இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு லட்சுமி தேவியின் அருளால் பணம் கொட்டும்...

Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும். ,வேலை தொடர்பான நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும், அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இன்றைய காலக்கட்டத்தில், ஜோதிடத்தில் இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

Weekly Numerology Prediction From 19 November To 25 November 2023 In Tamil

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து, மனப்பான்மை எண், வாழ்க்கைப் பாதை எண் மற்றும் பிறப்பு எண் ஆகிய மூன்று எண்களையும், அதுவே பெயரிலிருந்து பெறப்படும் எண்களில் இருந்து, ஆன்மாவின் சக்தி எண் மற்றும் ஆளுமை எண் ஆகியவற்றையும் அறியலாம்.

மேலும், ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமான என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை உருவாக்கும். சரி, இப்போது 19 நவம்பர் 2023 முதல் 25 நவம்பர் 2023 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

எண் 1

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 1. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு இந்த வாரம் இனிமையாக இருக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் சாதகமான மாற்றங்கள் இருக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.

காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் துணையுடனான உறவு மேலும் வலுவடையும். மாணவர்களுக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். வெளியூர் சென்று வேலை செய்ய விரும்பினால், அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

எண் 2

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 2. இந்த எண்ணிற்கு உரியவர்கள் இந்த வாரத்தில் பணியிடத்தில் மோசமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிலருக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். மேலும் அலுவலக அரசியலுக்கு பலியாக வாய்ப்புள்ளது.

அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். மற்றவர்கள் பேச்சை கேட்டு நடக்காதீர்கள். தொழிலதிபர்களுக்கு முதலீட்டு வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

எண் 3

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 3. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். திட்டமிட்ட அனைத்து பணிகளும் குறித்த நேரத்தில் முடிவடையும். வியாபாரிகள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்களின் சில வேலைகளில் திடீர் தடை ஏற்படலாம்.

மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். மிகுந்த ஆற்றல் நிறைந்தவராக இருப்பீர்கள். நிதி ரீதியாக, நிறைய செலவுகளை சந்திக்கக நேரிடும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் உறவில் புதுமையை உணர்வீர்கள்.

எண் 4

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 4. இந்த எண்ணிற்கு உரியவர்கள் இந்த வாரத்தில் தன்னம்பிக்கையுடன் எந்த காரியத்தை செய்தாலும், வெற்றி பெறுவார்கள். முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பார்த்து, உயர் அதிகாரிகள் உங்களுக்கு பதவி உயர்வை வழங்கலாம்.

வியாபாரிகளுக்கு இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். கடந்த காலத்தில் செய்த முதலீட்டில் இருந்து நல்ல பலன்களைப் பெறலாம். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உறவுகளைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு இனிமையாக இருக்கும். அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

எண் 5

5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 5. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு இந்த வாரம் பிஸியாகவும், பரபரப்பாகவும் இருக்கும். கடந்த வாரம் உங்கள் சில வேலைகள் முழுமையடையாமல் இருந்தால், இந்த வாரத்தில் அதை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதல் சிறப்பாக இருக்கும். வார இறுதியில் குடும்பத்துடன் எங்காவது செல்ல திட்டமிடலாம். மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் எரிச்சலடையச் செய்யும். ஆரோக்கியத்தில் முழு அக்கறை எடுத்துக்கொண்டால் நல்லது.

எண் 6

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 6. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் தீர்ந்து, நிம்மதி பெறுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

எண் 7

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 7. இந்த எண்ணிற்கு உரியவர்கள் இந்த வாரத்தில் வேலை தொடர்பாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முதலீடு செய்ய திட்டமிட்டால், அதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. காதல் வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும்.

திருமணமானவர்கள் திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முடிந்தால் வாழ்க்கைத் துணையுடன் சிறு பயணத்தை மேற்கொள்ளுங்கள் மற்றும் அதிக நேரத்தை ஒன்றாக செலவிட முயற்சி செய்யுங்கள். இதனால் உங்கள் உறவு வலுவடையும். இந்த வாரத்தில் அதிக மன அழுத்தம் காரணமாக ஆரோக்கியம் மோசமடைய வாய்ப்புள்ளது.

எண் 8

8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 8. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு இந்த வாரம் கவலையானதாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உயர் அதிகாரிகளுடன் மோதல்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் சச்சரவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

இல்லையெனில் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். முக்கிய வணிக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த வாரத்தில் உங்கள் கோபம் மற்றும் ஈகோவை கைவிட அறிவுறுத்தப்படுகிறது. இல்லையெனில் உறவுகளில் கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம்.

எண் 9

9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 9. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு இந்த வாரத்தில் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு சற்று கடினமாக இருக்கும். நிதி இழப்பு ஏற்படலாம்.

இந்த வாரத்தில் எடுக்கும் எந்த ஒரு அவசர முடிவும் தவறான விளைவுகளை ஏற்படுத்தும். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். திருமணமாகாதவர்கள் இந்த வாரத்தில் தங்கள் மனதிற்கு பிடித்த துணையை கண்டறியலாம்.

Story first published: Sunday, November 19, 2023, 7:30 [IST]
Desktop Bottom Promotion