Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்!
வார ராசிபலன் (23 April to 29 April 2023) - இந்த வாரம் இந்த ராசிக்கார்களின் பெரிய பிரச்சனை முடிவுக்கு வர போகுது
நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 ஏப்ரல் 23 முதல் 2023 ஏப்ரல் 29 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்கள் இந்த வாரத்தில் விரும்பிய வாழ்க்கைத் துணையைக் காணலாம். நிதி நிலையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. திடீரென்று பெரிய செலவுகள் ஏற்படலாம். இதனால் கடன் வாங்க நேரிடும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் பரபரப்பாக இருக்கும். தடைபட்ட திட்டங்களை மீண்டும் தொடங்க கடுமையாக முயற்சி செய்வீர்கள். பணிபுரிபவர்கள் இந்த வாரம் வேலைக்காக பயணம் செய்ய வேண்டியிருக்கும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள்: புதன்
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இந்த வாரத்தில் சில முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரத்தில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். நிதி ரீதியாக, இந்த வாரம் கலவையாக இருக்கும். வாரத்தின் ஆரம்ப நாட்கள் நன்றாக இருந்தாலும், போக போக செலவுகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை செய்பவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வருமானம் உயரும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் கடனில் இருந்து விடுபடுவார்கள். தொழிலில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடனான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வார இறுதியில் மதிப்புமிக்க பொருட்களை வாங்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரிகளுக்கு முக்கியமானதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வார இறுதியில் பணம் கிடைக்கும். நீங்கள் ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த வாரத்தில் உங்கள் ஆரோக்கியம் இன்னும் மோசமாகக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் சிறு விஷயங்களுக்காகவும் எரிச்சலடையலாம். அதிகமாக கோபப்படுவீர்கள். இந்த வாரத்தில் நிறைய விவாதத்தில் ஈடுபடுவீர்கள். நிதி நிலை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பல சிரமங்களைச் சந்திக்க நேரிடும். மனதளவில் மிகவும் சிரமப்படுவீர்கள். நீங்கள் விரும்பினாலும் உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாது. வாழ்க்கை துணைக்கு பாதகமான சூழ்நிலைகளில் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி ரீதியாக மிகவும் சாதகமாக இருக்கும். உங்களின் நிதிப் பிரச்சனை தீரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலதிபராக இருந்தால், இந்த வாரம் உங்களின் தடைபட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் நிறைவேறும். நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் சராசரியாகவே இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வானம் நீலம்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்கள் மிகவும் பிஸியாக இருக்கக்கூடும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்களால் முடிந்ததைச் செய்ய கடினமாக உழைப்பீர்கள். நிதி ரீதியாக இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். வாரத்தின் ஆரம்ப நாட்கள் உங்களுக்கு சவாலாக இருக்கும். ஆனால் போக போக சிறப்பாக இருக்கும். உங்கள் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். இந்த வாரம் பட்ஜெட்டிற்கு ஏற்ப செலவழிப்பீர்கள். இதனால் உங்களால் சேமிப்பில் கவனம் செலுத்த முடியும். பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். இருப்பினும், உங்கள் கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் வலிமையால், உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். தொழிலதிபர்கள் நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கும். உடல்நலத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். வணிகம் வளர்ச்சியடையும். நிறைய லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புகளின் சுமை உங்கள் மீது அதிகரிக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. வார இறுதியில் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த வாரம் நீங்கள் மனதளவில் மிகவும் வருத்தப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் பணம் குறித்த கவலை அதிகரிக்கும். செலவுகள் கூடும். கடன் வாங்கியிருந்தால், அதை திருப்பி செலுத்தும் அழுத்தம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் நடத்தை உங்களுக்கு சரியாக இருக்காது. வேலையை விட்டு விலகும் எண்ணத்தில் முடிவெடுப்பீர்கள். ஆனால் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் பெரிய கவலைகள் நீங்கும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் நடத்தையில் மாற்றம் ஏற்படலாம். இந்த வாரம் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பெரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும், ஆனால் உங்களால் முடிந்ததைச் செய்வீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனை வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நாள்: புதன்
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. பண விஷயத்தில் இந்த வாரம் சிறப்பாக இருக்காது. உங்கள் வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். இல்லையெனில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு இன்னும் வலுவாகும். உங்களின் முக்கிய பணிகளை முடிப்பதில் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள்: திங்கள்



Click it and Unblock the Notifications