Latest Updates
-
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
Weekly Numerology: இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கப் போகுது...
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது19 மே 2024 முதல் 25 மே 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் காதலைப் பொறுத்தவரை மிகவும் ரொமான்டிக்காக இருக்கும். உங்கள் உணர்வுகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வீர்கள். அதே சமயம் திருமணமானவர்கள் வேலையில் பிஸியாக இருப்பதால், உங்கள் துணை உங்களுக்கு போதுமான நேரத்தை கொடுக்க முடியாமல் போகும். ஆனால் உங்களுக்கிடையே பரஸ்பர புரிதல் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சிலர் பதவி உயர்வைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. கூட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல நிதிப் பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் விரும்பிய முடிவுகளைப் பெறுவார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும், மேலும் நீங்கள் உற்சாகமும் ஆற்றலும் நிறைந்திருப்பீர்கள்.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்த மாணவர்களுக்கு இந்த வாரம் சற்று ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். படிப்பில் ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது. எந்த கவனக்குறைவும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். காதல் வாழ்க்கையில் சில குழப்பங்கள் வரலாம். துணையுடன் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் சில மாற்றங்களைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இது உங்களுக்கு முன்னேற்றத்திற்கான வழியைத் திறக்கும். உங்களால் முடிந்ததை கொடுக்க முயற்சி செய்யுங்கள். வணிகர்கள் தங்கள் போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை சந்திக்க நேரிடும். இந்த வாரத்தில் நீங்கள் அதிக அழுத்தத்தை உணருவீர்கள். கவனக்குறைவால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் திருமணமாகாமல் இருந்தால், நீங்கள் யாரையாவது விரும்பினால், இந்த காலகட்டத்தில் உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம் மற்றும் அதற்கு நேர்மறையான பதிலையும் பெறலாம். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்கள் பதவி உயர்வு குறித்து உங்கள் உயர் அதிகாரி முடிவு செய்யலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களின் அனைத்து வேலைகளும் சுமூகமாக முடிவடையும். மாணவர்கள் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடலாம். உடல்நிலை நன்றாக இருக்கும். இந்த வாரத்தில் நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, கடினமாக உழைத்தாலும் எதிர்பார்த்தபடி பலன் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றமும், அதிருப்தியும் அடைவார்கள். இந்த வாரத்தில் தன்னம்பிக்கை குறையலாம். கூட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரிய சவால்களை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது தவிர, உங்கள் துணையுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். காதல் வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமற்றதாகத் தெரியும். உங்களிடையே தவறான புரிதல்கள் அதிகரிக்கலாம். உங்களுக்கு கால்கள் அல்லது தோள்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும் தலைவலி பிரச்சனையாலும் அவதிப்படலாம்.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, அற்புதமாக இருக்கும். உறவில் புதுமையை உணர்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். உங்கள் செயல்திறன் மிகவும் சிறப்பாக இருக்கும், மேலும் கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் முன்னேற்றத்தின் பாதை மிகவும் தெளிவாகத் தெரியும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இந்த நேரத்தில், வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் விருப்பம் நிறைவேறும். நீங்கள் மிகவும் நேர்மறையாகவும் ஆற்றலுடனும் இருப்பீர்கள்.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த வாரம் வேலை செய்பவர்களுக்கு மிகவும் பரபரப்பாக இருக்கும். இருப்பினும், உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் வருமானம் கூடும். வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவில் இணக்கம் ஏற்படும். ஆரோக்கிய விஷயங்கள் சிறப்பாக இருக்கும்.
எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த வாரம் வாழ்க்கைத் துணையுடனான உறவில் கசப்பு அதிகரிக்கலாம். குடும்ப உறுப்பினர்களின் அதிகப்படியான குறுக்கீடு காரணமாக உங்களுக்கு இடையே இடைவெளி அதிகரிக்கும். நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு உங்கள் உறவை வலுவாக வைத்திருக்க முயற்சி செய்தால் நல்லது. காதல் வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமற்றதாகத் தெரியும். மாணவர்கள் படிப்பில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். பல வகையான எதிர்மறை எண்ணங்களும் மனதில் தோன்றலாம். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொண்டால் நல்லது. நீங்கள் நன்றாக நினைத்தால் நல்லது தான் நடக்கும். வேலை அழுத்தம் அதிகரிப்பதால் நீங்கள் மிகவும் சுமையாக உணர்வீர்கள். இந்த வாரத்தில் உங்கள் ஆரோக்கியமும் ஓரளவு பலவீனமாக இருக்கும்.
எண் 8
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த வாரம் நீங்கள் வேலை செய்து பதவி உயர்வு பெற கடுமையாக உழைத்தால் வெற்றி கிடைக்காமல் போகலாம், ஆனால் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் கடின உழைப்பைத் தொடருங்கள், விரைவில் நீங்கள் எதிர்பார்த்த பலனைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் லாபத்திற்காக கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். உங்கள் வேலையில் பல தடைகள் இருக்கலாம். வீட்டில் சூழல் நன்றாக இருக்காது. சொத்து சம்பந்தமான தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் உடல்நிலை குறித்து கவலைப்படுவீர்கள். உணவுக் கோளாறுகளால் உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும்.
எண் 9
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 9. இந்த வாரம் திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். அத்தகைய சூழ்நிலையில் உங்கள் உறவு மேம்படும். காதல் விஷயங்களில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், கல்வித் துறையில் உங்கள் செயல்திறன் சிறப்பாக இருக்கும். இந்த வாரத்தில் விரும்பிய முடிவுகளைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரத்தில் தொடர்புடையவர்களின் நிலை சந்தையில் வலுப்பெறும். இந்த வாரத்தில் சில புதிய யுக்திகளையும் செய்வீர்கள். உங்கள் உடல்நிலை மிகவும் நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











