Latest Updates
-
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்..
இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் கையில் பணம் அதிகம் சேரப் போகுது...
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும். ,வேலை தொடர்பான நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும், அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இன்றைய காலக்கட்டத்தில், ஜோதிடத்தில் இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து, மனப்பான்மை எண், வாழ்க்கைப் பாதை எண் மற்றும் பிறப்பு எண் ஆகிய மூன்று எண்களையும், அதுவே பெயரிலிருந்து பெறப்படும் எண்களில் இருந்து, ஆன்மாவின் சக்தி எண் மற்றும் ஆளுமை எண் ஆகியவற்றையும் அறியலாம்.
மேலும், ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமான என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை உருவாக்கும். சரி, இப்போது 03 டிசம்பர் 2023 முதல் 09 டிசம்பர் 2023 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 1. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு இந்த வாரம் கலவையாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சிறப்பாக நேரத்தை செலவிடுவீர்கள். இருப்பினும், இந்த வாரத்தில் உங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. அவசரத்தைத் தவிர்க்க வேண்டும். திருமண வாழ்வில் சூழ்நிலைகள் சாதகமற்றதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் உறவில் கசப்பு அதிகரிக்கும்.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 2. இந்த எண்ணைச் சேர்ந்தவர்கள் இந்த வாரத்தின் தொடக்கத்தில் பெரிய நிதிப் பலன்களைப் பெறலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் நிதி நிலை வலுவடையும். வியாபாரத்தில் தொடர்புடையவர்களின் சிரமங்கள் அதிகரிக்கும்.
திடீரென வேலைப்பளு அதிகரிப்பதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது தவிர, முக்கியமான முடிவுகளை எடுப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். கவனக்குறைவை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. சிறு வேலைகளையம் கவனமாக செய்யுங்கள். உங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 3. இந்த எண்ணை சேர்ந்தவர்களுக்கு இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்பினால், நல்ல செய்திகளைப் பெறலாம். வணிகர்கள் ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் எடுத்த முடிவினால் நல்ல பலன் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம்.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 4. இந்த எண்ணிற்கு உரியவர்கள் இந்த வாரத்தில் நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். நீங்கள் எடுக்கும் எந்தவொரு சரியான முடிவுகளிலிருந்தும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
பணிபுரிபவர்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். தொழிலதிபர்களுக்கு சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையுடன், உங்கள் உறவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை துணைக்கு போதுமான நேரத்தை கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 5. இந்த எண்ணிற்கு உரியவர்களின் திருமண வாழ்க்கை இந்த வாரத்தில் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். இந்த வாரத்தில் உங்கள் வாழ்க்கைத் துணை மிகவும் பிஸியாக இருப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒன்றாக நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பு குறைவு.
உணர்ச்சி ரீதியாக மிகவும் பலவீனமாக உணருவீர்கள். தேவையற்ற கவலைகளைத் தவிர்த்து, உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. இந்த வாரம் ண விஷயத்தில் மிக முக்கியமானதாக இருக்கும். நீங்கள் உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்தால், வார இறுதியில் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 6. இந்த எண்ணிற்கு உரியவர்கள் இந்த வாரத்தில் பணியிடத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். நீங்கள் நீண்ட நாட்களாக பதவி உயர்வுக்காக காத்திருந்தால், இந்த வாரம் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
பண விஷயத்தில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். உங்கள் வருமானம் கூடும். முதலீடுகள் போன்றவற்றையும் செய்ய நீங்கள் திட்டமிடலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வார இறுதியில் குடும்பத்துடன் நீண்ட தூரம் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் அலட்சியமாக இருக்காதீர்கள்.
எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 7. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு இந்த வாரம் காதலைப் பொறுத்தவரை சிறப்பானதாக இருக்கும். திருமணமாகாதவர்கள் இந்த வாரத்தில் வாழ்க்கைத் துணையை சந்திக்கலாம். நிதி நிலை சிறப்பாக இருக்க உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும் கடன் வாங்குவதற்கும் முன் கவனமாக சிந்திக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. வார இறுதியில் நீங்கள் வேலை தொடர்பான நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்களின் இந்தப் பயணம் மிகவும் சோர்வாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தாமல் இருந்தால் நல்லது.
எண் 8
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 8. இந்த எண்ணிற்கு உரியவர்கள் இதுவரை திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை கொண்டிருந்தால், இந்த வாரத்தில் அந்த பிரச்சனை தீர்ந்து உறவு மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் எங்காவது வெளியே செல்ல வாய்ப்பு உள்ளது.
பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சிலர் புதிய வருமானத்தைப் பெறலாம். இது தவிர சொத்து சம்பந்தமான சில ஆதாயங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். வேலை தொடர்பான முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலகட்டத்தில் உங்கள் உடல்நிலை மோசமடைய வாய்ப்பு உள்ளது.
எண் 9
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 9. இந்த எண்ணிற்கு உரியவர்கள் இந்த வாரத்தில் வீட்டில் சுப காரியங்களை நடத்தலாம். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். பணம் சம்பந்தமான பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் உங்கள் பிரச்சனை இந்த வாரத்தில் தீரும்.
இருப்பினும், உங்கள் நிதி முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது உங்கள் இமேஜை கெடுத்துவிடும். வணிகர்கள் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. இந்த முதலீடு எதிர்காலத்தில் நல்ல பலனைத் தருவதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











