சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அவரிடம் இருக்கும் கார்களின் மதிப்பே பல கோடிகளாம்!

Rajinikanth Birthday: இந்தியாவின் சூப்பர் ஸ்டார் யாரென்றால் அது ரஜினிகாந்த் அவர்கள்தான். தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் அவருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. திரைத்துறையில் கிட்டதட்ட 50 ஆண்டுகளை நிறைவு செய்யப்போகும் அவருக்கென ஒரு மாபெரும் ரசிகப் பட்டாளமே இருக்கிறது. பஸ் கண்டக்டராக இருந்து இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த அவர் எப்போதும் எளிய மக்களுக்கு ஒரு ரோல் மாடலாகவே இருக்கிறார்.

இந்த திரை உலகம் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை மட்டும் கொடுக்கவில்லை, அளவற்ற செல்வத்தையும் அள்ளிக் கொடுத்துள்ளது. 74 வயதிலும் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நம்பர் ஒன் இடத்தில் இன்றும் ரஜினிகாந்த உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். ரஜினிகாந்த் அவர்களின் சொத்து மதிப்பு தோராயமாக எவ்வளவு இருக்குமென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

What Is Rajinikanth s Net Worth in Tamil

ஆரம்பகால வாழ்க்கை

டிசம்பர் 12, 1950 இல் பெங்களூரில் ஒரு சாதாரண மராத்தி குடும்பத்தில் சிவாஜி ராவ் கெய்க்வாட் பிறந்தார், அவர் ஆரம்ப ஆண்டுகளில் பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், அவர் உறுதியுடன் தனது முயற்சிகளைத் தொடர்ந்தார். கூலி, கார்பெண்டர் என பல வேலைகளில் அவர் ஈடுபட்டார்.

தனது திரைப்பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, பெங்களூரில் உள்ள கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துனராகப் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில்தான் சக பேருந்து ஓட்டுநராக இருந்த அவரது நண்பரான ராஜ் பகதூர் ஆதரவுடன் அவர் தனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொள்ளத் தொடங்கினார். அவரது திறமையை உணர்ந்த ரஜினிகாந்த் மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தார். இவரின் திறமையால் கவரப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் கே பாலசந்தர் அவருக்கு "ரஜினிகாந்த்" என்ற பெயரை சூட்டினார். அவர் 1975 இல் அபூர்வ ராகங்களில் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.

சூப்பர் ஸ்டார் பட்டம்

ரஜினிகாந்தின் நடிப்பு முயற்சி மேடை நாடகத்தில் தொடங்கியது, அங்கு அவர் ஒரு நடிகராக தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார். 1978 ஆம் ஆண்டு வெளிவந்த பிளாக்பஸ்டர் திரைப்படமான "பைரவி" -ல் அவரது பாத்திரம் அவரை நட்சத்திரமாக உயர்த்தியது மற்றும் அவருக்கு "சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை பெற்றுத் தந்தது. அவர் 1980கள் மற்றும் 1990களில் தமிழ் சினிமாவையே ரஜினி ஆண்டார்.

ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு

ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்துள்ளார். அவர் தற்போது நடித்து வரும் 'கூலி' திரைப்படத்திற்கு 180 கோடி சம்பளம் வாங்குகிறார். குறிப்பிடத்தக்க வகையில், அவரது வருவாயில் கணிசமான பகுதி தொண்டுகள் மற்றும் பரோபகார காரணங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவரது சொத்து மதிப்பு 500 கோடிகளுக்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

சொத்துக்கள் மற்றும் கார் கலெக்ஷன்

ரஜினிகாந்த சென்னையின் மிகவும் முக்கியமான பகுதிகளில் ஒன்றான போயஸ் கார்டனில் ஒரு பிரம்மாண்ட வீட்டில் வசிக்கிறார். ரஜினிகாந்த் சென்னையில் 35 முதல் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடம்பரமான குடியிருப்பும், 10 முதல் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள செழுமையான அடுக்குமாடி குடியிருப்பும் வைத்துள்ளார்.

ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற அவர், டொயோட்டா இன்னோவா, ரேஞ்ச் ரோவர், ரூ. 22 கோடி மதிப்புள்ள பென்ட்லி லிமோசின், ரூ. 3.1 கோடி மதிப்புள்ள லம்போர்கினி உருஸ், ரூ. 16.5 கோடி மதிப்புள்ள Phantom, ரூ. 6 மதிப்புள்ள Ghost மற்றும் ரூ.2.8 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் போன்ற கண்கவர் கார் கலெக்ஷனைக் கொண்டுள்ளார். இதுமட்டுமின்றி ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அந்த படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்துக்கு BMW X7 காரை பரிசாக வழங்கினார். இந்த காரின் மதிப்பு சுமார் ₹1.25-1.50 கோடி.

Story first published: Thursday, December 12, 2024, 10:29 [IST]
Desktop Bottom Promotion