Latest Updates
-
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா?
இந்த 5 ராசிக்காரங்க படிப்பில் ரொம்ப கெட்டிக்காரரா இருப்பாங்களாம்... இவங்க விதியை இவங்களே மாத்திக்குவாங்க...!
இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒரு திறமை இருக்கும். ஒருவரின் சிந்திக்கும்-புரிந்துகொள்ளும் திறன் நபருக்கு நபர் வேறுபடக்கூடியது. ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் படிப்பில் மிகவும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
படிப்பு மட்டுமே ஒருவரின் புத்திசாலித்தனம் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்த ராசிக்காரர்கள் படிப்பில் வெற்றிகரமானவராக இருந்து தங்கள் விதியை மாற்றக்கூடியவராக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சிறந்த படிப்பாளிகளாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் எப்போதும், எதிலும் கவனமாக இருப்பார்கள். அவர்கள் மனதில் எப்பொழுதும் புதிதாக ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான விஷயங்களுடன் முன்னேறுகிறார்கள். அவர்களுக்கு நல்ல தலைமைத்துவ திறன் உள்ளது.
அவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள், இதன் விளைவாக அவர்கள் தங்கள் கடின உழைப்பாலும், படிப்பாலும் தங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைகிறார்கள். கையில் எடுக்கும் வேலையில் வெற்றி பெற்ற பிறகுதான் அவர்கள் மூச்சு விடுவார்கள்.
மிதுனம்
இந்த ராசியின் அதிபதி புத்திக்கூர்மையின் கிரகமான புதன் ஆவார். புதன் ஞானம் மற்றும் அறிவின் கிரகமாக கருதப்படுகிறது. மிதுன ராசிக்காரர்கள் புதன் ராசி அதிபதியாக இருப்பதால் மிகவும் புத்திசாலியாகவும் மற்றும் திறமையானவர்களாகவும் இருப்பார்கள். அவரது கூர்மையான அறிவுத்திறன் காரணமாக, அவர் வாசிப்பதிலும் எழுதுவதிலும் மிகவும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
இவர்களது சிறந்த புத்திகூர்மை காரணமாக கல்வித் துறையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மிதுன ராசிக்காரர்கள் மிக விரைவான எண்ணம் கொண்டவர்கள். எந்த ஒரு வேலையையும் தங்களின் புத்திசாலித்தனத்தால் சரியாகச் செய்யும் திறன் கொண்டவர்கள் இவர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களின் ராசி அதிபதியும் புதன்தான். புதன் கிரகத்தின் தாக்கத்தால், இந்த ராசிக்காரர்கள் புத்திசாலியாகவும் நன்றாக படிக்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அனைத்து விஷயங்களைப் பற்றிய அறிவையும் பெறுவது அவர்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும்.
ஒவ்வொரு துறையிலும் அவர்களுக்கு அதீத ஆர்வம் உள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். இந்த ராசிக்காரர்கள் எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் நிறைய யோசிப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் இயல்பிலேயே தலைமை குணம் கொண்டவர்கள், எல்லாத் துறைகளிலும் சாதிக்கும் தைரியம் இவர்களுக்கு உண்டு.
விருச்சிகம்
இந்த ராசியின் அதிபதி செவ்வாய், அதனால் இந்த ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலியாகவும் மற்றும் ஆக்ரோஷமானவர்களாகவும் இருப்பார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் தெளிவான எண்ணம் கொண்டவர்கள், அவர்கள் அனைத்து விஷயங்களையும் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகே செய்வார்கள். இந்த ராசிக்காரர்கள் சுதந்திரமான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள், அதற்காக கடுமையாக உழைத்து தங்கள் விதியை வடிவமைக்கிறார்கள்.
தங்கள் வாழ்க்கையை மாற்றும் ஆயுதமாக அவர்கள் படிப்பைக் கருதுகிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி, அவர்களின் நினைவாற்றல் மிக வேகமாக இருக்கும், மேலும் அவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தால் ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெறுகிறார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் அறிவுத்திறன் இயற்கையாகவே அதிகம். இந்த ராசிக்காரர்கள் அதிவேகமான IQ உடையவர்கள். அவர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும், அவற்றைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளவும் விரும்புகிறார்கள். எந்தப் பரீட்சைக்கும் முன்பாக விஷயங்களை நன்றாகப் புரிந்துகொள்ளும் பழக்கம் இவர்களிடம் உள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கும்ப ராசிக்காரர்கள் பிடிவாதமாக இருப்பார்கள், அவர்கள் என்ன முடிவு செய்தாலும் அதை நிறைவேற்றிய பின்னரே அடுத்த வேலையை தொடங்குவார்கள். ஒவ்வொரு பாடத்தையும் நன்கு புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு புத்தகங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர்களின் கூர்மையான புத்திசாலித்தனத்தால், அவர்கள் மற்றவர்களின் கஷ்டங்களை எளிதில் புரிந்து கொள்கிறார்கள்.



Click it and Unblock the Notifications
