Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சிம்ம ராசியில் வக்ரமாகியுள்ள சுக்கிரன்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரர்களாக்கப் போகுது..
Venus Retrograde 2023 In Leo: நவகிரகங்களில் காதல், அழகு, ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் சிம்ம ராசிக்குள் நுழைந்தார்.
இந்நிலையில் ஜூலை 23 ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியில் வக்ரமாகியுள்ளார். சுக்கிரன் இந்த வக்ர நிலையில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் கடக ராசிக்குள் நுழைந்துவிடுவார்.

சிம்ம ராசியில் வக்ரமாக இருக்கும் சுக்கிரனின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். வக்ர நிலையில் கிரகங்கள் பலவீனமாக இருந்தாலும், அதன் தாக்கம் நிச்சயம் 12 ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் சிம்ம ராசியில் வக்ரமாகியுள்ள சுக்கிரனால் 4 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் அளவில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள். சுக்கிரனின் அருளால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிறைய பணத்தை சாம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபகரமான காலமாக இருக்கும். புதிய வாகனம் அல்லது நிலம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமாகியுள்ளார். இதனால் எந்த துறையில் இந்த ராசிக்காரர்கள் வேலை செய்தாலும், அதில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களை நிரூபிக்க இதுவே சிறந்த காலம். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் காண்பார்கள். கூட்டு தொழில் செய்பவர்கள், தங்கள் கூட்டாளரின் ஆதரவைப் பெறுவார்கள். வாழ்க்கை திருப்திகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஊடகத்தில் இருப்பவர்கள் இக்காலத்தில் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். சுக்கிரனின் அருளால் இந்த ராசிக்காரர்களின் காட்டில் பண மழை பொழியும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சம்பள உயர்வைப் பெறலாம். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காணலாம். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். மாணவர்களுக்கு இக்காலம் பயனுள்ளதாக இருக்கும். இக்காலத்தில் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
