Latest Updates
-
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது.. -
குருபகவான் அஸ்தமன நிலையில் இருப்பதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் புளி சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
இந்த 3 சின்னங்களில் ஒன்று உங்கள் கையில் இருந்தாலும் நீங்க மிகப்பெரிய துரதிர்ஷ்டசாலியாம் - ஜாக்கிரதை -
ருசியான வெஜ் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
பொலிவிழந்து இருக்கும் முகத்தை பளிச்சுன்னு மாத்தணுமா? அப்ப காபித் தூளை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜூலை 25-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் வெற்றிகளைக் குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆகஸ்ட் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுக்கு கடலால் உருவாகியுள்ள புதிய ஆபத்து என்ன தெரியுமா? -
கேட்டரிங் ஸ்டைல் கோவைக்காய் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
பேரரசுகளின் சுடுகாடு என்று அழைக்கப்படும் இந்தியாவின் அண்டை நாடு... இந்த பெயருக்கு பின் பெரிய கதையே இருக்காம்!
உலகில் ஒவ்வொரு நாடும் அதற்கென தனிப்பட்ட வரலாற்றையும், அடையாளத்தையும் கொண்டுள்ளது. தன்னுடைய மர்மமான நிலப்பரப்பில் பல்வேறு இராஜ்ஜியங்களின் பண்டைய ரகசியங்களைக் கொண்ட ஒரு இடம் உள்ளது, அங்கு வரலாற்றின் பல சக்திவாய்ந்த படைகள் குடியேறுவதற்கு முயற்சித்து தோல்வியடைந்தன.
அதன் உயரமான மலைகளாலும், கடினமான வானிலையாலும் பல சக்திவாய்ந்த போர்வீரர்களும் இங்கு வெற்றி பெறுவது சாத்தியமற்றதாக இருந்தது. வரலாற்றின் பல புகழ் பெற்ற படைகள் இந்த பகுதியை வெல்வதற்கு முயற்சித்தனர், ஆனால் எதுவும் நீடிக்கவில்லை. இந்த இடத்தின் பெயர் தெரியுமா?

அந்த இடம்தான் தற்போதைய ஆப்கானிஸ்தான். ஆப்கானிஸ்தான் பெரும்பாலும் 'பேரரசுகளின் கல்லறை' என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் பல சக்திவாய்ந்த நாடுகள் அதைக் கைப்பற்ற முயன்றன, ஆனால் அவை எதுவும் அந்த முயற்சியில் வெற்றிபெறவில்லை. பல நூற்றாண்டுகளாக, பெரிய பேரரசுகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்துள்ளன, ஆனால் அவை அனைத்தும் வலுவான எதிர்ப்பை எதிர்கொண்டன, இறுதியில் தீவிர முயற்சிகளுக்குப் பிறகும் வெளியேறின. ஆப்கானிஸ்தான் பேரரசுகளின் கல்லறையாக மாறியதற்கு பின்னால் உள்ள காரணம் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆப்கானிஸ்தான் ஏன் பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படுகிறது?
ஆப்கானிஸ்தானின் இந்த தனித்துவமான பெயர் வெளிநாட்டு படையெடுப்பாளர்களை தோற்கடித்த அதன் நீண்ட வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அதன் கரடுமுரடான மலைகள் மற்றும் தொலைதூர பள்ளத்தாக்குகள் நாட்டைச் சுற்றிச் செல்வதையோ அல்லது கட்டுப்படுத்துவதையோ இராணுவங்களுக்கு கடினமாக்கின. புவியியல் அமைப்பு மட்டுமின்றி, ஆப்கானிஸ்தான் மக்கள் எப்போதும் தங்கள் நிலத்தை பாதுகாக்க கடுமையாக போராடியுள்ளனர். இயற்கைச் சவால்கள் மற்றும் உள்ளூர் எதிர்ப்பு போன்றவற்றால் ஆப்கானிஸ்தானைப் பிடிக்க முடியாமல் பல பேரரசுகள் தோல்வி அடைந்துவிட்டன.
பிரிட்டிஷ் மற்றும் ஆப்கானிஸ்தான்
1800களில் பிரிட்டிஷ் பேரரசு ஆப்கானிஸ்தானைக் கைப்பற்ற முயன்றது. ஏனெனில் அந்த பகுதியில் ரஷ்யா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதைப் பற்றி பிரிட்டிஷ் கவலை கொண்டிருந்தது மற்றும் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர்கள் விரும்பினர். பல ஆண்டுகளாக, அவர்கள் ஆப்கானிஸ்தானில் மூன்று போர்களை நடத்தினர், ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் தோல்வியடைந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிரிட்டிஷாரால் ஆப்கானிஸ்தான் போராளிகளை தோற்கடிக்க முடியவில்லை. தங்கள் சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடினர்.
சோவியத் யூனியனின் தோல்வி
1980 களில், சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது, ஒரு கம்யூனிஸ்ட் அரசை அங்க நிறுவ வேண்டுமென்று நினைத்தது. இந்த போர் குறுகியதாகவும் எளிதாகவும் இருக்கும் என்று அவர்கள் நம்பினர், ஆனால் அவர்களின் கணிப்பு மிகவும் தவறானதாக இருந்தது. முஜாஹிதீன் என்று அழைக்கப்படும் ஆப்கானிஸ்தான் போராளிகள், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளின் உதவியுடன் சோவியத் யூனியனை எதிர்த்தனர். ஏறக்குறைய 10 ஆண்டுகள் போராடி, தீவிர இழப்புகளைச் சந்தித்த பிறகு, சோவியத் யூனியன் 1989 இல் பின்வாங்கியது. ஆப்கானிஸ்தானை வீழ்த்த முயன்ற பல தோல்வியுற்ற முயற்சிகளில் இது முக்கியமான ஒன்று.
ஆப்கானிஸ்தானை ஏன் கைப்பற்றுவது மிகவும் கடினம்?
ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றுவது மிகவும் கடினமாக இருப்பதற்கு முக்கியக் காரணம் அதன் புவியியல் அமைப்புதான். நாட்டில் மலைகள், பாலைவனங்கள் நிறைந்துள்ளன மற்றும் நகரங்கள் தொலைதூரத்தில் உள்ளன. தீவிர வானிலை - உறைபனி குளிர்காலம் மற்றும் வெப்பமான கோடைகாலம் மற்ற நாட்டின் இராணுவங்கள் அங்கு வாழ்வதை கடினமாக மாற்றியது.
புவியியல் அமைப்பையும் தாண்டி ஆப்கானிஸ்தான் பல்வேறு இனக்குழுக்கள், தாஜிக்குகள் மற்றும் ஹசாராக்கள் நிறைந்தது. அவர்கள் அனைவரும் வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளைக் கொண்டுள்ளனர். வைத்திருக்க தங்களுக்குள் ஒத்துப்போவதில்லை. இது நாட்டில் பிளவை உருவாக்குகிறது, எந்த ஒரு அரசாங்கமும் அதை ஒன்றாக வைத்திருக்க முடியாது.



Click it and Unblock the Notifications
