Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த 5 ராசிக்காரங்க மோசமான ஆட்களுடன் நட்பு வச்சிக்க ஆசைப்படுவாங்களாம்... ஏன் தெரியுமா ?
நல்லவர்களாகவும் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்றுதான் நாம் அனைவரும் விரும்புவோம். அதேபோல யாருடன் நட்பாக இருக்கிறோம் என்பதிலும் கவனமாக இருப்போம். ஏனெனில், மோசமான நபர்களுடன் நீங்கள் பழகும்போது, பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
சில நேரங்களில் எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் அல்லது கெட்டவர்களிடமிருந்து விலகி இருக்க முடியாது. அவர்கள் யார் என்பதை அறிந்த பின்புதான் நமக்கு அவர்களை பற்றி தெரிய வரும். அந்த வகையில், பொய்யான மற்றும் மோசமான நபர்களுடன் நட்பாக இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள். அவர்களிடம் இருந்து தூரமாக இருக்கவோ அல்லது நட்பை முறித்துக்கொள்ளதான் பெரும்பலான மக்கள் விரும்புவார்கள்.

ஆனால், சிலர் பொய்யர்கள் மற்றும் கையாளுபவர்களுடன் நட்பு கொள்ள விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள் எப்போதும் மக்களுக்கு உதவக்கூடிய நல்ல மனிதர்களாக இருக்கிறார்கள். எனவே, பொய்யர்கள் மற்றும் சூழ்ச்சியாளர்களுடன் நட்பு கொள்ள விரும்பும் ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இரட்டை முகம் கொண்ட ஆளுமை உடையவர்கள். அவர்கள் சில நேரங்களில் ஒரு கடினமான சூழ்நிலையிலிருந்து வெளியேற அங்கும் இங்கும் வசதிக்கு ஏற்ப மாறிக்கொண்டு இருப்பார்கள். எனவே, அவர்கள் தங்களைப் போன்ற ஆளுமை கொண்டவர்களுடன் சுற்றி இருக்க அதிகம் விரும்புகிறார்கள். உண்மையைச் சொல்லும் மக்களின் நேர்மையை மிதுன ராசிக்காரர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.
சிம்மம்
நண்பர்களை உருவாக்கும்போது சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் ஏமாந்து போகிறார்கள். அவர்கள் யாரையும் எளிதில் நம்பிவிடுகிறார்கள். இதனால், யார் சொல்வது உண்மை? உண்மை இல்லை என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியாது.
அவர்களின் கனிவான இயல்பால் பொய்யர்களையும் கையாளுபவர்களையும் அடையாளம் காண முடியாது. ஆனால், சிம்ம ராசிக்காரர்கள் பொய்யர்களால் ஈர்க்கப்படுகிறார்கள் மற்றும் அவர்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறார்கள். ஏனெனில் அவர்கள் மிகவும் போலியான, பளபளப்பான ஆளுமையை வழங்குகிறார்கள்.
துலாம்
மக்களைப் பற்றி அதிகம் சிந்திப்பதால் துலாம் ராசிக்காரர்கள் ஒரு நல்ல முடிவை எடுக்க போராடுகிறார்கள். அவர்கள் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதனால், இந்த ராசிக்காரர்கள் சரி மற்றும் தவறுகளை வேறுபடுத்தத் தவறிவிடுகிறார்கள். துலாம் ராசிக்காரர்கள் பொய்யர்கள் மற்றும் சூழ்ச்சியாளர்களிடமுள்ள நல்லதைக் கண்டு அவர்களுடன் நட்பு கொள்ளக்கூடும்.
விருச்சிகம்
உண்மையைச் சொல்பவர்கள் மீது விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் சந்தேகம் மற்றும் கோபம் கொள்கிறார்கள். நேர்மையான மக்களை இவர்களுக்கு சுத்தமாக பிடிப்பதில்லை. இந்த ராசிக்காரர்களுக்கு வசதியாக இருப்பதால், பொய்யர்கள் மற்றும் கையாளுபவர்களுடன் மட்டுமே இவர்கள் நட்பாக இருக்க முயற்சி செய்கிறார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் மற்றவர்களை மிகவும் நம்புகிறார்கள். தொடக்கத்தில் யார் பொய்யர், யார் நேர்மையானவர் என்பதை அவர்களால் அடையாளம் காண முடியாது. அவர்களின் அறியாமையின் காரணமாக, அவர்கள் பொய்யர்கள் மற்றும் நேர்மையற்ற நபர்களுடன் நட்பு கொள்கிறார்கள். அவர்கள் மீண்டும், இந்த ராசிக்காரர்களுக்கு துரோகம் செய்து இறுதியில் ஓடிவிடுகிறார்கள்.
இதர ராசிக்காரர்கள்
மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மகரம் மற்றும் மீனம் ராசிக்காரர்கள் யாருடன் நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். அவர்கள் மோசமான மற்றும் பொய் சொல்லும் நபர்களுடன் நண்பர்களாக இருக்க மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் மற்ரவர்களை தங்கள் நண்பர் என்று முத்திரை குத்துவதற்கு முன்பு அவரைப் பற்றி தெரிந்துகொள்ள முயற்சிப்பார்கள்.



Click it and Unblock the Notifications
