Latest Updates
-
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்!
இந்தியாவில் 5000 மற்றும் 10000 ரூபாய் நோட்டுகள் இருந்ததாம்... இது ஏன், யாரால் தடைசெய்யப்பட்டது தெரியுமா?
2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதுவரை புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடைசெய்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் தங்களிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்ற பல நாட்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினர்.
கறுப்பு பணத்தை மீட்பதற்கு என்று எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை கறுப்பு பணத்தை மீட்டதா என்றால் அது கேள்விக்குறிதான். இந்த நிலையில் சமீபத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளும் ரிசர்வ் வங்கியால் மீண்டும் பெறப்பட்டது.

2000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை மாற்றுவதற்கே நாம் படாதபாடு பட்டோம். ஆனால் ஒரு காலத்தில் நம் நாட்டில் 5000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் கூட புழக்கத்தில் இருந்தது. இந்தியாவில் அச்சிடப்பட்ட மிகப்பெரிய மதிப்புக் கொண்ட ரூபாய் நோட்டுகள் இவைதான். பெரும்பாலான மக்களுக்கு இந்தியாவின் இந்த பணத்தைப் பற்றியும், அது ஏன் தடை செய்யப்பட்டது என்பது பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எப்போது புழக்கத்திற்கு வந்தது?
1938 ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி முதல் 10,000 ரூபாய் நோட்டை வெளியிட்டது, அதுவரை இந்தியாவில் அச்சிடப்பட்ட நோட்டுகளில் இது உயர்ந்த மதிப்பைக் கொண்டதாக இருந்தது.
அன்றைய காலகட்டத்தில் பொதுமக்களுக்கு 100 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகையாக இருந்தது. சாதாரண குடிமக்கள் இந்த தொகையை கையாள முடியாததால், இது முதன்மையாக வணிகங்கள் மற்றும் வர்த்தகர்களால் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்டது மற்றும் குறைவாகவே அச்சிடப்பட்டது.
ஜனவரி 1946 இல், பிரிட்டிஷ் அரசாங்கம் 10,000 ரூபாய் நோட்டை பணமதிப்பிழப்பு செய்ய முடிவு செய்தது, இது இரண்டாம் உலகப் போரின் போது அதிகரித்த பதுக்கல் மற்றும் கறுப்புச் சந்தை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் செய்யப்பட்டது. ஆனால் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு 10,000 ரூபாய் நோட்டுகள் 1954 இல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் ரூ.5,000 நோட்டு போன்ற பெரிய மதிப்புகளுடன் தொடர்ந்து புழக்கத்தில் இருந்தது.
மீண்டும் மதிப்பிழப்பு செய்யப்பட காரணம் என்ன?
10,000 ரூபாய் நோட்டு 1978 இல் மீண்டும் ஒரு திருப்பத்தை சந்தித்தது. இந்திய அரசாங்கம் 5000 ரூபாய் நோட்டுகளுடன் 1000 ரூபாய் நோட்டுகளையும் தடை செய்ய முடிவெடுத்தது. ஏனெனில் அந்த காலகட்டத்தில், இந்த உயர் மதிப்பு நோட்டுகள் பொது மக்களால் பயன்படுத்தப்படவில்லை, மேலும் அவை பெரும்பாலும் வர்த்தகத்தில் பெரிய பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன மற்றும் கறுப்புச் சந்தை பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்பட்டன.
பிரதம மந்திரி மொரார்ஜி தேசாய் தலைமையிலான இந்த நடவடிக்கை, நிதி முறைகேட்டைச் சமாளிப்பதற்கும், பெரிய அளவிலான பணத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகவும் செய்யப்பட்டது.
2026 பண மதிப்பிழப்பு போல அல்லாமல் இந்த பண மதிப்பிழப்பின் பாதிப்பு குறைவாகவே இருந்தது. ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, மார்ச் 31, 1976 நிலவரப்படி புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தின் அளவு ரூ.7,144 கோடி மட்டுமே.
இதில் 1,000 ரூபாய் நோட்டுகள் ரூ.87.91 கோடியாகும், இது புழக்கத்தில் உள்ள மொத்த பணத்தில் வெறும் 1.2% மட்டுமே. மேலும் 5,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 22.90 கோடி மற்றும் 10,000 ரூபாய் நோட்டுள் 1,260 மட்டுமே புழக்கத்தில் இருந்தது. மொத்தத்தில், இந்த உயர் மதிப்புடைய நோட்டுகள் மொத்த பணத்தில் 2% க்கும் குறைவாகவே இருந்தன.
மீண்டும் கொண்டுவர நடத்தப்பட்ட முயற்சி
2014 ஆம் ஆண்டு 5,000 மற்றும் 10,000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து சில பரிசீலனைகள் நடந்தன. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இந்த உயர் மதிப்பு நோட்டுகளை மீண்டும் கொண்டு வரலாம் என்று பரிந்துரைத்தார், ஆனால் இறுதியில் அந்த யோசனை கிடப்பில் போடப்பட்டது. 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டபோது, அரசாங்கம் 2,000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த முடிவு செய்தது.



Click it and Unblock the Notifications

