Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
இந்த 4 ராசிக்காரங்க காதல் தோல்வியிலிருந்து வெளிய வரவே மாட்டாங்களாம்..அதில் சிக்கியே வாழ்க்கைய அழிச்சுக்குவாங்க
காதலிக்கும் அனைவருக்குமே தங்கள் காதல் வெற்றிபெற வேண்டும் என்ற ஆசை இருக்கும், ஆனால் அனைவருக்கும் அந்த அதிர்ஷ்டம் கிடைத்து விடுவதில்லை. சிலரின் காதல்கள் தோல்வியில் முடியலாம், ஆனால் ஒருவரின் வாழ்க்கை அதோடு முடிந்து விடுவதில்லை.
சிலர் காதல் தோல்வியிலிருந்து சீக்கிரம் வெளிவந்து வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகரும் போது சில ராசிக்காரர்கள் அந்த தோல்வியிலேயே நின்று விடுவார்கள். அவர்கள் அந்த காதல் தோல்வியிலிருந்து வெளிவர நீண்ட காலம் எடுத்துக் கொள்ளலாம் அல்லது வெளியே வராமலேயும் போகலாம். அவர்களின் இந்த முட்டாள்தனமான பிடிவாதத்திற்கு என்ன காரணமென்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா?

ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் தங்கள் தனிப்பட்ட குணாதிசயங்கள் மற்றும் உணர்ச்சி வடிவங்களால் உந்தப்பட்டு, காதல் முறிந்தும் நீண்ட காலத்திற்கு அந்த காதலிலேயே ஒட்டிக்கொள்கின்றனர். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் காதல் தோல்வியிலிருந்து வெளிவர மாட்டார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் அவர்களின் ஆழ்ந்த உணர்ச்சி உணர்திறன் மற்றும் குடும்பத்தின் மீதான தீவிர பிணைப்புக்கு அறியப்படுகிறார்கள். ஒரு கடக ராசிக்காரர் காதலில் விழும்போது, அவர்கள் தங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் காதலில் அர்பணிக்கிறார்கள், எளிதில் துண்டிக்க முடியாத வலுவான பிணைப்புகளை உருவாக்குகிறார்கள்.
காதல் பிரிந்த பிறகு, அவர்கள் தங்கள் கடந்த கால காதலுடன் பிணைக்கப்பட்ட நினைவுகளையும் உணர்ச்சிகளையும் விட்டுவிடுவது மிகவும் சவாலாக இருக்கலாம். அவர்களின் ஏக்கம் நிறைந்த தன்மை, வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துவதில் கவனம் செலுத்துவதை விட, கடந்த கால நினைவுகளில் சுழல வழிவகுக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஆழ்ந்த உணர்ச்சித் தொடர்புகளை விரும்பும் உணர்ச்சிமிகுந்த ஆன்மாக்கள். அவர்கள் காதலிக்கும்போது, அவர்கள் மிகவும் தீவிரமாக நேசிக்கிறார்கள், அதனால் கடந்தகால உறவிலிருந்து பிரிந்து செல்வது அவர்களுக்கு மிகவும் கடினமாகிறது.
காதலில் ஆதிக்கத்திற்கான அவர்களின் உள்ளார்ந்த விருப்பமும் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்க முடியும், ஏனெனில் அவர்கள் காதலை விட்டு வெளியேறுவதால் வரும் அதிகார இழப்பை ஏற்றுக்கொள்ள போராடுகிறார்கள். இதன் விளைவாக விருச்சிக ராசிக்காரர்கள் அவர்கள் தங்கள் முன்னாள் துணை மீது பழிவாங்கும் உணர்வைக் கூட வளர்த்துக் கொள்ளலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் அவர்களின் உணர்ச்சிகள் மற்றும் கற்பனையால் வழிநடத்தப்படுகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தங்கள் துணைக்கும், அவர்கள் இருக்கும் உறவுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், அதனால் காதல் முடிவுக்கு வரும்போது அதனை ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு சவாலாக இருக்கும்.
பிரிவால் ஏற்படும் கடுமையான வலியின் எதார்த்தத்தை எதிர்கொள்வதை விட கற்பனையில் ஆறுதல் தேடும் மீன ராசிக்காரர்கள் தப்பிக்கும் தன்மை கொண்டவர்கள். அவர்களின் இரக்க குணம், அவர்களின் முன்னாள் துணையை எளிதில் மன்னிக்கவும், மீண்டும் உறவில் இணையும் வாய்ப்புக்காகவும் காத்திருப்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் அவர்களின் பிடிவாதத்திற்கும் ஆறுதல் மற்றும் பாதுகாப்பிற்கான வலுவான இணைப்புக்கும் பெயர் பெற்றவர்கள். ரிஷப ராசிக்காரர்கள் உறவில் ஈடுபடும் போது, அது வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் காதலிக்கிறார்கள்.
இதன் விளைவாக, கடந்த கால உறவிலிருந்து வெளிவர அவர்கள் கடுமையாக போராடலாம், அது அவர்களுக்கு மகிழ்ச்சியை தராவிட்டாலும் கூட அவர்கள் அதிலிருந்து வெளிவர மாட்டார்கள். மாற்றம் குறித்த அவர்களின் பயம் மற்றும் அவர்களின் ஆறுதல் மண்டலத்தை விட்டு வெளியேற தயக்கம் ஆகியவை புதிய தொடக்கங்களை நோக்கி அவர்கள் நகருவதைத் தடுக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
