Latest Updates
-
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
இந்த வாரம் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது.. உங்க ராசியும் இதுல இருக்கா?
Weekly Lucky And Unlucky Zodiac Signs In Tamil: கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 16 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரமானது சிறப்பானதாக இருக்கும். அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி முடியும். இந்த வாரத்தில் உங்களின் எதிரிகளை விட பலமானவர்களாக இருப்பீர்கள். வியாபாரிகள் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள்.
பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். அதாவது பதவி உயர்வைப் பெறக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும் மற்றும் உங்கள் வேலையும் நல்ல பாராட்டைப் பெறும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரமானது தொழில் ரீதியாக மிகவும் முக்கியமானதாக இருக்கும். கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் சிறந்து விளங்குவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் நடத்தையில் நல்ல மாற்றத்தைக் காணக்கூடுட்ம. இருப்பினும், ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் முழு நம்பிக்கையுடனும், நேர்மறை எண்ணங்களுடனும் இருப்பார்கள். இந்த வாரத்தில் முழு ஆற்றல் மற்றும் உற்சாகத்துடன் உங்கள் வேலைகளை செய்வீர்கள். பணிபுரிபவர்கள் அல்லது வியாபாரம் செய்பவர்கள், எதிர்பார்த்த நற்பலனைப் பெறுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாகவும், வலுவாகவும் இருக்கும். முக்கியமாக புதிய வருமானத்தைப் பெறக்கூடும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் பல பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். வீட்டிலும், அலுவலகத்திலும் பொறுப்புகள் அதிகரிக்கும். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். நிதி ரீதியாக இந்த வாரம் சற்று சிரமமாக இருக்கும். கடன் வாங்கும் சூழலும் உருவாகலாம். ஆனால் கடன் கிடைக்காது. திருமணமான தம்பதிகளுக்கு இடையே இடைவெளி ஏற்படலாம். ஆரோக்கிய பிரச்சனைகளால் அதிகம் அவதிப்படக்கூடும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மோசமாக இருக்கும். குடும்ப சூழல் நன்றாக இருக்காது. வீட்டில் பணம் தொடர்பான வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வாரத்தில் எந்த ஒரு முடிவுகளையும் கவனமாக எடுக்க வேண்டும். வேலையைப் பொறுத்தவரை, இந்த வாரம் பிஸியாக இருக்கும். இருப்பினும், உயர் அதிகாரிகளின் உதவியுடன் குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரிகள், இந்த வாரம் எந்த ஒரு பண பரிவர்த்தனைகளை செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் தங்களின் நடத்தையால் காதலரைப் பிரிய நேரிடும். எனவே இந்த வாரத்தில் பேச்சு மற்றும் நடத்தையில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாரத்தில் செலவுகள் திடீரென்று அதிகரிக்கும். இது உங்கள் பட்ஜெட்டை சீர்குலைக்கும். பணிபுரிபவர்கள், தங்களுக்கு கொடுத்த வேலையை முடிக்க முயற்சிக்க வேண்டும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் கலவையானதாக இருக்கும். ஒரு பெரிய லாபத்தைப் பெற விரும்பினால், இந்த வாரத்தில் அது நடக்காது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
