Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
mahalaya amavasya 2024: மகாளய பட்ச அமாவாசை 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள் இதோ..!
mahalaya amavasya 2024 : ஒரு மாதமும் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது.. அதிலும் மகாளய அமாவாசை புண்ணியம் செய்யக்கூடிய நாளாகும்.. பொதுவாகவே அமாவாசையை நோக்கிச் செல்லும் நாட்களை கிருஷ்ண பட்சம் என்றும் பௌர்ணமியை நோக்கி நகரும் நாட்கள் சுக்கில பட்சம் என்றும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
அதே போல மகாளய பட்சம் என்பதும் பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலம் ஆகும். ஆவணி மாதப் பௌர்ணமியை அடுத்த பிரதமையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரை உள்ள நாட்கள் மகாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது.

புரட்டாசி மாத சனிக்கிழமையில்தான் சனி பகவான் அவதரித்தார் என சொல்லப்படுவதால் சனியால் பாதிப்பு இருப்பவர்கள் புரட்டாசியில் விரதம் இருந்தால் அதிலிருந்து விடுபடலாம். புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால் அனைத்து விதமான கஷ்டங்கள், துன்பங்களில் இருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை. புண்ணிய மாதமான புரட்டாசி மாதம் இந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி துவங்கியது.. புரட்டாசியின் முதல் மற்றும் கடைசி ஆகிய இரண்டு நாட்களுமே பெளர்ணமி திதியாக அமைவதால், இந்த நாளில் செய்யப்படும் சத்ய நாராயண பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
செப்டம்பர் 17ம் தேதி துவங்கி, அக்டோபர் 17ம் தேதி வரை அமைந்துள்ள புரட்டாசி மாதம் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக உள்ளது. புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையில் சங்கடஹர சதுர்த்தி வருகிறது.. 2வது சனிக்கிழமையில் ஏகாதசியும், கடைசி சனிக்கிழமையில் திருவோண விரதமும் வருகிறது.. விஜய தசமி ஆகியனும், அதற்கு அடுத்த நாளே ஏகாதசியும் வருவதாக அமைந்துள்ளது. அக்டோபர் 02ம் தேதியான புதன்கிழமை மகாளய அமாவாசையும், 2 பவுர்ணமிகளும் புரட்டாசி மாதத்தில் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபட்ட புண்ணியம் வந்து சேரும் என்பது ஐதீகம்.
மகாளய அமாவாசை 2023 எப்போது?
மகாளய பட்சம் இந்த ஆண்டு செப்டம்பர் 17 ம் தேதி துவங்குகிறது. செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 17 வரையிலான காலம் மகாளய பட்ச காலம் என்று அழைக்கப்படுகிறது. மகாளய பட்சத்தை தொடர்ந்து வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது. இது அக்டோபர் 02ம் தேதி வருகிறது. இந்த 15 நாட்களும் பித்ருக்களுக்கு உரிய காலம்.. இந்த நேரத்தில் முன்னோர்களுக்கு விரதம் இருப்பதினால் இந்த நாட்களில் சுபகாரியங்கள் ஏதும் நடத்தப்படுவதில்லை. இந்த ஆண்டு மகாளய அமாவாசை புதன்கிழமை வருகிறது. அன்றைய தினம் முன்னோர்களை வரவேற்கும் விதமாக தர்ப்பணம் கொடுப்பது சிறப்பாகும். இதில் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தது எள்ளும் தண்ணீரும் இறைப்பதாகும், இது எளிமையான தர்ப்பணம் கொடுக்கும் முறை..
தர்பணம் கொடுக்க உகந்த நேரம் என்ன?
நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அக்டோபர் 2ஆம் தேதி காலை 6 மணியிலிருந்து 1 மணி வரை தர்ப்பணம் கொடுக்கலாம். ராகு காலம் மற்றும் எமகண்ட நேரத்தை தவிர்த்துக் கொள்ளவும். இன்றைய நாளில் உகந்த நேரத்தில் இப்படி தர்பணம் கொடுப்பதினால் நமக்கு மட்டுமல்லாமல் நம் தலைமுறையினருக்கும் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பித்ரு தர்பணம் கொடுக்க எளிய வழிமுறை?
நதிக்கரையிலோ, கடற்கரையிலோ, முன்னோரை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று கூறுகின்றன புராணங்கள். அவர்கள் மனம் குளிர அன்னதானம், வஸ்திர தானம், பழ வகைகள் தானம் போன்றவற்றைச் செய்தல் நன்மை பயக்கும். முன்னோர்களையும், உற்றார், உறவினர், தெரிந்தவர்கள் என்று அனைத்து காருண்ய பித்ருக்களையும் நினைத்து வழிபாடு செய்யுங்கள். இயன்ற அளவு தானங்கள் செய்து முன்னோரது அருளாசியை பெறுங்கள்.



Click it and Unblock the Notifications