Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
பாலியல் வழக்கில் சிக்கி பிரிட்டிஷ் பெண்ணிடம் ஏமாந்த இந்திய அரசர் யார் தெரியுமா? இப்படி கூட நடக்குமா?
இந்திய நிலப்பரப்பை பல வம்சங்களை சேர்ந்த அரசர்கள் ஆண்டனர், அதில் பலர் தங்கள் வீரத்தாலும், நிர்வாகத்தாலும் வரலாற்றில் அழியாப்புகழ் பெற்றனர். உலகின் வளம் மிக்க பகுதியை ஆண்டதால் அவர்ளிடம் செல்வமும் குவிந்து கிடந்தது. சில இந்திய மன்னர்கள் உலகிலேயே மிகப்பெரிய செல்வந்தர்களாக இருந்தனர்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கம் தொடங்கிய பிறகும் கூட அவர்கள் கோடீஸ்வரர்களாக இருந்தார்கள். அவர்களின் அபரிமிதமான செல்வத்தைக் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட பொறாமைப்பட்டனர். அதனால் அவர்கள் இந்திய அரச குடும்பங்களை அடிமைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர், அதில் பெண்களைப் பயன்படுத்தி அவர்களை சிக்க வைத்தனர்.

அப்படி ஆங்கிலேயர்களால் கார்னர் செய்யப்பட்ட ஒரு இந்திய அரசர்தான், முன்னாள் பரோடா சமஸ்தானத்தின் ஆட்சியாளரான மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் III. அவர் லண்டனில் ஒரு திருமணமான ஆங்கிலப் பெண்ணால் சிக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் அந்த பெண்மணியின் கணவரால் மன்னரின் நற்பெயரைப் பாதுகாக்க ஒரு பெரிய தொகையை செலுத்துமாறு மிரட்டப்பட்டார்.
சாயாஜிராவ் கெய்க்வாட்டின் கொள்ளுப் பேரனான இரண்டாம் ஃபதேசிங்ராவ் பிரதாப்ராவ் கெய்க்வாட், தனது கொள்ளு தாத்தா பற்றிய "Sayajirao of Baroda, the Prince and the man" என்ற வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அவரது கொள்ளு தாத்தா பற்றிய இந்த விவகாரம் முதலில் அவரது சொந்த மருத்துவ அதிகாரியான டாக்டர் சுமந்த் மேத்தாவால் வெளிப்படுத்தப்பட்டது, அவர் அரசருடன் ஐரோப்பாவிற்கு சென்றிருந்தார் என்று அதில் குறிப்பிடப்பட்டது.
மேத்தா இந்த சம்பவத்தை "ஒரு வயதான மனிதர் ஒரு இளம் பெண்ணை காதலிப்பது" என்று விவரித்தார், அந்த நேரத்தில் இந்த விவகாரம் இங்கிலாந்தில் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது என்றும், மகாராஜாவிற்கும் அவரது மனைவி பரோடா ராணிக்கும் இடையே பிளவை ஏற்படுத்தியது என்றும் கூறினார்.
இந்த புத்தகத்தில், ஃபதேசிங்ராவ், இந்த விவகாரம் ஒரு கணவன்-மனைவி ஒரு பணக்கார மனிதரிடமிருந்து பணம் பறிக்கப் பயன்படுத்திய ஒரு சூழ்ச்சியின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டுள்ளார், மேலும் மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட் இதுபோன்ற மோசமான செயலில் ஈடுபட்டது அதுவே முதல் முறை என்று கூறுகிறார். "அவரது நாற்பத்தெட்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட முதல் முறையாக, அவர் ஒரு பாலியல் ஊழலில் சிக்கினார்.
இது ஒரு பணக்காரரிடமிருந்து பணம் பறிக்க ஒரு கணவன்-மனைவி குழு பயன்படுத்தும் வழக்கமான தந்திரத்தைத் தவிர வேறு எதுவுமில்லை, மேலும் மேற்கத்திய ஒழுக்க விதிமுறைகளைப் பற்றி அறிமுகமில்லாத இந்திய இளவரசர்கள் அத்தகைய ஏமாற்றும் தம்பதிகளின் இரையாக எளிதில் மாறினார்" என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டள்ளது.
