Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
158 ஆண்டுகளாக இந்தியாவில் ஓடும் ரயில் எது தெரியுமா? நேதாஜிக்கும் இந்த ரயிலுக்கும் நெருக்கிய தொடர்பு இருக்காம்!
இந்திய போக்குவரத்தின் உயிர்நாடி என்றால் அது ரயில்தான். இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். சொல்லப்போனால் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பே ரயில்தான். மக்களின் பயணத்தை எளிதாக்குவது மட்டுமின்றி நாட்டிற்கு கோடிக்கணக்கான வருமானத்தை தினமும் ஈட்டுகிறது.
ரயில் பயணம் மக்களுக்கு மறக்க முடியாத பல நினைவுகளை உருவாக்குகிறது. ரயில் பயணம் உலகம் முழுவதும் இப்போதும் பயன்பாட்டில் உள்ள மிகவும் பொதுவான மற்றும் பழமையான பயண முறைகளில் ஒன்றாகும்.

இந்தியாவில், இது மிகவும் மலிவான பயண முறைகளில் ஒன்றாகும். இந்திய ரயில்வே பயணிகளுக்கு பயணத்திற்காக நூற்றுக்கணக்கான ரயில்களை இயக்குகிறது, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், தேஜாஸ் எக்ஸ்பிரஸ் என பல ரயில்கள் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படுகின்றன.
இந்தியாவில் தினமும் சுமார் 3,000 எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கப்படுகிறது, அவற்றில் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள். ஆனால் இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் எப்போது மற்றும் எந்த ரயில் பாதையில் ஓடியது, எந்த நகரத்தில் ஓடியது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் முதல் ரயில்
இந்தியாவில் ரயில்களின் வரலாறு 160 ஆண்டுகளுக்கும் மேலானது, முதல் பயணிகள் ரயில் மும்பையில் போர்பந்தரிலிருந்து தானே வரை ஏப்ரல் 16, 1853 அன்று ஓடியது. இந்த வரலாற்று சிறப்புமிக்க ரயில் இந்தியாவில் ரயில் சேவைகளின் தொடக்கத்தைக் குறித்தது, பின்னர் இது உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்க்காக வளர்ந்துள்ளது.
நீங்கள் பயணிக்கும் ரயிலின் வயதை நீங்கள் எப்போதாவது கவனித்து இருக்கிறீர்களா? அது நாட்டின் மிகவும் பழமையான ரயிலாக இருக்கலாம் அல்லது லேட்டஸ்ட் மாடல்களில் ஒன்றாக இருக்கலாம். இந்தியாவில் இயங்கும் பழமையான பயணிகள் ரயிலை பற்றி மேற்கொண்டு பார்க்கலாம்.
ஹவுரா-கல்கா மெயில் 158 ஆண்டுகளுக்கு முன்பு தனது சேவையைத் தொடங்கியதால், இந்தியாவின் பழமையான பயணிகள் ரயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த ரயில் மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஹவுராவை ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள கல்கா நகரத்துடன் இணைக்கிறது.
ஹவுராவிற்கும், டெல்லிக்கும் இடையே ஜனவரி 1, 1866 அன்று முதன்முதலில் இயக்கப்பட்ட ரயில் ஹவுரா-பெஷாவர் எக்ஸ்பிரஸ் ஆகும். பின்னர் இது 1891 இல் டெல்லியிலிருந்து, கல்கா வரை நீட்டிக்கப்பட்டது. பிரிட்டிஷ் கால ரயிலான ஹவுரா-கல்கா மெயில், ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களால் கொல்கத்தாவிலிருந்து சிம்லா வரை பயணிக்கப் பயன்படுத்தப்பட்டது.
பெயர் மாற்றம்
காலப்போக்கில், ரயிலின் பெயர் மூன்று முறை மாற்றப்பட்டது, முதலில் அது கிழக்கு இந்திய ரயில்வே மெயில் என்று அழைக்கப்பட்டது, பின்னர் கல்கா மெயில் என்று பெயர் மாற்றப்பட்டது. பிரிட்டிஷ் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க 1941 ஆம் ஆண்டு தன்பாத் மாவட்டத்தில் உள்ள கோமோவிலிருந்து இந்த ரயிலில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பயணம் செய்ததாக நம்பப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு, நரேந்திர மோடி அரசாங்கம் ஹவுரா-கல்கா மெயிலை 'நேதாஜி எக்ஸ்பிரஸ்' என்று பெயர் மாற்றியது.
காலனித்துவ ஆட்சியிலில் தொடங்கப்பட்டு சுதந்திரத்திற்கு இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி, சமகால தேசத்தில் வளர்ச்சி அடைந்து, இந்த ரயில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான மாற்றத்தைக் கண்டுள்ளது.



Click it and Unblock the Notifications

