Latest Updates
-
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம்
சுக்கிரன்-சந்திரன் சேர்க்கையால் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை செழிப்பா இருக்கும்...
Venus Moon Conjunction In Libra: வேத ஜோதிடத்தில், சந்திரன் மிகவும் வேகமாக நகரக்கூடிய கிரகமாகும். இந்த சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருப்பார். அப்படி சந்திரன் வேகமாக நகர்வதால், அடிக்கடி மற்ற கிரகங்களுடன் சேர்ந்து, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும்.
அந்த வகையில் சந்திரன் துலாம் ராசியில் நுழைந்துள்ளார். இந்த துலாம் ராசியில் ஏற்கனவே சுக்கிரன் பயணித்து வருகிறார். இதனால் துலாம் ராசியில் சுக்கிரன் மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது.

இந்த சேர்க்கையானது 2 1/2 நாட்கள் நீடித்திருக்கவுள்ளது. இவ்விரு கிரகங்களின் சேர்க்கை மங்களகரமானதாக கருதப்படுவதால், இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.
இப்போது துலாம் ராசியில் நிகழ்ந்துள்ள சுக்கிரன் சந்திரன் சேர்க்கையால் எந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் சந்திரன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வீடு கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
புதிய சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் சந்திரன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். ஆளுமை மேம்படும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் குணாதிசயம் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கலை, நடிப்பு, ஊடகம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் சந்திரன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். குடும்ப வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலம் லாபகரமானதாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் இக்காலத்தில் கிடைக்கும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வீடு, வாகனம், சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சிலர் இக்காலத்தில் வீட்டை புதுப்பிக்கலாம். இதன் காரணமாக நிறைய செலவுகளை சந்திக்க நேரிடலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications