நீங்க வீட்டில் எத்தனாவதா பிறந்த குழந்தைனு சொல்லுங்க? உங்களின் எதிர்காலத்தை பற்றி நாங்க சொல்றோம்...!

ஒரே குடும்பத்தில் அண்ணன்-தம்பியாகவோ, அக்கா-தங்கையாகவோ இருந்தாலோ அவர்களின் ஆளுமையும், குணாதிசியங்களும் வெவேறானதாகத்தான் இருக்கும். பெரும்பாலான உடன்பிறப்புகள் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள். உளவியலாளர்கள் இந்த வேறுபாடுகளுக்கு மக்களின் பிறப்பு வரிசை காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

பிறப்பு வரிசை அடிப்படையிலான கோட்பாடு முதன்முதலில் 20 ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரிய உளவியலாளர் ஆல்ஃபிரடஅட்லரால் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் எந்த வரிசையில் பிறந்தார்கள் என்பதன் அடிப்படையில் அவர்களின் ஆளுமைகள் வடிவமைக்கப்படுகின்றன மற்றும் வளர்ச்சியடைகின்றன என்று இந்த கோட்பாடு கூறுகிறது.

What Your Birth Order Reveals About Your Personality in Tamil

இந்த கோட்பாட்டைப் பொறுத்தவரை, குடும்பம், சமூகம் மற்றும் சமூக அம்சங்களும் குழந்தையின் ஆளுமை வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த பதிவில் நீங்கள் வீட்டில் எத்தனாவது குழந்தையாக பிறந்துள்ளீர்கள் என்பது உங்கள் ஆளுமையை எப்படி நிர்ணயிக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

குடும்பத்தில் முதலாவதாக பிறந்தவர்

வீட்டில் முதலாவதாக பிறந்த அல்லது மூத்த குழந்தைகள் தங்கள் பெற்றோர் மீது அதிக பொஸசிவாக இருப்பார்கள், குறைந்தபட்சம் அவர்கள் மற்றொரு குழந்தைக்கு திட்டமிடும் வரையாவது தங்கள் பெற்றோரின் முழு அன்பும் தங்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டுமென்று நினைப்பார்கள்.

முதலாவதாக பிறந்த குழந்தை மீது பெற்றோர்கள் மிகவும் கவனமாகவும், அக்கறையாகவும் இருப்பார்கள், அவர்கள் தங்களின் முழு கவனத்தையும், அன்பையும் கொடுத்து முதல் குழந்தையை வளர்ப்பார்கள்.

அதேசமயம் அவர்கள் தங்கள் பெற்றோரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம், அதனால்தான் அவர்கள் எப்போதும் இலக்கு சார்ந்தவராகவும், வெளிப்படையாகவும், வாழ்க்கையில் தாங்கள் விரும்புவதை அடைவதில் பிடிவாதமாகவும் இருப்பார்கள்.

அவர்கள் தங்கள் உடன்பிறந்தவர்களுக்கு வழிகாட்டுபவர்களாக இருப்பார்கள், அதனால்தான் பெற்றோர்கள் எப்போதும் முதல் குழந்தையிடம் கடுமையாக நடந்து கொள்ளலாம், அப்போதுதான் அவர்கள் உடன்பிறந்தவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பார்கள்.

நடுவில் பிறந்தவர்கள்

நடுவில் பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் அமைதிகாப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் விதிமுறைகளுக்கு மிகவும் பொருந்தக்கூடியவர்களாகவும், சமூகரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாகவும், பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரசங்களில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள்.

இருப்பினும், மூத்தவர்களாகவோ அல்லது சிறியவர்களாகவோ இல்லாத குழந்தைகள் இடையில் சிக்கிக்கொண்டவர்களாக உணர்கிறார்கள். அவர்கள் தங்கள் பெற்றோரிடமிருந்து குறைந்த கவனத்தைப் பெறுவதைப் போல அவர்கள் உணரக்கூடும், எனவே அவர்கள் எப்போதும் ஒரு போட்டிமனப்பான்மையுடன் வளர்கிறார்கள். அவர்களால் அடிக்கடி வீடுகளில் பிரச்சினைகள் எழலாம்.

கடைசியாக பிறந்தவர்கள்

உளவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, கடைசியாக பிறந்த குழந்தைகள் அவர்கள் வெற்றிக்கான பாதையில் பயணிக்கிறார்கள் அல்லது அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதை இல்லாவிட்டால், அவர்கள் சில சூழ்நிலைகளைத் தவிர்க்கலாம்.

அவர்கள் மூத்தவர்களுடன் ஒப்பிடும் போது அவர்கள் தோளில் அதிக சுதந்திரம் மற்றும் குறைவான பொறுப்புகள் இருக்கலாம், அதனால்தான் அவர்கள் ஆபத்தை எதிர்கொள்பவராகவும், வெளிப்படையான ஆளுமைக் கொண்டவராகவும் இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு சுதந்திரம் இருந்தாலும், சில சமயங்களில் அவர்கள் மற்றவர்களைச் சார்ந்திருப்பார்கள்.

ஒரே குழந்தையாக பிறந்தவர்கள்

குடும்பத்தில் ஒரே குழந்தையாக இருந்தால், அவர்கள் பெற்றோரின் கவனத்தையும், அன்பையும் நீங்கள் பெற்றிருக்கலாம். உடன்பிறப்பு போட்டி என்பதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை, எனவே அதனால் அவர்கள் வாழ்க்கையில் தவறவிடக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. மழலையர் பள்ளி அல்லது பள்ளியில்தான் அவர்கள் போட்டி மனப்பான்மையை சந்திப்பார்கள்.

அவர்களின் பெற்றோர் அவர்களை மிகவும் பாதுகாப்பதால், அவர்கள் எப்போதும் தங்கள் பெற்றோரை சார்ந்து இருக்கலாம். அவர்கள் தங்கள் எல்லைகளை மற்றும் சுதந்திரத்தை இழக்க நேரிடும் வாய்ப்பு உள்ளது, அதனால் அவர்கள் பிற்காலத்தில் பெற்றோரை விட்டு பிரிந்து செல்ல வாய்ப்புள்ளது.

Desktop Bottom Promotion