Latest Updates
-
உங்க முகம் கருப்பா, டல்லா இருக்குதா? அப்ப இந்த ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
1 தேங்காயும், 1 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
'ஸ்ராவண' மாதத்தில் சிவபெருமானின் ஆசியால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவில்களிலும், பூஜையிலும் தேங்காய் ஏன் உடைக்கப்படுகிறது? அதற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? -
மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கப்போகுது.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்ற ராசிகளை விட அதிக காம உணர்வு கொண்டவர்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பீர்க்கங்காயை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்-ல இருக்கும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளி சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் நோய் இயற்கையா சரியாகணுமா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற 'இத' குடிங்க.. -
இந்த 4 நபர்களை தூக்கத்திலிருந்து எழுப்புவது உங்களை ஆபத்தில் சிக்க வைக்குமாம் - சாணக்கிய தந்திரம்
தனுஷ், சிவகார்த்திகேயன் போல.. கருங்காலி மாலையை யாரெல்லாம் அணியலாம்? அதன் நன்மைகள் என்ன?
Karungali Malai Benefits In Tamil: சமீப காலமாக கருங்காலி மாலையை நிறைய ஆண்கள் வாங்கி அணிகிறார்கள். ஏனெனில் நடிகர்களான தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் தங்களின் கழுத்தில் கருங்காலி மாலையை அணிந்திருக்கின்றனர்.
இதனால் இவர்களின் ரசிகர்கள் பலரும் இவர்களது ஸ்டைலை பின்பற்றி வருகிறார்கள். ஆனால் இந்த மாலை நல்ல ஸ்டைலான தோற்றத்தைத் தருவது மட்டுமின்றி, பல நன்மைகளையும் வழங்கும் என்பது தெரியுமா?

கருங்காலி மரத்தில் இருந்து தயாரிக்கப்படுவது தான் கருங்காலி மாலை. இந்த கருங்காலி ஒரு சக்தி வாய்ந்த, மருத்துவ குணங்கள் கொண்ட மற்றும் அதிசயங்களைப் புரியக்கூடிய அற்புதமான மரம்.
இந்த கருங்காலி தற்போது மாலை வடிவத்தில் பிரபலமாக உள்ளது. ஆனால் இந்த கருங்காலி மரமானது கோவில் கோபுரங்கள், கோவில் சிலைகள், உலக்கை, குறிபார்ப்பவர்கள் கையில் மந்திரக்கோல் மற்றும் பல வீட்டு பொருட்களில் இது பயன்படுத்தப்படுகிறது என்பது தெரியுமா?
நிறைய பேரின் மனதில் கருங்காலி மாலையை யாரெல்லாம் அணியலாம், அணியக்கூடாது, எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் மற்றும் எந்த நாட்களில் இந்த மாலையை அணிய வேண்டும் என்பன போன்ற பல கேள்விகள் இருக்கும். இந்த அனைத்து கேள்விகளுக்குமான விடையை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
கருங்காலியின் ஜோதிட முக்கியத்துவம்
ஜோதிட ரீதியாக, கருங்காலி மரமானது செவ்வாய் கிரகத்திற்கு உரிய மரமாகும். மேலும் கருங்காலி மரத்திற்கு செவ்வாய் கிரகத்தால் சந்திக்கும் விளைவுளைக் கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது. கருங்காலி மாலையை ஒருவர் அணிந்திருந்தால், அந்நபர் செவ்வாய் தோஷத்தைக் கொண்டிருந்தால், அந்த தோஷத்தின் தாக்கம் குறையும்.
கருங்காலி மாலையை எப்போது அணிய வேண்டும்?
கருங்காலி மாலையை அனைவருமே அணியலாம். அதுவும் எந்த ஒரு நல்ல நாளிலும் நல்ல நேரத்தில் அணியலாம். இருப்பினும், இந்த மாலையை செவ்வாய் கிழமைகளில் அணிவது மங்களகரமானது. அதுவும், அணிவதற்கு முன்அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது வராஹி அம்மன் கோவிலில் தெய்வத்திற்கு முன் வைத்து எடுத்து அணிய வேண்டும். இப்படி அணிவதே உத்தமம்.
யாரெல்லாம் கருங்காலி மாலையை அணியலாம்?
* குழந்தைகள், பெண்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் கருங்காலி மாலையை அணியலாம்.
* செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கருங்காலி மாலையை அணிந்தால், செவ்வாய் தோஷத்தால் சந்திக்கும் பிரச்சனைகள் குறையும்.
* படிக்கும் மாணவர்கள் கருங்காலி மாலையை அணியலாம். இதனால் நினைவாற்றல் அதிகரிக்கும் மற்றும் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
* தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் தொழிலில் முன்னேற்றத்தைக் காண கருங்காலி மாலையை அணியலாம்.
* வேலையைத் தேடிக் கொண்டிருப்பவர்கள் ருங்காலி மாலையை அணிந்தால் நல்ல வேலை விரைவில் கிடைக்கும். அதேப் போல் பணிபுரிபவர்கள் அணிந்தால், பணியிடத்தில் பதவி உயர்வை அல்லது நல்ல சம்பளத்துடனான வேலையைப் பெறலாம்.
* கண் திருஷ்டி, பில்லி, சூனியத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட இந்த கருங்காலி மாலையை அணியலாம்.
* கருங்காலி மாலை எதிர்மறை சக்திகளை விரட்டும் ஆற்றல் கொண்டது.
* கருங்காலியை மாலையாக மட்டுமின்றி, பிரேஸ்லெட், வளையல் மற்றும் பிற வடிவங்களிலும் அணியலாம். எப்படி அணிந்தாலும், அது நல்ல பலனை வாரி வழங்கும்.
கருங்காலி மாலையை அணிவதால் பெறும் நன்மைகள்
* கருங்காலி மாலை நல்வாழ்வை அமைத்து, ஆன்மீக பாதையில் வாழ ஊக்குவிக்கும்.
* கருங்காலி மாலை செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தைக் குறைக்கும்.
* கருங்காலியில் அனைத்து தெய்வங்களும் வசிப்பதாகவும், இதை மாலையாக அணிந்தால், அனைத்து தெய்வங்களின் ஆசிகளையும் பெறலாம்.
* கருங்காலி நவகிரகங்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் மற்றும் எதிர்மறை விளைவைத் தடுக்கும்.
* ஒருவரது குலதெய்வம் கருங்காலியில் வசிப்பதாக கூறப்படுகிறது. எனவே குலதெய்வத்தின் ஆசீர்வாதம் எப்போதும் கிடைக்க இந்த மாலையை அணியலாம்.
எந்த ராசிக்காரர்கள் கருங்காலி மாலையை அணியலாம்?
கருங்காலி மாலையை மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் அணிவது கூடுதல் நன்மை தரும். அதேப் போல் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அணிவது நல்லது. அதுமட்டுமன்றி, 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் கருங்காலி மாலையை அணியலாம்.



Click it and Unblock the Notifications