Latest Updates
-
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க.. -
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்.. -
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்..
நவராத்திரி 2024 எப்போது? தேதி, பூஜைக்கான நேரம் மற்றும் முக்கியத்துவம் குறித்த முக்கிய தகவல்கள்..!
நவராத்திரியின் ஒன்பது நாட்களை லட்சக்கணக்கான இந்துக்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஒன்பது நாளும் பக்தர்கள் துர்கா தேவியை வழிபடுகின்றனர்.. இந்தியாவில் நவராத்திரி விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கொண்டாப்படுகிறது. ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருகின்றன. இவற்றில் ஒன்று சைத்ர நவராத்திரி, மற்றொன்று ஷரதிய நவராத்திரி, இரண்டு குப்த நவராத்திரி. iப்போது வரவுள்ள நவராத்திரி ஷரதிய நவராத்திரி ஆகும்..
இந்த வருடம் ஷரதிய நவராத்திரி அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.. மத நம்பிக்கைகளின்படி, ஷரதிய நவராத்திரியின் போது துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை வழிபடுவது நல்லது. இந்த, ஒன்பது நாட்கள் துர்கா தேவியை வழிப்பாடு செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

புராணக்கதை
இந்து புராணங்கள் படி, அரக்கர்கள் அரசன் மகிஷாசூரன் 3 உலகமான பூமி, சொர்க்கம் மற்றும் நரகத்தை தாக்கி தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த நேரத்தில், அவனை வதம் செய்ய மாபெரும் சக்தி தேவைப்பட்டது. இதற்கான காரணம், படைக்கும் கடவுளான பிரம்மா ஒரு பெண்ணால் மட்டுமே மகிஷாசரனை வீழ்த்த முடியும் என்ற வரம் அளித்துள்ளார். எனவே மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூவரும் தங்கள் சக்திகளை ஒன்றிணைத்து, அரக்கர்கள் அரசனான மகிஷாசுரனை வதம் செய்ய துர்கா தேவியை அதாவது, பராசக்தியை உருவாக்கினார்கள் என்று இந்து புராணங்கள் கூறுகிறது. 15 நாட்கள் நீண்ட போருக்கு பிறகு, பராசக்தி அவனை மாளைய அமாவாசை அன்று திரிசூலத்தால் வதம் செய்தார். அதற்குப் பிறகான 9 நாட்களுக்கு, பாராசக்தியை 9 வெவ்வேறு வடிவங்களில், அவதாரங்களில் வழிபடத்துவங்கினார்.
சாரதிய நவராத்திரியின் முக்கியத்துவம்
ஷார்திய நவராத்திரி எப்போதும் அஸ்வின் மாதத்தில் சுக்ல பக்ஷத்தின் பிரதிபதத்தில் தொடங்குகிறது என்று மத நூல்கள் கூறுகின்றன. துர்கா தேவியின் பக்தர்கள் ஒன்பது நாட்கள் விரதம் இருந்து அவளை வழிபட்டு, துர்கா ஸ்தோத்திரம் மற்றும் துர்கா சாலிசாவை பாடுகின்றனர்... நவராத்திரியின் போது துர்கா தேவியை பக்தியுடன் வழிபட்டால், அவள் தங்களை ஆசீர்வதிப்பாள் மற்றும் அவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவாள் என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.
விரதம் இருக்கும் முறை
இந்து முறைப்படி இந்த ஒன்பது நாட்களும் மக்கள் இடைவிடாத விரதம் செய்கிறார்கள். காலையில் இருந்து விரதம் இருப்பதால் உடலில் உள்ள கூடுதல் கொழுப்புகள் கரைய வழி செய்கிறது. இன்றைய காலகட்டத்தில் கூடுதல் கொழுப்பு உடலில் இருப்பதால்தான் நோய்கள் பல வருகின்றன. அவை இந்த குளிர் காலத்தில் பெரிதளவில் கரையும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் இலையுதிர்காலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாறும் நேரம் இது.. இந்த குளிரால் மனித உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு நோய்கள் வர வழி வகுக்கும். அதில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒரு பயிற்சியாகவே இந்த நவராத்திரி விரதங்கள் மேற்கொள்ள படுகின்றன.
ஷார்திய நவராத்திரி 2024 எப்போது? தேதி மற்றும் நேரம்
ஒவ்வொரு ஆண்டும் மகாளய அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை துவங்கி, தசமி திதி வரையிலான 10 நாட்களில் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி மகாளய அமாவாசை கொண்டாடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 03ம் தேதி வியாழக்கிழமை துவங்கி, அக்டோபர் 12ம் தேதி சனிக்கிழமை வரை நவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. அக்டோபர் 11ம் தேதி துர்க்காஷ்டமி அல்லது சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி விழா கொண்டாடப்பட உள்ளது.
நேரம்
நவராத்திரி அக்டோபர் 3 அன்று மதியம் 12.18 மணிக்குத் தொடங்கும். இந்த தேதி அக்டோபர் 4 ஆம் தேதி அதிகாலை 02.58 மணிக்கு முடிவடையும். சனாதன தர்மத்தின் படி சூரிய உதயத்துடன் (காலை 12 மணிக்கு அல்ல) நாள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சாரதிய நவராத்திரி அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த ஷார்திய நவராத்திரியின் ஒன்பது நாளில் பக்தர்கள் துர்க்கையின் 9 அவதாரங்களான மா ஷைல்புத்ரி, மா பிரம்மச்சாரினி, மா சந்திரகாந்தா, மா குஷ்மந்தா, ஸ்கந்த மாதா, மா காத்யாயனி, மா கால்ராத்ரி, மா மகாகௌரி மற்றும் மா சித்திதாத்ரி ஆகியோரை வணங்குகிறார்கள்.



Click it and Unblock the Notifications












