் ஏடிஎம்களை ஓவர் டிராஃப்ட் சேவையாகப் பயன்படுத்தின. எனவே முதல்நாள் நீங்கள் தொகையை எடுத்தால், மறுநாள் அது உங்கள் கணக்கில் டெபிட் செய்யப்பட்டதாகக் காட்டப்படும்.
உலகின் மிக உயரமான ஏடிஎம்
உலகிலேயே மிக உயரமான ஏடிஎம் இந்தியாவில்தான் உள்ளது. இமயமலையின் மலைப்பாதையின் நாது-லா வில் உள்ள இந்த ATM யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவால் இயக்கப்படுகிறது. ஏடிஎம் மையமானது முக்கியமாக அப்பகுதியில் அமைந்துள்ள ராணுவ வீரர்களின் நன்மைக்காக வைக்கப்பட்டிருந்தாலும், சுற்றுலா பயணிகள் பணம் எடுக்கவும் இது உதவுகிறது.



Click it and Unblock the Notifications












