Latest Updates
-
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க..
வாஸ்துப்படி, தலையணைக்கு கீழ் இத வெச்சு தூங்குனா.. வீட்டில் பணம் அதிகம் சேருமாம்.. ட்ரை பண்ணி பாருங்க..
Vastu Tips In Tamil: நாம் அனைவருமே எவ்வித பிரச்சனையும் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டுமென்று விரும்புவோம். சந்தோஷமான வாழ்க்கைக்கு பணம் மிகவும் இன்றியமையாதது. அப்படிப்பட்ட பணத்தை சம்பாதிக்க நாம் அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் அப்படி சம்பாதிக்கும் பணம் வீட்டில் சேராமல், அதிகம் செலவாகிக் கொண்டிருந்தால், அதற்கு காரணம் வீட்டில் உள்ள வாஸ்து தோஷம் தான். எப்படி சந்தோஷமான வாழ்க்கைக்கு பணம் முக்கியமோ, அதேப் போல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியம்.

ஆனால் தற்போதைய அவசர உலகில் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள போதுமான நேரம் கிடைப்பதில்லை. ஓய்வு எடுக்க கிடைக்கும் நேரம் என்றால், அது இரவு மட்டும் தான்.
அப்படி இரவு தூங்கும் போது நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற்றாலே, பாதி ஆரோக்கிய பிரச்சனையைத் தவிர்க்கலாம். இருப்பினும் ஒருசில காரணங்களால் போதுமான தூக்கத்தைப் பெற முடியாமல் பலரும் அவதிப்படுகிறார்கள்.
ஆனால் இப்படி சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு வாஸ்து மூலம் தீர்வு காணலாம். கீழே வாஸ்து சாஸ்திரத்தின் படி, வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தலையணைக்கு அடியில் எந்த பொருட்களை வைத்து தூங்க வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
கெட்ட கனவுகளை தடுக்க...
அதிக மன அழுத்தத்தினால், இரவு தூங்கும் போது கெட்ட கனவு வந்து உங்கள் தூக்கத்தை கெடுக்கிறதா? அப்படியானால் அந்த கெட்ட கனவுகளை தடுக்க கத்தியை தலையணைக்கு அடியில் வைத்து தூங்குங்கள். இதனால் மன அமைதி கிடைக்கும். ஆனால் கத்தியை வைத்து தூங்கும் போது, பாதுகாப்பிற்காக அந்த கத்தியை ஒரு துணியால் சுற்றி வையுங்கள்.
நிம்மதியான தூக்கத்தைப் பெற...
சிலர் அதிகப்படியான வேலைப்பளுவால் இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற முடியாமல் அவதிப்படுவார்கள். அத்தகையவர்கள் படுக்கை அறையில் நல்ல வாசனை நிறைந்த மெழுகுவர்த்திகளை ஏற்றுவதால், அதிலிருந்து வெளிவரும் மணத்தால் மனம் அமைதி பெற்று, சுற்றுச்சூழலும் இனிமையாக இருக்கும். அதேப் போல், அந்த வாசனை நிறைந்த மெழுகுவர்த்திகளை தலையணைக்கு அடியில் வைத்து தூங்குவதால் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.
நேர்மறை ஆற்றலை அதிகரிக்க...
இந்து மதத்தில் பகவத் கீதை மிகவும் புனிதமான புத்தகமாகும். இந்த புத்தகத்தில் எப்பேற்பட்ட கடினமான சூழ்நிலைகளிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பன குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதோடு, நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதாக கூறப்படுகிறது. இந்த புத்தகத்தை படுக்கையறையில் தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால், எதிர்மறை ஆற்றல் வெளியேற்றப்படும். இருப்பினும், பலர் இந்த புனிதமான புத்தகத்தை படுக்கையின் மேல் வைப்பதை மோசமான விஷயமாக கருதுகிறார்கள். அத்தகையவர்கள் இந்த புத்தகத்தை தலையணைக்கு அருகே வைத்துக் கொண்டு தூங்கலாம்.
மன அழுத்தம் நீங்க..
வாஸ்து சாஸ்திரத்தின் படி, அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது, ஏலக்காய் அல்லது பச்சை மிளகாயை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால், நல்ல நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைத்ப் பெறலாம். முக்கியமாக இது மனதை ரிலாக்ஸாக்கும்.
ஆரோக்கியம் மேம்பட...
வாஸ்துப்படி இரவு தூங்கும் போது காப்பர் சொம்பு அல்லது டம்ளரில் நீரை நிரப்பி, அதை தலையணைக்கு அருகில் வைத்து தூங்கினால், அது நல்ல நிம்மத்தியான தூக்கத்தை பெற உதவுவதோடு, ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது.
ராகு தோஷம் நீங்க...
வாஸ்து சாஸ்திரத்தில், சோம்பு விதைகள் ராகு தோஷத்தை போக்குவதோடு தொடர்பு கொண்டுள்ளது. இப்படிப்பட்ட சோம்பை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்கினால், மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதோடு, அந்த மன அழுத்தத்தினால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவதும் தடுக்கப்படுகிறது.
நேர்மறை ஆற்றல் அதிகரிக்க...
நீங்கள் தூங்கும் பகுதியைச் சுற்றி எதிர்மறை ஆற்றல் அதிகம் சூழ்ந்திருப்பது போன்று உணர்ந்தால், ஒரு பூண்டு பல்லை எடுத்து, தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்குங்கள். இதனால் அது நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதோடு, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற தூண்டுகிறது.
வீட்டில் செல்வம் பெருக..
நாணயங்கள் நல்ல நிதி நிலை மற்றும் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. அப்படிப்பட்ட நாணயத்தை இரவு தூங்கும் முன், கிழக்கு பகுதியில் வைத்து தூங்கினால், அது அந்த வீட்டில் நல்ல அதிர்ஷ்டத்தை மற்றும் செல்வத்தை ஈர்க்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











