Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இந்த நேரத்தில் வீட்டின் கதவு, ஜன்னல்களைத் திறந்து வைத்தால் அதிர்ஷ்டம் பெருகும்!
பலர் தங்கள் வீட்டில் லட்சுமி தேவி வசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நிதி நிலையை அதிகரிக்க ஆசை. வாஸ்து சாஸ்திரத்தின்படி லட்சுமி தேவியை வீட்டிற்கு கொண்டு வர இந்த குறிப்புகளை பின்பற்ற வேண்டும்.
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியமானது. வீடு கட்டுவது முதல் அலங்காரம் வரை வாஸ்து மிகவும் முக்கியமானது. லட்சுமி வீட்டிற்கு வரும்போது ஜன்னல் கதவுகளை மூடுவது தவறு. எனவே கதவு மற்றும் ஜன்னல்களை எப்போது திறக்க வேண்டும் மற்றும் மூட வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி லட்சுமி தேவி வீட்டிற்கு வந்து வீட்டின் கதவை திறந்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இந்து மதத்தில், லட்சுமி தேவி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மாலையில் வீட்டிற்குள் நுழைவதாகக் கூறப்படுகிறது. லட்சுமி தேவி தினமும் ஒருமுறை வீட்டிற்கு வருவாள் என்றும் கூறப்படுகிறது. அதாவது சூரியன் உதிக்கும் நேரத்தில் பிரம்மாவின் வேளையில் லக்ஷ்மி தேவி வீட்டிற்கு வருவாள், எனவே இந்த நேரத்தில் கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைப்பது நல்லது.
அதேபோல் சூரிய அஸ்தமனத்தின் போது வீட்டில் விளக்கேற்றுவதும் கதவு, ஜன்னல்களை திறந்து வைப்பதும் நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் வரும் என்பது நம்பிக்கை. அதேபோல, வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டு, காலை, மாலை துளசி செடிக்கு அருகில் தீபம் ஏற்றினால், லட்சுமியின் அருள் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
மேலும்ஒருவர் குடியிருக்கும் வீட்டில் நேர்மறை ஆற்றலானது வீட்டின் பிரதான நுழைவாயிலின் வழியாகத் தான் நுழைகின்றன. குடியிருக்கும் வீடு நேர்மறை ஆற்றல் நிரம்பியிருந்தால், அந்த வீடு செல்வ செழிப்போடு இருக்கும்.
துளசி செடி மிகவும் புனிதமான செடி. துளசி செடி இருக்கும் வீட்டில் லட்சுமி தேவி குடியிருப்பாள் என்பது நம்பிக்கை. மேலும் துளசி செடியானது நல்ல வாசனையைக் கொண்டிருப்பதால், அது சுற்றுப்புறத்தை நல்ல மணத்துடன் வைத்திருக்கும். இது தவிர துளசி செடி வீட்டினுள் எதிர்மறை ஆற்றல் நுழைவதைத் தடுக்கும். எனவே உங்கள் வீட்டில் செல்வம் பெருக நினைத்தால், துளசி செடியை வீட்டு வாசலில் வாங்கி வையுங்கள்..
வாஸ்து சாஸ்திரத்தில் மணி பிளான்ட் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் மற்றும் பணத்தை அதிகரிக்கும் ஒரு மங்களகரமான செடியாக கருதப்படுகிறது. இந்த மணி பிளான்ட்டை வீட்டின் வாசலில் படர வைத்தால், அந்த மணி பிளான்ட் வளர்வதைப் போன்றே, வீட்டில் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை. அதோடு மணி பிளான்ட் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடியது. எனவே இந்த மணி பிளான்ட்டை வாங்கி வைக்கலாம்.
வாஸ்துப்படி, வீட்டு வாசலில் மல்லிகை செடியை வைத்து வளர்ப்பது மிகவும் நல்லது. மல்லிகை நல்ல மணம் கொண்டது. நல்ல மணம் நிறைந்த இடத்தில் லட்சுமி தேவி வாசம் செய்வாள். எனவே மல்லிகை செடியை வாசலில் வைத்தால், அது வீட்டில் அதிர்ஷ்டம் மற்றும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இந்த செடியில் இருந்து மலரும் பூக்கள் சுற்றுச்சூழலை நல்ல மணத்துடன் வைப்பதுடன், செல்வத்தை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications