Latest Updates
-
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
இந்த வாரம் இந்த 8 தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கை சூரியனைப் போல் பிரகாசிக்கப் போகுது...
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும். ,வேலை தொடர்பான நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும், அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இன்றைய காலக்கட்டத்தில், ஜோதிடத்தில் இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து, மனப்பான்மை எண், வாழ்க்கைப் பாதை எண் மற்றும் பிறப்பு எண் ஆகிய மூன்று எண்களையும், அதுவே பெயரிலிருந்து பெறப்படும் எண்களில் இருந்து, ஆன்மாவின் சக்தி எண் மற்றும் ஆளுமை எண் ஆகியவற்றையும் அறியலாம்.
மேலும், ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமான என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை உருவாக்கும். சரி, இப்போது22 அக்டோபர் 2023 முதல் 28 அக்டோபர் 2023 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் கடினமாக உழைத்தால் நற்பலனைப் பெறலாம். தொழிலதிபர்கள் புதிய வேலையை தொடங்க ஏற்ற வாரம். முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இருப்பினும், உங்கள் நடத்தையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். எதிர்மறை ஆற்றலால் சூழப்பட்டிருப்பீர்கள். மனதில் பல்வேறு வகையான எண்ணங்கள் வரலாம். ஆனால் எதிர்மறை எண்ணங்களை ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். உங்கள் ஆரோக்கியத்திலும் முழு அக்கறை காட்ட வேண்டும். அன்றாட வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்யுங்கள். அவசரப்பட்டு உணர்ச்சிகரமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் மிகவும் இனிமையானதாக இருக்கும். உங்கள் அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி முடிக்கப்படும். சிலருக்கு நல்ல வேலை தேடி வரலாம். மாணவர்களுக்கு இந்த வாரம் நல்ல வெற்றியைத் தரும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்க உரிய எண் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த வாரத்தில் கவனக்குறைவுடன் இருப்பீர்கள். உங்கள் வேலைகளை கடினமாக உழைத்து சரியான நேரத்தில் முடிக்க முயற்சித்தால், விரைவில் முன்னேறலாம். வாழ்க்கைத் துணையுடன் தவறான புரிதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் முரண்பாடுகள் அதிகரிக்கும்.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சிறிய விஷயங்களை மனதில் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைகள் குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கலாம். வேலையைப் பொறுத்தவரை பிஸியாக இருப்பீர்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் குடும்பத்தில் சரியான கவனம் செலுத்த முடியாது. உறவுகளில் மனக்கசப்புகள் ஏற்படலாம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரமானது வேலையைப் பொறுத்தவரை சவாலானதாக இருக்கும். பணிபுரிபவர்கள் இந்த வாரம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேணடும். இல்லாவிட்டால் நிதி இழப்பு ஏற்படலாம். உங்கள் வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்க, அலுவலக டென்சனை வீட்டிற்குள் கொண்டு வராமல் இருந்தால் நல்லது.
எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 7. இதனால் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் நேர்மறையாக இருப்பார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஒருங்கிணைப்பு அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். சிலருக்கு இந்த காலகட்டத்தில் பணத்தட்டுப்பாடு நீங்கும் மற்றும் புதிய வருமானம் கிடைக்கும்.
எண் 8
8,17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்க உரிய எண் 8 . இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் பழைய முதலீடுகளில் இருந்து இரட்டிப்பு பலனைப் பெறலாம். கொஞ்சம் மன அழுத்தத்தை உணருவீர்கள், ஆனால் உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியின் கதவுகளைத் திறந்திருக்கும். மாணவர்களின் படிப்பில் சில இடையூறுகள் ஏற்படும். காதல் வாழ்க்கையில் கொஞ்சம் டென்ஷன் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் இருந்து விலகிச் செல்ல நீங்கள் முடிவு செய்யலாம்.
எண் 9
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்கள்.வேலை தொடர்பான நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும், அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரி உங்கள் செயல்திறனில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு முன்னேற்த்திந்கு பல நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையின் பொறுப்புகளை நீங்கள் சிறப்பாக நிறைவேற்ற முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications