Latest Updates
-
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...
வாஸ்துப்படி, பெண்கள் செய்யும் இந்த தவறுகள், வீட்டிற்கு வறுமையை கொண்டு வருமாம்...
Vastu Tips In Tamil: நாம் ஒவ்வொருவருமே நம்மை அறியாமல் ஒருசில தவறுகளை செய்து வருகிறோம். மேலும் அந்த தவறுகளால் பலவிதமான பிரச்சனைகளையும் சந்திக்கிறோம். வாஸ்துப்படி, ஒருவரது பழக்கங்கள் அவரது வாழ்க்கையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் குடும்பத்தில் உள்ள பெண்கள் லட்சுமி தேவியின் வடிவமாக மற்றும் அதிர்ஷ்டத்துடன் தொடர்புடையவர்களாக கருதப்படுகிறார்கள்.
அப்படிப்பட்ட பெண்களின் நடத்தை ஒரு வீட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன. மேலும் கணவனின் முன்னேற்றத்தில் மனைவின் நடத்தையும் முக்கிய பங்கை வகிப்பதாக கூறப்படுகிறது. ஒரு குடும்பம் நல்ல செல்வ செழிப்போடு இருக்க வேண்டுமானால், வீட்டில் உள்ள பெண்கள் ஒருசில பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

இல்லாவிட்டால் அந்த பழக்கங்களே வீட்டிற்கு வறுமையை கொண்டு வரும். இப்போது வாஸ்துப்படி, வீட்டில் வறுமை ஏற்படாமல் இருக்க, பெண்கள் எந்த மாதிரியான பழக்கங்களை தவிர்க்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மாலை வேளையில் தூங்குவது
மாலை வேளையில் செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவி வீட்டிற்கு வருகை தருவார். அப்படி வரும் போது, வீட்டின் லட்சுமி தேவியாக கருதப்படும் பெண்கள் தூங்கினால், லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகி, வீட்டில் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே சூரியன் அஸ்தமனமான பின் பெண்கள் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
அழுக்கு பாத்திரங்களை சேர்த்து வைப்பது
நிறைய வீடுகளில் சமையலறையில் அழுக்கு பாத்திரங்களை நீண்ட நேரம் சேர்த்து வைத்து, பின் கழுவுவதைக் காணலாம். இப்படி அழுக்கு பாத்திரங்களை சேர்த்து வைத்து கழுவினால், அது வீட்டில் வாஸ்து குறைபாடுகளை உண்டாக்கி, வீட்டில் வறுமையை வரவழைக்கும். இதைத் தவிர்க்க அழுக்கு பாத்திரங்கள் சேர்ந்தால், அதை அவ்வப்போது கழுவ வேண்டும். முக்கியமாக இரவு தூங்கும் முன் சமையலறையை சுத்தம் செய்துவிட்டு, பின்னரே தூங்க வேண்டும்.
சமைக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவை
வாஸ்துப்படி பெண்கள் சமைக்கும் போது கோபமாக இருக்கக்கூடாது. அதோடு திட்டிக் கொண்டு சமையல் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால், அது அன்னப்பூரணியை அவமானப்படுத்துவதற்கு சமம் மற்றும் அவரது கோபத்திற்கு ஆளாகக்கூடும். எனவே வீட்டில் உணவுப் பற்றாக்குறை வரக்கூடாதெனில், பெண்கள் எப்போதும் சந்தோஷமாக சமைக்க வேண்டும்.
குளிக்காமல் சமைப்பது
சில பெண்கள் குளிக்காமலேயே சமையல் செய்ய செல்வார்கள். அப்படி செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது வீட்டில் வறுமையை வரவழைப்பதோடு, லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக்கும். எனவே எப்போதும் குளித்த பின்னரே சமைக்க வேண்டும். இதனால் வீடு எப்போதும் செல்வ செழிப்போடு இருக்கும்.
வீட்டை சுத்தம் செய்வது
பெண்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைப்பார்கள். ஆனால் அதற்காக சூரியன் அஸ்தமனமான பின் வீட்டை பெருக்குவது, துடைப்பது என செய்யக்கூடாது. இல்லாவிட்டால், லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகி, வீட்டில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications