Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த 5 ராசிக்காரங்களால மத்தவங்க பொய் சொல்றதை ஏத்துக்கவே முடியாதாம்...அவங்கள மன்னிக்கவே மாட்டாங்களாம்!
நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கத்தான் எல்லா மக்களும் விரும்புவார்கள். ஆனால், நேரமும், காலமும் சூழ்நிலைகளும் மக்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். அவர்கள் பொய் சொல்லக்கூடியவர்களாகவும் கெட்டவர்களாகவும் நல்லவர்களாகவும் மாற்றலாம். ஆனால், எந்த சந்தர்ப்பத்திலும் பொய்யே சொல்லாத நபர்களை நீங்கள் கண்டதுண்டா?
ஆம், சில நபர்கள் 'சுட்டுபோட்டாலும் நான் பொய் கூற மாட்டேன்' என்பார்கள். பொய்யே சொல்லாத அரிச்சந்திரனின் பரம்பரை போல, பொய்யே பேசாமல், பொய் கூறுவதை வெறுக்கும் நபர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஜோதிடத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

அனைத்து ராசி அறிகுறிகளும் நேர்மையை ஓரளவிற்கு மதிக்கும் அதே வேளையில், சில ராசிக்காரர்கள் அவற்றின் உள்ளார்ந்த இயல்பு மற்றும் ஆளுமைப் பண்புகள் காரணமாக பொய் கூறுவதை வெறுப்பார்கள்.
பொய் கூறுவதை வெறுக்கும் ராசிக்காரர்கள் யார் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
மேஷம்
உண்மை மற்றும் நேர்மையை மிகவும் மதிப்பவர்களாக மேஷ ராசிக்காரர்கள் இருக்கிறார்கள். யாராவது அவர்களிடம் பொய் சொன்னால், விரைவாக அவர்களால் கண்டுபிடிக்க முடியும். இந்த ராசிக்காரர்கள் மிகவும் நேர்மையான நபராக இருப்பதால், மற்றவர்களிடமிருந்தும் அதையே எதிர்பார்க்கிறார்கள். மேஷ ராசிக்காரர்கள் தங்களிடம் யாராவது பொய் சொன்னதைக் கண்டுபிடித்துவிட்டால், அந்த நபர் மீதான நம்பிக்கையை அவர்கள் இழந்துவிடுவார்கள். மேலும் அவர்களுடைய உறவை முற்றிலுமாகத் துண்டித்துவிடுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்கள் நேர்மையானவர்கள் மற்றும் நம்பகமானவர்கள். இவர்கள் மற்றவர்களிடமிருந்தும் அதையே எதிர்பார்க்கிறார்கள். நேர்மையை மிகவும் மதிப்பதால், இந்த ராசிக்காரர்களிடம் யாராவது பொய் சொல்லும்போது அவர்கள் அதிகமாக காயமடையலாம். தங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த நபர் மீது வெறுப்பைக் கொண்டிருக்கும் இந்த ராசிக்காரர்கள், அவர்களை எளிதில் மன்னிக்க மாட்டார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் பகுத்தறிவுடன் தர்க்கரீதியாக நடந்துகொள்வார்கள். மேலும் அவர்கள் ஏமாற்றத்தைக் கண்டறிவதில் திறமையானவர்கள். நேர்மையை அதிகம் மதிக்கும் இந்த ராசிக்காரர்களிடம் யாராவது பொய் சொல்லும்போது, அவர்கள் மிகவும் வருத்தப்படலாம். இந்த ராசிக்காரரிடம் நீங்கள் பொய் கூறினால், நேரடியாக உங்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்பார்கள் மற்றும் அந்த நபருடனான அனைத்து தொடர்புகளையும் தவிர்க்கலாம்.
சிம்மம்
நம்பகத்தன்மையை விரும்பும் சிம்ம ராசிக்காரர்களை யாராவது ஏமாற்றும்போது, அவர்கள் விரைவாக அதைக் கண்டுபிடிப்பார்கள். அவர்கள் மிகவும் நேர்மையனவர்களாக இருப்பதால், மற்றவர்களிடமிருந்தும் அதையே எதிர்பார்க்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் நெருங்கியவர்கள் பொய் சொன்னதை கண்டுப்பிடித்தால், அவர்கள் அதிக காயமடைவார்கள் மற்றும் துரோகத்தை உணரலாம். மேலும், நேர்மையில்லாமல் பொய் பேசும் நபருடனான அனைத்து தொடர்பையும் துண்டிப்பார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எல்லாரிடமும் நேர்மையையும் துல்லியத்தையும் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் நேர்மையானவர்களாக இருப்பதால், யாராவது அவர்களிடம் பொய் சொல்லும்போது வருத்தப்படலாம். குறிப்பாக, அவர்கள் கூறிய பொய் இந்த ராசிக்காரர்களை ஏமாற்றுவதற்காக கூறப்பட்டிருந்தால், அதை மன்னிக்கவே மாட்டார்கள். இதற்கான விளக்கத்தை அவர்கள் நேரடியாக சந்தித்து கேட்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் எந்த வகையிலும் மோதல்களைத் தவிர்க்கிறார்கள். இருப்பினும், அவர்கள் நேர்மையை மதிக்கிறார்கள் மற்றும் யாராவது அவர்களிடம் பொய் சொல்லும்போது மிகவும் காயமடைகிறார்கள். இதனால், நேர்மையற்ற நபருடன் உறவில் இருக்க விரும்ப மாட்டார்கள்.
கடகம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் & மீனம் ஆகிய ராசிக்காரர்கள் வெள்ளைப் பொய்களைச் சொல்லுவார்கள். மற்றவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று தெரிந்தாலும், அது மோசமான சூழ்நிலையை அடையும் வரை அதை கண்டுகொள்ள மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications



