Latest Updates
-
செப்டம்பர் 12, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 5 ராசிக்காரங்க மற்றவர்களை விட வாழ்க்கையில் ஈஸியாக ஜெயிக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்க ராசி என்ன? -
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும்
நீங்க பிறந்த கிழமை என்னன்னு சொல்லுங்க.. உங்க அதிர்ஷ்டம் எந்த வயசுல பிரகாசிக்கும்-ன்னு சொல்றோம்...
When Your Luck Will Shine According To Day Of Birth: எப்படி ஒருவரது பிறந்த தேதி, ராசி, நட்சத்திரம் அந்நபரைப் பற்றிய பல விஷயங்களை தெரியப்படுத்துகிறதோ, அதேப் போல் ஒருவர் பிறந்த கிழமையும் அந்நபரின் குணாதிசயம், எதிர்காலம், அதிர்ஷ்டம் போன்றவற்றைப் பற்றி தெரியப்படுத்தும்.
ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு சிறப்புடையது. எனவே தான் ஒவ்வொரு கிழமையில் பிறந்தவர்களின் குணாதிசயங்களும் வேறுபடுகின்றன. ஒருவர் பிறந்த கிழமை எப்படி அந்நபரின் எதிர்காலத்தைப் பற்றி கூறுகிறதோ, அதேப் போல் அந்நபருக்கு எப்போது அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பதையும தெரியப்படுத்தும். இப்போது எந்த கிழமையில் பிறந்தவர்களுக்கு எப்போது அல்லது எந்த வயதில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பதைக் காண்போம்.

திங்கள்
திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் பணக்காரர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இவர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது. இந்த கிழமையில் பிறந்தவர்கள் பிறவியில் இருந்தே அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார். யாராலும் அவ்வளவு எளிதில் பாதிக்கப்படமாட்டார்கள். இந்த கிழமையில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டம் விரைவில் பிரகாசிக்கத் தொடங்கும். அதுவும் 25 வயதிலேயே இந்த கிழமையில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல வெற்றியையும், பணத்தையும் குவிக்க தொடங்குவார்கள்.
செவ்வாய்
செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் கடினமான வாழ்க்கையை நடத்துவதில் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். மேலும் இவர்கள் லட்சியவாதிகள். சில சமயங்களில் இவர்கள் கடுமையாக நடந்து கொள்வார்கள். தொலைவில் இருந்து தங்கள் சொந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வணிகத்தில் முன்னேற்றம் காண்பார்கள். இந்த கிழமையில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டம் 28 வயதில் இருந்து பிரகாசிக்கத் தொடங்கும்.
புதன்
புதன் கிழமையில் பிறந்தவர்கள் கலையின் மீது அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் இந்த கிழமையில் பிறந்தவர்கள் இசைக்கலைஞர்களாக இருப்பர் மற்றும் பணக்காரர்களாக இருப்பர். இந்த கிழமையில் பிறந்தவர்கள் எளிதில் செல்வத்தைப் பெறுவார்கள். நிறைய பிடிவாதமாக இருப்பார்கள். தேவையில்லாத செலவுகள் செய்வார்கள். இருப்பினும் தர்மம் செய்வார்கள். இந்த கிழமையில் பிறந்தவர்களுக்கு 32 வயதிற்கு மேல் அதிர்ஷ்டம் பிரகாசிக்க தொடங்கும்.
வியாழன்
வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் நீதிமான்களாக இருப்பர் மற்றும் கடின உழைப்பாளிகளாக இருப்பர். எளிமையான வாழ்க்கையை நடத்த விரும்புவார்கள். ஆடம்பரமாக செலவு செய்ய விரும்பமாட்டார்கள். தங்கள் கொள்கைகளில் உறுதியாக இருப்பார்கள். இவர்களிடம் பேராசையோ, பற்றுதலோ இருக்காது. இந்த கிழமையில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமும் விரைவில் பிரகாசிக்கும். அதுவும் 16 வயதில் இருந்தே இவர்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும்.
வெள்ளி
வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் தாராள மனப்பான்மை கொண்டிருப்பதோடு, கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பர். மகிழ்ச்சியான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை நடத்துவார்கள். நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்க விரும்புவார்கள். இந்த கிழமையில் பிறந்தவர்கள் பெரும்பாலும் உலகின் சிறந்த மருத்துவர்கள், சிறந்த சமூகவியலாளர்கள், கல்வியாளர்களாக இருப்பர். இந்த கிழமையில் பிறந்தவர்களுக்கு 25 வயதில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
சனி
சனிக்கிழமையில் பிறந்தவர்கள் சாதனை படைக்காமல் இவ்வுலகை விட்டு வெளியேறமாட்டார்கள். மேலும் இவர்கள் வெற்றி, மகிழ்ச்சி மற்றும் லட்சியத்திற்காக கடுமையாகப் போராட தயாராக இருப்பார்கள். இந்த கிழமையில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் சற்று மெதுவாகவே பிரகாசிக்கும். அதாவது இவர்களுக்கு 36 வயதிற்கு மேல் தான் அதிர்ஷ்டம் பிரகாசித்து, தலைவிதியே மாறும்.
ஞாயிறு
ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் நம்பிக்கையுடன் இருப்பார்கள். இந்த கிழமையில் பிறந்தவர்கள் அனைத்திலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். இருப்பினும், வாழ்வின் சில காலம் மோசமாக இருக்கும். அப்போது அவர்கள் நிறைய சித்திரவதைகளை தாங்க வேண்டியிருக்கும். இந்த கிழமையில் பிறந்தவர்களுக்கு 24 வயதில் இருந்து அதிர்ஷ்டம் பிரகாசிக்கத் தொடங்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