மகாராஜா தனது நற்பெயரைப் பாதுகாக்க பெரும் தொகையை செலுத்தினார்
ஃபதேசிங்ராவ் எழுதியுள்ள் புத்தகத்தின்படி, " பீட்ரைஸ் ஸ்டாதம் என்ற பெண், சாயாஜிராவ் கெய்க்வாட்டால் ஈர்க்கப்பட்டது போல நடித்தார், மேலும் அவர்கள் உறவில் எப்போதும் எந்த நேரத்திலும் மகாராஜா அவருடன் உடலுறவு கொண்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை " என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாயாஜிராவ் பீட்ரைஸுடன் நேரத்தை செலவிடத் தொடங்கினார், ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் இருவரும் அவரது கணவர் எர்னஸ்ட் இம்மானுவேல் ஸ்டாதமை எதிர்கொண்டனர், அவர் கோபமடைந்தது போல நடித்து, அவர் தாக்கல் செய்வதாக அச்சுறுத்திய விவாகரத்து வழக்கில் தனது மனைவியின் "காதலர்களில் ஒருவர்" என்று மன்னரின் பெயரை பத்திரிகைகளிடம் கூறாமல் இருப்பதற்காக அரசரிடம் பணம் கோரினார்.
முதலில், தனது வழக்கறிஞர்களின் ஆலோசனையின் பேரில், சாயாஜிராவ், ஸ்டேதமின் மிரட்டல் முயற்சியைப் புறக்கணித்தார், ஆனால் பின்னர் பீட்ரைஸின் கணவருக்கு பெரும் தொகையை இழப்பீடாக வழங்கி பிரச்சினையைத் தீர்க்க ஒப்புக்கொண்டார்.
பிரிட்டிஷ் அரசரின் பங்கு
மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை கடுமையாக விமர்சித்தவர், மேலும் இந்திய சுதந்திர இயக்கத்திற்கு மறைமுகமாக ஆதரவளித்தார், இதன் காரணமாக மகாராஜாவின் செயல்பாடுகள் எப்போதும் கண்காணிப்பில் இருந்ததால், பிரிட்டிஷ் அரசரின் ஆதரவுடன் இந்த பாலியல் வழக்கு திட்டமிடப்பட்டிருக்கலாம் என்று ஃபதேசிங்ராவ் கூறுகிறார்.
மகாராஜா ஹரி சிங்
ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் ஆட்சியாளரான மகாராஜா ஹரி சிங், லண்டனில் இதேபோன்ற சூழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மற்றொ இந்திய அரசராவார், மேலும் சாயாஜிராவைப் போலவே, தனது நற்பெயரைக் காப்பாற்ற ஒரு பெரிய தொகையைச் செலுத்த வேண்டியிருந்தது.
அரியணை ஏறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹரி சிங் இங்கிலாந்துக்குச் சென்றார், அங்கு குற்றவாளிகள் ஒரு கும்பல் இளவரசரை ஏமாற்ற ஒரு விரிவான திட்டத்தை வகுத்தது. வழக்கறிஞரான ஹாப்ஸ் இந்த சதித்திட்டத்தின் தலைவராக இருந்தார், அவருக்கு கேப்டன் ஆர்தர் என்ற ஆங்கிலேயர் உதவினார்.
ஆர்தர் காஷ்மீர் பட்டத்து இளவரசரை திருமதி ராபின்சனுக்கு அறிமுகப்படுத்தினார், அவர் தோழமையை விரும்பும் ஒரு பணக்கார விதவை என்று இளவரசரிடம் தெரிவித்தார். ஹரி சிங் திருமதி ராபின்சன் மீது ஈர்ப்பு கொண்டு, அவருடன் பாரிஸுக்கு ஒரு பயணம் மேற்கொண்டார்.
குற்றவாளிகள் இளம் இளவரசரின் அலட்சியத்தைப் பயன்படுத்தி அவரை மிரட்டினர், மேலும் அந்த நேரத்தில் மிகப்பெரிய தொகையான ரூ.45 லட்சம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தினர். இறுதியில் அவர்களுக்குள்ளேயே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இந்த சதி வெளிச்சத்துக்கு வந்தது.



Click it and Unblock the Notifications












