Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க -
இந்த பிரச்சனை இருந்தா, பூண்டு அதிகமா சாப்பிடாதீங்க.. - எச்சரிக்கும் டாக்டர்! -
நாகர்கோயில் வாழைக்காய் துவட்டல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
50 ஆண்டுகளுக்கு பின் சிம்மத்தில் செவ்வாய் புதன் சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு நல்ல ஜாக்பாட் அடிக்கபோகுது
Venus Mars Mercury In Leo After 50 Years: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும் போது, மற்ற கிரகங்களுடன் இணைந்து பயணிக்கும் வாய்ப்புக்களும் உருவாகும்.
அப்படி ஒரு ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றாக இணைந்து பயணித்தால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் ஒரு ராசியில் 3 கிரகங்கள் சேர்ந்தால், திரிகிரக யோகம் உருவாகும்.

அந்த வகையில் ஜூலை மாதம் 25 ஆம் தேதி புத்திகாரகனான புதன் சிம்ம ராசிக்குள் நுழைந்தார். சிம்ம ராசியில் நுழையும் போது, ஏற்கனவே அந்த ராசியில் கிரகங்களின் தளபதியான செவ்வாயும், செல்வ செழிப்பிற்கு காரணமான சுக்கிரனும் பயணித்து வருவதால், சிம்ம ராசியில் 3 கிரகங்களின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது.
சிம்ம ராசியில் செவ்வாய், புதன், சுக்கிரனின் சேர்க்கையானது 50 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த சேர்க்கை சிறப்பானது மட்டுமின்றி, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமாக இந்த சேர்க்கையால் 3 ராசிக்காரர்கள் ஏராளமான நன்மைகளையும், லாபத்தையும் காண்பார்கள். இப்போது அந்த அதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. அதுவும் செல்வம் மற்றும் லாபத்தின் அதிபதிகள் இந்த வீட்டில் உள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்கள் வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபத்தைக் காண்பார்கள். தொழில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.
திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வாகனம், சொத்து வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை இல்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இக்காலத்தில் வருமானத்தில் நல்ல அதிகரிப்பைக் காணலாம். புதிய வருமானத்தை பெற மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து தொழிலைத் தொடங்கினால், அந்த தொழில் நல்ல லாபத்தைத் தரும். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலை வழக்கத்தை விட மிகவும் சிறப்பாகவும், வலுவாகவும் இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். எதிர்பாராத பண வரவைப் பெறக்கூடும். கூட்டு வியாபாரம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வைக் காணலாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இல்லாத அளவில் தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். இதனால் பல காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications