Latest Updates
-
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு பால் கொழுக்கட்டை - ஈஸியா எப்படி செய்யணும்? -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் நிகழப்போகும் ஆபத்தான மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? -
ஒரு கையளவு உப்புக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்!' -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் ஆடி பால் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - தித்திப்பா சூப்பரா இருக்கும் -
ஆடி மாதத்தில் ஏன் திருமணம் செய்யப்படுவதில்லை? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
சனி-செவ்வாயால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இன்னும் 2 நாட்களில் இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அவல் குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
பண நெருக்கடி அதிகமா இருக்கா? இந்த 1 ரூபா பொருளை 'இந்த மாதிரி' யூஸ் பண்ணுங்க.. உடனே சரியாகும்..
Vastu Tips In Tamil: என்ன தான் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்தாலும், அனைவருமே பிரச்சனையில்லாத வாழ்க்கையை வாழ்வது இல்லை.
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஒவ்வொருவிதமான பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். சிலரது வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் இருக்கும். எந்த ஒரு வேலையை செய்தாலும், அதில் தடைகள் ஏற்படும். இதன் விளைவாக வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியாது.

இப்படி ஒருவர் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்தால், அதற்கு காரணம் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடு தான். நீங்களும் இப்படி உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியாத வகையில் பலவிதமான தடைகளையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறீர்களானால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒருசில பரிகாரங்கள் உள்ளன. அதுவும் பூஜை அறையில் உள்ள கற்பூரத்தைக் கொண்டு இந்த பரிகாரங்களை செய்யலாம். இப்போது அந்த கற்பூர பரிகாரங்களைக் காண்போம்.
வாஸ்து குறைபாட்டை போக்க...
வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், அந்த வாஸ்து குறைபாட்டின் தாக்கத்தைக் குறைக்க கற்பூரம் பெரிதும் உதவி புரியும். அதற்கு கற்பூரங்களை எடுத்து, வாஸ்து தோஷம் உள்ள இடத்தில் வைத்து எரிக்க வேண்டும். அப்படி கற்பூரம் எரிந்ததும், புதிய கற்பூரத்தை போட்டு மீண்டும் எரிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வாஸ்து தோஷம் நீங்கும்.
அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற...
சில சமயங்களில் நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அந்த வேலையை வெற்றிகரமாக முடிக்க முடியாது. இப்படிப்பட்ட நேரத்தில் தினமும் குளிக்கும் போது, அந்த நீரில் கற்பூரத்தைப் போட்டு குளிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், கற்பூரத்தின் நல்ல மணமானது நேர்மறை ஆற்றலால் சூழ்ந்திருக்க செய்து, நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். இதன் விளைவாக ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
வீட்டில் உள்ள பிரச்சனை குறைய...
குடும்ப உறுப்பினர்களிடையே வாக்குவாதம் அதிகமாக உள்ளதா? எப்போதும் வீட்டில் சண்டைகள் இருந்தவாறு உள்ளதா? குடும்ப சூழலே அமைதியிழந்து உள்ளதா? அப்படியானால் வீட்டு சூழல் அமைதியாகவும் இனிமையாகவும் இருக்க, கற்பூரத்தில் நெய்யை சேர்த்து அதை எரித்து, வீடு முழுவதும் காட்டுங்கள். இதன் நறுமணமானது வீட்டை நல்ல மணத்துடன் வைத்து, வீட்டில் நேர்மறை ஆற்றலை நிரம்பியிருக்கச் செய்யும். இதனால் குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
பண நெருக்கடி நீங்க...
ஒவ்வொருவருமே கடன் இல்லாத வாழ்க்கையையே வாழ விரும்புவோம். ஆனால் சூழ்நிலை நம்மை கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளிவிடுகிறது. இப்படி வாங்கிய கடனை செலுத்த முடியாமல் பலர் சிரமப்படுவதுண்டு. நீங்களும் கடன் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் ஒரு வெள்ளி கிண்ணத்தில் கற்பூரம் மற்றும் கிராம்பை போட்டு எரித்து, அதை வீடு முழுவதும் காட்டுங்கள். இப்படி செய்வதன் மூலம், வீட்டில் உள்ளவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் முழுமையாக கிடைக்கும் மற்றும் பண நெருக்கடியும் முடிவுக்கு வரும்.
தொழிலில் வெற்றி காண...
உங்கள் தொழிலில் நல்ல வெற்றியையும், லாபத்தையும் காண வேண்டுமா? அப்படியானால் கற்பூரம் இதற்கு பெரிதும் உதவி புரியும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கற்பூரத்துடன் கிராம்புகளை வைத்து எரிக்க வேண்டும். அதுவும் சுத்தமான இடத்தில் இப்படி செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், வீட்டில் உள்ளோர் தங்கள் தொழிலில் வெற்றி காண்பார்கள். மேலும் செய்யும் வேலைகளில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications