Latest Updates
-
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
இன்று வருத்தினி ஏகாதசி 2024... விரதம் இருந்தால் இத்தனை நன்மைகளா?
சித்திரை மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷத்தில் வரும் ஏகாதசியை வாருதினி ஏகாதசி என்பர். இந்த புனித நாளில் நாம் விஷ்ணு பகவானையும், லட்சுமி தேவியையும் வணங்குகிறோம். இந்த ஆண்டு வருத்தினி ஏகாதசியை மே 4ஆம் தேதியான இன்று கொண்டாடுகிறோம். இந்த நாளில் விஷ்ணுவிடம் பூஜை செய்தால் எதிர்பார்த்தது நடக்கும் என்கின்றனர் பண்டிதர்கள்.
ஏகாதசி என்பது இந்து பக்தர்களிடையே, விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட விரதமாகும். இந்த விரதத்தை கடைபிடிப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றல் மற்றும் தீமையிலிருந்து ஒருவரை பாதுகாக்க முடியும் என்று நம்பப்படுகிறது. வருத்தினி ஏகாதசி 2024 உலகளவில் இந்து மக்களால் கொண்டாடப்படுகிறது.

வருத்தினி ஏகாதசி முக்கியத்துவம்
இந்த ஏகாதசி இந்து கலாச்சாரத்தில் ஆழ்ந்த மத முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இது அர்ப்பணிக்கப்பட்ட வழிபாடு மற்றும் விஷ்ணு பக்தியின் காலத்தை குறிக்கிறது. இன்று விரதம் இருப்பவர்கள் கடுமையான உண்ணாவிரத சடங்குகளை மேற்க்கொள்வார்கள். தியானம், யோகா மற்றும் ஆன்மீக நடைமுறைகளில் தங்களை முழுவதுமாக மூழ்கடித்து விடுகிறார்கள். விரதத்தை மேற்கொள்பவர்களைக் காக்கும் நோக்கத்தில், விஷ்ணுவின் வாமன அவதாரத்தை கௌரவிக்க நிதி வழங்குதல் போன்ற தொண்டுச் செயல்கள் உட்பட பல்வேறு வழிகளில் வருத்தினி ஏகாதசி கொண்டாடப்படுகிறது.
வருத்தினி ஏகாதசி வரலாறு
இந்து சாஸ்திரங்களின்படி, பிரம்மாவின் கோபத்திற்கு ஆளான சிவபெருமான், பிரம்மாவின் ஐந்தாவது தலையை துண்டித்த கதை உள்ளது. இதன் விளைவாக, சிவபெருமான் பிரம்மாவிடம் சாபம் பெற்றார். இருப்பினும், விஷ்ணுவின் தலையீட்டால் சிவன் இந்த சாபத்திலிருந்தும் பாவத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டார். வருத்தினி ஏகாதசி அன்று விரதம் அனுஷ்டிப்பது சிவபெருமானுக்கு சாப விமோசனம் அளித்ததாக புராணம் கூறுகிறது. இந்த விரதத்தை மிகுந்த பக்தியுடன் கடைப்பிடிக்கும் பக்தர்கள் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்த பலன்களைப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
வருத்தினி ஏகாதசி தேதி மற்றும் நேரம்
4 மே 2024 சனிக்கிழமையன்று வரும் வருத்தினி ஏகாதசி இந்துக்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. த்ரிக் பஞ்சாங்கத்தின் படி, விரதத்தை கடைப்பிடிப்பதற்கான நல்ல நேரங்கள் பின்வருமாறு:
- வருத்தினி ஏகாதசி திதி மே 3 அன்று இரவு 11:24 மணிக்கு தொடங்குகிறது
- வருத்தினி ஏகாதசி திதி மே 4 அன்று இரவு 8:38 மணிக்கு நிறைவடைகிறது
- பரண நேரம் மே 5 அன்று காலை 5:54 முதல் 08:35 வரை
வருத்தினி ஏகாதசி சடங்குகள்
வருத்தினி ஏகாதசியை கடைபிடிப்பது பல சடங்குகளை உள்ளடக்கியது
1. விடியலுக்கு முன் சுப வேளையான பிரம்ம முஹூர்த்தத்தின் போது எழுந்து ஸ்நானம் செய்யுங்கள். விரதத்தைக் கடைப்பிடிக்க உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
2. மர மேடை அமைத்து அதன் மீது விஷ்ணுவின் படத்தை வைத்து, சிவப்பு அல்லது மஞ்சள் துணியால் மூடி வைக்கவும்.
3. பஞ்சாமிர்தத்தை (பால், தயிர், நெய், தேன் மற்றும் கங்கை நீர் ஆகியவற்றின் கலவை) விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கவும்.
4. தூபம், தீபம், கற்பூரம் ஆகியவற்றை பிரசாதமாக ஏற்றவும்.
5. விஷ்ணுவின் மந்திரத்தை உச்சரிக்கவும், பின்னர் விஷ்ணுவுக்கு 'ஆரத்தி' எடுத்து அனைவருக்கும் பிரசாதத்தை கொடுக்க வேண்டும்..
இன்று செய்ய வேண்டியவை
1. வருதினி ஏகாதசி அன்று ஸ்ரீ மகா விஷ்ணுவின் திருவுருவம் அல்லது சிலைக்கு துளசி அர்ச்சனை செய்ய வேண்டும்.
2. விஷ்ணுவுடன் லட்சுமி தேவியையும் வழிபட வேண்டும்.
3. வழிபாட்டில் மஞ்சள் பழங்கள் அல்லது மஞ்சள் பொருட்கள் இருக்க வேண்டும்.
4. தெற்கு நோக்கிய ஒரு சங்கு கங்கை நீரால் நிரப்பப்பட்டு விஷ்ணுவுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
5. இன்று அன்னதானம் செய்ய வேண்டும்.
செய்யக்கூடாதவை
1. சிவப்பு தானியங்களை சாப்பிட வேண்டாம்.
2. பிறர் வீட்டில் உணவு உண்ணக் கூடாது.
3. இன்று உணவு ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும்.
4. பிறருக்கு உதவாவிட்டாலும் தீங்கு செய்துவிடக்கூடாது.
வருத்தினி ஏகாதசி என்பது மக்கள் ஒன்று கூடி, இந்த விரதத்தை இருந்து மிகுந்த பக்தியுடன் விஷ்ணுவை வழிபட வேண்டிய நாளாகும்.



Click it and Unblock the Notifications